பூங்கொடி 13  – கவிஞர் முடியரசன்: அடிகளார் அறிவுரை

(பூங்கொடி 12  – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை- தொடர்ச்சி) பூங்கொடி அடிகளார் அறிவுரை மாதே! பிறப்பும் மாய்வும் இயற்கை 80யாதே முயலினும் தடுத்திடல் அரிதே’ பெறலருங் கொழுநன் பிணியால் மாண்டிலன் பிறரெவ ரும்பெறாப் பெருநிலை பெறவே ஆருயிர் ஈங்கனன் அவனேர் வீரன்; வீரப் பெருமகன் விடுபணி தொடர்ந்து 90 புரிந்தனி ராயின் பொருந்திய துயரம் முறிந்திடும்; அவனுளம் நிறைந்திடும் ஆதலின் முயன்றுறு செல்வம் முத்தமிழ்க் கல்வி உயர்ந்திட உதவுக, உழைப்பும் நல்குக, உழைப்பினை உதவுக கோவிலில் தமிழொலி குடிபுக வேண்டி 95 மேவிய…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  814-821

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 – 813– தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 814-821 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 814. Press – எழுத்தகம் இவ்வெளியீட்டைத் தமது போலெண்ணித் தமது எழுத்தகத்தில் (அச்சுக்கூடம்) பதிப்பிட்டுதவிய தோழர்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 51 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2 – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2 பிள்ளையவர்களுடைய மாணாக்கர் கூட்டத்தில் நாமும் சேர்ந்துவிட்டோமென்ற நினைப்பு எனக்கு ஒருவகையான பெருமிதத்தை உண்டாக்கியது. அன்று இரவு நானும் என் தந்தையாரும் ஆலயத்திற்குச் சென்று சிரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் தரிசித்து வந்தோம். இராத்திரி முழுதும் எனக்குத் தூக்கமே வரவில்லை. என் உள்ளத்தில் பொங்கிவந்த சந்தோச உணர்ச்சியினால் அமைதியில்லாமல் பலவகையான காட்சிகளைக் கற்பனை செய்து பார்த்தேன். “இனி…

ஊரும் பேரும் 47 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் 2

(ஊரும் பேரும் 46 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் – தொடர்ச்சி) ஊரும் பேரும் கோயிலும் வாயிலும் 2 இளங்கோயில் தொடர்ச்சி    சித்தூர் நாட்டில் இக் காலத்தில் திருச்சானூர் என வழங்கும் ஊரில் ஈசனார் அமர்ந்தருளும் இடம்  இளங்கோயில் என்பது சாசனங்களால் விளங்குகின்றது. திருவேங்கடக் கோட்டத்துக் கடவூர் நாட்டுத் திருச்சொகினூரில் உள்ள இளங்கோயிற் பெருமான் என்பது சாசன வாசகம்.9 இவ்வூரின் பெயர் திருச்சுகனூர் என்றும், சித்திரதானூர் என்றும் சிதைந்து வழங்கும்.10  ஆலக்கோயில்      தொண்டை நாட்டில் ஆலக்கோயில் எனச் சிறந்து விளங்கும்ஆலயங்கள் இரண்டு…

தமிழ் வளர்த்த நகரங்கள் 4. – அ. க. நவநீத கிருட்டிணன் : தமிழ் வளர்த்த சங்கங்கள் 1/2

(தமிழ் வளர்த்த நகரங்கள் 3. – அ. க. நவநீத கிருட்டிணன் :. தமிழும் குமரகுருபரரும்-தொடர்ச்சி) அத்தியாயம் 2. தமிழ் வளர்த்த சங்கங்கள் தமிழ்வளர்த்த நாடும் நகரும் தொன்மையும் தூய்மையும் இனிமையும் வளமையும் ஆகிய கலங்களால் தன்னேரிலாது விளங்கும் தமிழைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்து வளர்த்த காவலர் பாண்டிய மன்னர்களாவர். தமிழகத்தையாண்ட முடிவேந்தர் மூவரும் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் பேணிவந்தனராயினும் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாகும். அதனால் பாண்டிய நாட்டைத் ‘தமிழ்ப் பாண்டி நாடு’ என்றும், அந்நாட்டின் தலைநகராகிய மதுரையினைத்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 52 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 2/3

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 51 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 1/3 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 2/3 ஆங்கிலம் இன்று உலகப் பொது  மொழியாகக் கருதப்படும் நிலையை அடைந்துள்ளது. ஆங்கிலேயரை இந் நாட்டினின்றும் விரட்டியவர்கள்கூட ஆங்கிலத்தை விடமாட்டோம் என்று உறுதிபூண்டுள்ளனர். இந்தியர்க்கு ஆங்கிலமே கண்ணும் காதும் என்று கருதுகின்றனர் பலர். உலக மக்களில் பத்தில் ஒரு பகுதியினர் ஆங்கிலத்துக்கு உரியவராய் இருக்கின்றனர். . (English – speaking people constitute about one tenth of the world’s…

பூங்கொடி 12  – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை

(பூங்கொடி 11  – கவிஞர் முடியரசன்: வள்ளி குறிக்கோள் வாழ்வினள்- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை வடிவேல் படுகொலை ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர், நிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு பகுத்தறி வூட்டும் பகலவன் ஆவர் ; 70 சொல்லின் செல்வர், சோர்விலர், தொண்டர், அல்லும் பகலும் ஆருயிர்த் தமிழே வெல்லும் வகையால் வீரம் விளைத்தவர்; நல்லவர் இவரை நரிக்குணம் விஞ்சிய கொல்லும் பகைக்குணம் கொண்டோர் ஒருசிலர் 75 தூண்டுதல் செய்யத் துணிவுடன் கூடி நீண்ட புளிமரக் கிளைதனில் நேயரை அந்தோ தூக்கி ஆருயிர்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 – 813

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 797-807 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 – 813 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 808. புட்பாவதி – மலர் முகத்தம்மையார் (1938) பேராசிரியர் மயிலை. சிவமுத்து அவர்களுக்கு முன்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2) பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2 பரீட்சை இவ்வாறு எங்கள் வரலாற்றை அறிந்துகொண்ட பின்பு அக்கவிஞர் பெருமான் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதாவது ஒரு பாடலைச் சொல்லும்” என்றார். அந்த மகாவித்துவானுக்கு முன், காட்டுப்பிராந்தியங்களிலே தமிழறிவைச் சேகரித்துக்கொண்ட நான் எவ்வளவு சிறியவன்! எனக்குப் பாடல் சொல்லத் தைரியம் உண்டாகவில்லை. மனம் நடுங்கியது. உடல் பதறியது; வேர்வை உண்டாயிற்று. நாக்கு உள்ளே இழுத்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் இவ்வாறு…

ஊரும் பேரும் 46 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும்

(ஊரும் பேரும் 45 : இரா.பி.சேது(ப்பிள்ளை): தலமும் கோவிலும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 46 கோயிலும் வாயிலும் மாடக்கோயில்     தமிழகத்தில் ஈசனார்க்குரிய கோயில்கள் எண்ணிறந்தன. அவற்றுள் மன்னரும் முனிவரும் எடுத்த கோயில்கள் பலவாகும். சோழ நாட்டை யாண்ட செங்கணான் என்னும் கோமகன் “எண் தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்தான்” என்று திருமங்கையாழ்வார் கூறிப் போந்தார். அம் மன்னன் எடுத்த திருக்கோயில்களைப் பற்றிய சில குறிப்புகள் தேவாரத்தில் உண்டு. தஞ்சை நாட்டைச் சேர்ந்த நன்னிலத்தில் உள்ள பெருங்கோயில் அவன் செய்ததென்று சுந்தரர் தெரிவிக்கின்றார்.1…

தமிழ் வளர்த்த நகரங்கள் – அ. க. நவநீத கிருட்டிணன் 3. தமிழும் குமரகுருபரரும்

(தமிழ் வளர்த்த நகரங்கள் 2. : தன்னேரிலாத தமிழ் – தொடர்ச்சி) தன்னேரிலாத தமிழ் தமிழும் குமரகுருபரரும் நெல்லை நாட்டின் தெய்வக் கவிஞராகிய குமரகுருபரர் தாம் பாடிய முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழில் நம் மொழியின் இனிமையைத் தித்திக்கப் பேசுந்திறம் தமிழர் சித்தத்தை இன்பவெள்ளத்தில் ஆழ்த்துவதாகும். முத்தமிழ்க் கடவுளாகிய முத்துக்குமரனின் செங்கனிவாயில் பசுந்தமிழின் நறுமணம் கமழ்கின்றதாம். அம்முருகவேளும் சங்கத்தில் புலனாக வீற்றிருந்து தமிழை ஆய்ந்தான் என்பர். ஆதலின் அவன் சங்கப் புலவர்கள் வகுத்தமைத்த துங்கத் தமிழ் நூல்களைத் திருவாயால் ஓதிய அருளாளன் ஆவான். அவர்கள் வகுத்த…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 51 : அத்தியாயம் 11 தமிழ் மறுமலர்ச்சி 1/3

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 50 : பழந்தமிழும் தமிழரும் 10  தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 11. தமிழ் மறுமலர்ச்சி   தமிழ் என்று தோன்றியது என்று காலவரையறை செய்ய முடியாது; அது உலக மொழிகளின் தாய் என்று சொல்லக்கூடியது; இந்திய மொழிகளின் தாய் என்று எளிதே  நிலைநாட்டப்படும் பெருமையை உடையது. இனிய இலக்கியங்களையும் பண்பட்ட இலக்கணத்தையும் பெற்றிருப்பதனால் மட்டும் சிறப்புடையது அன்று. மொழி என்ற அளவிலும், அதனின் இனிமைப் பண்பாலும், எளிமை அமைப்பாலும் கற்போர் உள்ளத்தைக் கவரக் கூடியது. தமிழைக் கற்கத் தொடங்கி அதன் சுவையை…