பூங்கொடி 9  – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை

(பூங்கொடி 8  – கவிஞர் முடியரசன்: பழியுரை காதை: வஞ்சியின் கவலை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை அருண்மொழியின் இசைப்புலமை  செவ்விய இசைநூல் இவ்வுல குள்ளன அவ்வள வும்பயில் அறிவினள்; பிறமொழி 20 இசைபல முயன்று வசையற வுணர்ந்து நசையுடன் ஆய்ந்து நம்தமிழ் இசைக்கே ஆக்கம் தந்தவள்; அரியதோர் இசைப்புனல் தேக்கிய கலைக்கடல்; தெள்ளிய இசையால் உலகை வென்றவள்; உயர்ந்தவள் குரலால் 25 குழலும் யாழும் கொட்டம் அடங்கின; பாடும் முறையாற் பாவை பாடுவள்; ஆடாள், கோணாள், அங்கக் குறும்புகள் நாடாள், அந்த நல்லிசைச்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  787 – 790

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  776 – 786 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 787- 790 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 787. Loudspeaker – ஒலிபெருக்குங் கருவி திரு. பெ. இராம. இராம. சித. சிதம்பரம்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 47 : மாயூரப் பிரயாணம் 1/2

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 46 : பெரும்புலியூர் தொடர்ச்சி) என் சரித்திரம் – பாகம் 2 26. மாயூரப் பிரயாணம் 1/2 செங்கணத்தில் நாங்கள் பிரமோதூத வருlம் மார்கழி மாதமுதல் பங்குனி வரையில் (1870 திசம்பர் முதல் 1871 மார்ச்சு வரையில்) இருந்தோம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் நாகப்பட்டின புராணம் அரங்கேற்றிப் பூர்த்தி செய்துகொண்டு நாகபட்டினத்திலிருந்து மீண்டும் மாயூரத்திற்கே வந்துவிட்டார்களென்று அங்கே கேள்வியுற்றோம். அப்புலவர்பிரானிடம் படிக்கப் போகிறோமென்ற எண்ணம் என் மனத்தில் ஒரு புதிய கிளர்ச்சியை உண்டாக்கியது. அவர்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருந்த செய்திகளெல்லாம்…

ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும்

(ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) தென்னார்க்காட்டுக் கடலூர் வட்டத்தில் திருத்தளூர் என வழங்கும் திருத்துறையூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தவநெறி என்பது சாசனத்தால் அறியப்படுகின்றது.30 ஊரும் பேரும் 43 அட்டானமும் அம்பலமும்     துறையும் நெறியும் கோயிற் பெயர்களாக அமைந்தவாறே அட்டானம், அம்பலம் என்னும் ஆலயப் பெயர்களும் உண்டு. வீரட்டானம்     தமிழ் நாட்டில் வீரட்டானம் என்று விதந்துரைக்கப்படும் சிவப் பதிகள் எட்டு என்பர். “அட்டானம் என்றோதிய நாலிரண்டும்” என்று திருஞான சம்பந்தர் அவற்றைக் குறித்துப் போந்தார். கெடில…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 48 : பழந்தமிழும் தமிழரும் 8

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 47 : பழந்தமிழும் தமிழரும் 7 – தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 8 சிறந்தோரைப் பாராட்டிப் புகழ வேண்டா என்று கூறவில்லை. வியத்தல் வேண்டா என்றுதான் கூறுகின்றார். வியத்தல் என்றால் அளவுக்கு மீறி இல்லாத சீர்மைகளை இருப்பதாகப் புகன்று உயர்த்துதல். அதுதான் வேண்டா என்கிறார். அதனினும் ஒருவரைப் பதவியில் புகழில் பொருளில் சிறியவரென்று இகழ்தல் மிகக் கொடியது. ஆகவே இகழ்தலும் வேண்டா என்கிறார். வியந்து போற்றினாலும் போற்று; ஆனால் இகழ்ந்து விடாதே என்பதுதான் அவர் அறிவுரை. தம் இயல்பு கூறுவார்…

பூங்கொடி 8  – கவிஞர் முடியரசன்: பழியுரை காதை: வஞ்சியின் கவலை

(பூங்கொடி 7  – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக- தொடர்ச்சி) 2. பழியுரை காதை வஞ்சியின் கவலை முத்தமிழ் காக்கும் முதற்பணி பூண்ட நத்தும் வடிவேல் நன்மணம் புணர்ந்த பத்தினித் தெய்வம் பாங்குயர் அருண்மொழி இத்தரை உய்ய ஈன்றருள் மகளாம் 5 தத்தை பூங்கொடி தாயொடு மங்கலத் தைத்திரு நாளில் தமிழிசை வழங்க வாராத் துயரால் மயங்கிய வஞ்சி சோரா  நின்றனள் ; தன்மகட் டோழி தேன்மொழி யைக்கூஉய்த் திருநகர் கூறும் 10 தீமொழி அருண்மொழிக் குரையெனச் செப்பினள், தேன்மொழி செல்லல் அவ்வுயிர்த் தோழியும் அருண்மொழி…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  776 – 786

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  770- 775 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  776 – 786 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 776. சப்தாலங்காரம்          –              சொல்லணி 777. அர்த்தாலங்காரம்      –              பொருளணி 778. உபமாலங்காரம்        –             …

உ.வே.சா.வின் என் சரித்திரம் 46 : பெரும்புலியூர்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 45 – (அத்தியாயம் 25) : விருத்தாசல (ரெட்டியா)ர் தொடர்ச்சி) பெரும்புலியூர் பெரும்புலியூருக்கு இருவரும் சென்றோம். அந்த (இ)ராயரைப் பார்த்தோம். அவர் எங்களைக் கண்டு மிகவும் சந்தோசமடைந்தார். (இ)ரெட்டியாரைப் பற்றி அவர் முன்பே கேள்வியுற்றிருந்தவராதலால் அவர் தம் வீட்டுக்கு வலிய வந்ததை ஒரு பெரிய பாக்கியமாக எண்ணி உபசரித்தார். தமிழானது எங்கள் மூவரிடையுமுள்ள வேறுபாடுகளை மறக்கச் செய்து ஒன்றுபடுத்தியது. நெடுநேரம் தமிழ் சம்பந்தமான விசயங்களையே பேசிக் கொண்டிருந்தோம். “நீங்கள் நல்ல காரியம் செய்கிறீர்கள். இந்தப் பிள்ளைக்குப் பாடம் சொல்லி வருவது…

ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி

(ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி கடம்பந்துறை சைவ உலகத்தில் ஆன்ற பெருமை யுடையது ஆவடுதுறை. தேவாரப் பாமாலை பெற்றதோடு திருமந்திரம் திருஆவடுதுறை அருளிய திருமூலர் வாழ்ந்ததும் அப்பதியே இன்னும், திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் சிவகதியடைந்ததும் அப்பதியே. இத்தகைய ஆவடு துறை, பேராவூர் நாட்டைச் சேர்ந்தது என்று சாசனம் கூறுகின்றது. பசுவளம் பெற்ற நாட்டில் விளங்கிய அப்பதியினை “ஆவின் அருங் கன்றுறையும் ஆவடுதண்துறை” என்று போற்றினாா் சேக்கிழாா்….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 47 : பழந்தமிழும் தமிழரும் 7

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 46 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 7   ஆனால், இன்றைய நிலைமை என்ன? பிசிராந்தையார் கூற்றுக்கு மாறுபட்டன்றோ இருக்கின்றது. இளமையிலேயே நரைபெற்று முதுமையடைந்து விடுகின்றோம். ஏன்? யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல் யாங்கா கியர் என வினவுதி ராயின்? ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்; பூண்டநம் பண்பு போலிய தாகின்று நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில் பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்; தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை; ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும் அயல்மொழி தன்னில்…

பூங்கொடி 7  – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக

(பூங்கொடி 6  – கவிஞர் முடியரசன்: விழாவயர்காதை தொடர்ச்சி) ஒற்றுமை பரப்புக  எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை தத்தங் கொள்கை தவிர்த்து நாடும் மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே வழியெனக் கருதி வழங்குக பேருரை முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும் சிறுசிறு பகையைச் சிங்தைவிட் டகற்றுக ஓரினம் காமென உன்னுக பெரிகே. வாழிய வாழிய காரினம் மழையைக் கரவா தருள்க பசிப்பிணி வறுமை பகைமை நீங்கி வசைக்கிலக் கிலதாய் வளர்க அரசியல் செல்வங் கல்வி சிறந்துமிக் கோங்குக வாழிய பொங்கல் வாழிய திருநாள்’  என்னுமிவ்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 45 – (அத்தியாயம் 25) : விருத்தாசல (ரெட்டியா)ர்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் – அத்தியாயம் 25 செங்கணத்தில் வாசம் தொடர்ச்சி) விருத்தாசல (ரெட்டியா)ர் நான் விருத்த இலக்கணம் படித்த காலத்தில் சீர்கள் ‘அளவொத்து’ இருக்க வேண்டுமென்று தெரிந்துகொண்டேன். ஓரடியில் ஆறு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஆறு சீர்களே இருக்க வேண்டுமென்றும், ஏழு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஏழு சீர்களே இருக்க வேண்டுமென்றும், இவ்வாறே சீர்களின் எண்ணிக்கை நான்கடிகளிலும் சமமாக இருக்க வேண்டுமென்றும் நினைத்தேன். ‘அளவொத்தல்’ என்பதற்கு இதற்கு மேலும் ஓர் அர்த்தம் உண்டென்பதை அதற்கு முன் நான் அறிந்துகொள்ளவில்லை. அதைப்…