ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு     28: புலவர் கா.கோவிந்தன் : அசோகனும் தமிழ்நாடும்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு     27: சந்திரகுப்புதனும் தென் இந்தியாவும்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு . . . .  அசோகனும் தமிழ்நாடும் ஆனால், அசோக வருத்தனன் காலத்திலும், தமிழ்நாடு, மகத ஆட்சி எல்லைக்கு வெளியிலேயே இருந்துவந்துள்ளது. மக்களின் நோய் தீர்க்கவும் மாவினங்களின் நோய் தீர்க்கவும், அவன் நிறுவிய இரு நிறுவனங்கள் குறித்துப் பேசும் , அவனுடைய இரண்டாவது பாறைக்கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்திரிய புத்திர, கேரள புத்திரர்களை “அந்த” அஃதாவது அண்டை நாட்டவர் அல்லது எல்லைப் புறத்தில் உள்ளார், என்றே குறிப்பிட்டுள்ளான். அவனுடைய 13ஆவது…

சனாதனம் என்பது நிலையானதுதானா?

(சனாதனம் – பொய்யும் மெய்யும் – பதிப்புரை – தொடர்ச்சி) சனாதனம் என்பது நிலையானதுதானா? நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை, கடை. என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 331) இதன் மூலம், “நிலைத்திருத்தல் அல்லாதனவாகிய பொருள்களை, நிலைத்து இருப்பன என்று நினைக்கின்ற அற்ப அறிவைக் கொண்டு இருத்தல் இழிநிலை” என்கிறார் திருவள்ளுவர். இத் திருக்குறளுக்கு விளக்கமாக,  மாதவச் சிவஞான யோகிகள் பாடிய, “சோமேசர் முதுமொழி வெண்பா” என்னும் நூலில்  இத்திருக்குறளை விளக்கிப் பின்வரும் பாடல் வருகிறது. ஆக்கையும் ஆயிரத்துஎட்டு அண்டங்களும் நிலையாத் தூக்கி…

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?

(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்க௪. தமிழுக்குச் சிறை? இன்று வாழும் தமிழ் மக்களுக்குத் தாங்கள் பயன்படுத்தும் சொற்கள் தமிழ்ச்சொற்களா? வேற்றுமொழிச் சொற்களா? எனத் தெரியாது. ஏனெனில், இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆரியம் புகுந்து, தன் மொழி சமற்கிருதத்தைத் தமிழுடன் கலந்து எழுதி, தமிழும், வடமொழியும் (சமற்கிருதம்) கடவுளின் (சிவனின்) இருவிழிகள் என்றும் சமற்கிருதம் “தேவபாசை” என்றும் கதைகட்டி விட்டனர். இதுகொண்டு தமிழ்மக்கள் மயங்கி தமிழ்ச் சொற்களை விட்டு வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கலக்கத்…

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு     27: புலவர் கா.கோவிந்தன்: சந்திரகுப்புதனும் தென் இந்தியாவும்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    26 : சேர, சோழ, பாண்டிய அரசுகள் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு . . . .       கி.மு. நான்காம் நூற்றாண்டில், வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையிலான வாணிகம், எப்போதும் இருந்திராத அளவு மிகப்பெரிய அளவினை அடைந்திருந்தது. இது குறித்துக் கெளடில்யர் கூறியன அனைத்தையும், அப்படியே முழுமையாகத் தருகின்றேன். “நிலவழி நெடுஞ்சாலையைப் பொறுத்தமட்டில், இமாலயத்திற்குச் செல்லும் வழி, தட்சிண பரதத்திற்குச் செல்லும் வழியினும் மேலானது என்று கூறுகிறார் ஆசிரியர். வெகு தொலைவில் உள்ள முன்னதிலிருந்து…

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா?

(௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் க௩. தமிழ் வாழுமா? வளருமா?    க.  தமிழ் மக்களின் பேச்சிலும், எழுத்திலும் தமிழில்லை!    உ. தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை!    ௩. தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் பல தமிழில்       இல்லை!    ௪. தமிழர் எழுதும் நூல்கள் தமிழில் முழுமையாக       எழுதப்பெறவில்லை.    ரு. தமிழகப் பாடநூல் நிறுவனத்தார் முதல் வகுப்புக்குரிய       தமிழ்ப்பாட நூலில் வடமொழி ஒலியெழுத்துகளாம்        கிரந்த எழுத்துகளை (ஸ, ஷ, ஹ,…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்

( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்- -தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை கோமகன் நிகழ்ந்தன கூறல்           இழுக்கல் நிலத்திடை இடர்ப்பட் டேகுவோன்            வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென  135           வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட் பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் ததூஉம், தாங்கா வேட்கை தாங்கவோன் றன்னைக்                கண்டு வெரீஇக் கற்றோர் பலர்தாம்       140           மண்டும் படிப்பகம் மங்கைபுக் கதூஉம், மெல்லியல் அல்லியை…

உ.வே.சா.வின் என் சரித்திரம் : 128- அத்தியாயம்-87: கவலையற்ற வாழ்க்கை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் : 127 – சிலப்பதிகார ஆராய்ச்சி – தொடர்ச்சி) என் சரித்திரம் கவலையற்ற வாழ்க்கை நான் வேலையை ஒப்புக்கொண்டபோது கும்பகோணம் கல்லூரியில் உயர்நிலைப்பள்ளி வகுப்புக்களும் இருந்தன. அவ் வகுப்புக்களுக்கு திரு தி.கோ.நாராயணசாமி பிள்ளை என்பவர் தமிழ்ப் பாடம் சொல்லி வந்தார். கல்லூரி வேலை தானாக என்னைத் தேடி வந்தாலும் அதனைப் பெறுவதற்குப் பலர் முயற்சி செய்தார்களென்ற செய்தியை நான் அறிந்த போதுதான் அவ்வேலையின் அருமை எனக்குப் புலப்பட்டது. பங்களூர்க் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளையும், இராமாயண வெண்பாவும்…

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    26 : புலவர் கா.கோவிந்தன்: சேர, சோழ, பாண்டிய அரசுகள்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 25 : காத்தியாயனரும் பதஞ்சலியும் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    உலகம் தோன்றிய நாள்தொட்டு இருந்த சேர சோழ பாண்டியர் இதைப் பண்டைக் காலத்திய மதுரை பற்றிய நாம் அறிந்தனவற்றோடு ஒன்றுபடுத்திக் காணும் முயற்சியில், வெற்றி காணமாட்டாதே, அறிவுத்திறன் பெருமளவில் பாழ்படுத்தப்பட்டது. முன்பே குறிப்பிடப்பட்ட எறும்பு மனிதர் பற்றிய, அவருடைய வேறு ஒரு கட்டுக்கதை போல (Macrindle. Ancient India as described by Megasthenes and Arrian. Page : 144) இது, மெகத்தனிசு அவர்களின், எதையும்…

௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! – வி.பொ.பழனிவேலனார்

(௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்? – புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்தமிழ் ௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது. அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும். இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும். பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது. மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது. தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது.தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம்,…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்

( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா? -தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை வஞ்சியின் வஞ்சினம்           பிணைவிழி மாதின் பெறலரும் இளமை அணையிலாப் புனலென ஆகிட ஒவ்வேன்; இவள்நலம் விழையும் இளவல் கோமகன்        தவள மாளிகை சார்ந்தவற் கொண்டு 95           குறளகம் நீக்கிக் கொணர்வேன் அவளை; பெருமகன் தன்பால் பேதையைப் படுத்தல் அறமெனக் கொண்டேன், அதுமுடித் தமைவேன்; படுத்தே னாயின் பாழுயிர்ச் சுமையை            விடுத்தே அமைவேன் வெற்றுரை அன்’றெனத்         100 —————————————————————…

உ.வே.சா.வின் என் சரித்திரம் : 127 – சிலப்பதிகார ஆராய்ச்சி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் : 126 : விடுமுறை நிகழ்ச்சிகள்-தொடர்ச்சி) என் சரித்திரம் சிலப்பதிகார ஆராய்ச்சி நான் வேலையை ஏற்றுக் கொண்ட வருடத்தில் சிலப்பதிகாரத்தில் கானல்வரி முதல் நான்கு காதைகள் பாடமாக வந்திருந்தன. அதைக் கோடை விடுமுறை முடிந்தவுடன் பாடம் சொல்ல வேண்டியவனாக இருந்தேன். “இவர் சிலப்பதிகாரத்தை எப்படிப் பாடம் சொல்லப் போகிறார்?” என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்ததாக என் காதில் பட்டது. ஆகவே அதைக் கூடிய வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயம் செய்து கொண்டேன். இருந்த அச்சுப் பிரதியின் உதவி…

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    25 : புலவர் கா.கோவிந்தன்: காத்தியாயனரும் பதஞ்சலியும்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 24 : புலவர் கா.கோவிந்தன்: சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    8. வடக்கும் தெற்கும் கி.மு. 500 முதல் கி.மு.1 வரை காத்தியாயனரும் பதஞ்சலியும் பாணினியின் “அட்டாத்தியாயீ’ குறையுடையது எனக் கண்டு, பாணினியின் விதிமுறைகளுக்குத் துணையாக வாத்திகம் அஃதாவது உரைவிளக்கம் எழுதிய காத்தியாயனர், பாணினிக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரும்பாலும் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தார். தமிழ்ப்பேரகராதி துணை ஆசிரியர் திருவாளர். பி.எசு. சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தந்த ஒரு குறிப்பின்படி காத்தியாயனார்,…