பிராமணனைமட்டும் சனாதனம் உயர்த்திக்கூறுவதாகத் தவறாகக்கூறுகிறார்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 35-36 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 37 37.பிராமணனைமட்டும் சனாதனம் உயர்த்திக்கூறுவதாகத் தவறாகக்கூறுகிறார்கள் என்கிறார்களே! பின்வரும் சனாதனக் கருத்துகளைப் பாருங்கள். இவற்றைப் படித்த அறிவுள்ள எவரும்  மேற்குறித்தவாறு பொய்யுரை கூற மாட்டார்கள். “பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்” – (மனு 9. 317) “பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூசிக்கத் தக்கவர்கள் ஆவார்கள்.” (மனு  9.  319).  “பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்.” (மனு 9….

33.“சனாதனம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதைத்தான் விவரிப்பதாகக் கிருட்டிணசாமி கூறுகிறாரே!+34.சனாதனத்தை அனைவரும் போற்ற வேண்டும் என்கிறார்களே!-இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 31 – 32-தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 33-34 சூத்திரன் மன்னனாக இருக்கும் நாட்டில் வசிக்கக் கூடாது.. .. ..சண்டாளர்கள் வசிக்கும் நாட்டிலும் வசிக்கக் கூடாது. (மனு 4.61)  சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும். (மனு 8. 22) சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். மனு 11. 13) நற்பண்பான(யோக்கியமான) அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது. (மனு  11. 20) சனாதனம் கூறும் இவற்றைத்தான்…

சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை-ஆளுநர்  இரவி;பெண்களைப் பரத்தையர் என்று  திருவமாவளவன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்-குட்பூ – சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை என்கிறாரே ஆளுநர் இரவி  – தொடர்ச்சி) சூத்திரனுக்குத் தாழ்வான பெயர் சூட்டுக; பிராமணனுக்கு மங்களத்தையும்; சத்திரியனுக்கு வலிமையையும் வைசியனுக்குப் பொருளையும்; சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டும். – (மனு 2 . 31, 32) அப்படிப் பெயர்  சூட்டுவதற்காக உயர்வு தாழ்வுப் பெயர் முடிவுகளையும் மனு கூறுகிறது. “பிராமணனுக்குச் சருமாவென்பதையும்; சத்திரியனுக்கு வருமம் என்பதையும்; வைசியனுக்குப் பூதி யென்பதையும் சூத்திரனுக்குத் தாசனென்பதையும் தொடர்பேராக இடவேண்டியது.- (மனு  2.32) வருண வேறுபாட்டை வரையறுத்து ஒரு பிரிவினரை மிக…

சனாதனத்தில் பெண் அடிமைத்தனத்திற்கும் உயர்வு தாழ்விற்கும் இடமில்லையாமே? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் பொய்யும் மெய்யும்: 22-23 * தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்:  24-25 “பெண் தன் விருப்பப்படி வாழக்கூடாது. சிறு வயதில் தந்தைக் கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது” (மனு 5. 148). “கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலைபவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனாயினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!” (மனு 5.154) கடவுளாகச் சொல்லப்படும் இராமன், பெண்களை…

பிராமணனை உயர்த்திச் சொல்லவில்லை சனாதனத் தருமம் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 22-23 சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, சீவனத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனை யடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்(மனு 10. 122). பிராமணன் கூடவே இருந்து அவனுக்குப்பணி விடை செய்ய வேண்டும் என்றும் பிராமணனைப் பிற வருணத்தார் தொழ வேண்டும் என்றும் கூறுவது பிராமணனை உயர்த்திச் சொல்வதாகாதா? இதனை எப்படி ஏற்க முடியும். “ஓர் ஊரில் எல்லாருக்கும்…

பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? –  இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் பொய்யும் மெய்யும்: 17- 19 – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 20-21 நால்வகைச் சாதியிந் நாட்டில் நீர் நாட்டினீர் மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால்  என்றும் குலமும் ஒன்றே குடியும் ஒன்றே இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே என்றும் கபிலர் அகவல் கூறுவது சனாதனத்திற்கு எதிர்ப்பாகத்தானே. எனவே, தொடர்ச்சியாகச் சனாதனம் இருப்பதாகப் பெருமை பேசுநர், தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு இருப்பதையும் உணர்ந்து அடங்கி ஒடுங்க வேண்டும். பூணூல் அணிந்த பிராமணர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதற்குக் காவல் துறையும் நீதித்துறையும் ஊடகங்களுமே சான்றாகும்….

நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு. சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் பொய்யும் மெய்யும்: 16 – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 17- 19 17.    நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு. சரியா? o     நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றளவும், ஆசாரி, செட்டியார், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள், நல்ல / பொல்லா நாட்களில் பூணூல் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று சொல்கிறார்களே!      சடங்குகளைப் பிராமணன்தான் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது சடங்கிற்குரியோர் பூணூல் அணிய வேண்டும் எனச் சனாதனம் வலியுறுத்துவதால்,…

சனாதனத்தின்படிப், பூணூல் பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(வருணங்கள், செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்) சனாதனம் பொய்யும் மெய்யும்: 16 ? சனாதனத்தின்படிப், பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுவதில்லை. பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே!      சிற்பிகள் முதலானோர் பூணூல் அணிவதும் உண்மைதான். அதுபோல் திருமணம் அல்லது பிற சடங்குகளின் பொழுது எல்லாச் சாதியினரும் பூணூல் அணிவது உண்மைதான். அஃதாவது சடங்குகளின் பொழுது பிராமணன் மட்டுமே தெய்வத்தை வணங்குவதற்கும் வழி படுவதற்கும் உரியவன் என்று சொல்லி அனைவருக்கும் பூணூல் போட்டுவிடுவதும் உண்மைதான். இதன் மூலம் கடவுளை வேண்டவும் பிராமணனே…

வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை . அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(“இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள் – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 14-15 14.     வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை . அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா? ?       இந்த வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை. அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை. வேலை தெரிந்தவர்கள், தங்களுடைய தொழில் திறமையைத், தங்களது குடும்பத்திற்கு மட்டுமே சொல்லிக் கொடுத்ததால், அந்தத் தொழில்கள் குலத் தொழில்களாக மாறின. – இவ்வாறு இரங்கராசு பாண்டே விளக்கியுள்ளது ஏற்புடைத்தாகுமா?        இவ்வாறு…

“இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்

(தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 10-13 10. “இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்.        ஆரியத்தின் வழக்கமான பொய்களுள் இதுவும் ஒன்று. படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் எனக் கருதி இதை நம்பும் தமிழறிஞர்களே இதன் அடிப்படையில் தவறான கால ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுகிறார்கள். அப்படியிருக்கப் பாமரர்கள் இவற்றை நம்பாமல் எப்படி இருப்பார்கள். வால்மீகி இராமாயணத்தில் பட்டமேற்பிற்காக அயோத்திக்குத் திரும்பும் இராமன், தம்பி…

தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(எல்லாரும் சமம் என்பது சாத்தியமில்லை – சரியா?- தொடர்ச்சி) 5. இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் . . . . இந்த நிலத்தில்தான் சனாதன தருமம் உருவாகியது. இந்தத் தருமம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தரும இலக்கியங்கள் என்று பொருள்” என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருக்கிறாரே!  இது பொதுவாக ஆரியர்களின் வழக்கம். ஒன்றைப்பற்றிய தீய சக்தியை மக்கள் புரிந்து கொண்டால், அதனைச் சமாளிப்பதற்காக அதைப்பற்றிய இல்லாத நல்ல செய்திகளை இருப்பதாகப் பரப்புவர். அதுபோல்தான் இப்போதும். சனாதனத்திற்குரிய எதிர்ப்பு…

எல்லாரும் சமம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை எனச் சனாதனவாதிகள் கூறுவது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் என்பது நிலையானதுதானா? (தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 3. எல்லாரும் சமம் என்பது, எழுதவும் பேசவும் இனிப்பாக இருக்கும்; நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஒரே வண்டியில் பயணிப்பதால், உரிமையாளரும் ஓட்டுநரும் ஒன்றில்லை. – தினமலரின் சிந்தனைக் களத்தில் சானதனக் காவலாளி இரங்கராசு கூறிய செய்தியாகும்.- சரிதானா?  இஃது அனைத்துச் சாதியினரையும் சமமாகப் பார்க்கக் கூடாது என்பதற்குச் சொல்லப்படும் மறுப்பு விளக்கமாகும். பதவி முறையில் உள்ள வேறுபாடு நிலையானதல்ல. அப்பதவி மாறும் பொழுது அதுவும் மாறும். இன்றைய வண்டி ஓட்டுநர் நாளைய உரியமையாளராகலாம்….