அகல் விளக்கு – மு.வரதராசனார்: 47
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 46. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 19 தொடர்ச்சி மறுநாள் பெருங்காஞ்சியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சந்திரன்தான் எழுதினானோ என்று பார்த்தால், அவனுடைய கையெழுத்தே இல்லை. அவனுடைய தந்தையார் சாமண்ணா எழுதியிருந்தார். பிள்ளை வீட்டார் வந்து கற்பகத்தைக் கேட்பதாகவும், பிள்ளை எங்கள் கல்லூரியில் படிப்பதால் குணம் முதலியவை அறிந்து தெரிவிக்கும் படியாகவும் எழுதியிருந்தார். என் மனம் திகைப்பு அடைந்தது, அடுத்த வரியில் பிள்ளை பி.ஏ. படிப்பதாகவும் பெயர் மாலன் என்பதாகவும் குறித்திருந்ததைப் படித்தவுடன் என் அறிவும் மனமும்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 133 – 145 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 107- 132 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 133 – 145 133. இரத்தஇயங்கியல் பழங்கிரேக்கத்தில் haimo என்றால் குருதி/ இரத்தம் எனப் பொருள். Haemodynamics 134. இருப்பியல் Ontology – இருத்தலியல், இருப்பியல் மெய்மையியல், உணமையியல், இயல்வியல், உள்ளதன்இயல், இருப்பியல், தனி வளரியல் எனப்படுகின்றது. இவற்றுள் ஒர் உயிரியின் வாழ்க்கை வரலாற்றில் நடைபெறும் பல மாற்றங்களையும் ஆராயும் துறை ஆகிய தனி வளரியல் என்பது உயிரியலின் ஒரு பகுதி. ontologia என்னும்…
தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 31 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 32 3. மொழிபற்றிய சிந்தனைகள் மொழி (தொடர்ச்சி) (ஈ) தமிழ் மக்கள் என்னும் குழந்தைக்குத் தாய்ப்பால் என்னும் தமிழானது முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளருவதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில், தாய்ப்பாலில் சக்தியும் சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்குத் தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைப் பருகும், குழந்தை உருப்படியாக முடியுமா! தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்குப் பால் ஊறும்?…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 107- 132 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 79 – 106 இன் தொடர்ச்சி) ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 107- 132 107. இணைமுரண் இறையியல் Dialectical Theology 108. இணைவிய உளவியல் Association Psychology 109. இந்தியவியல் Indology 110. இயக்க இயல் Kinetics 111. மீ இயற்பியல் மேம்பூதிகம், அடிப்படைத் தத்துவம், அப்பாலைத் தத்துவம், அப்பாலையியல், இயங்கா வியல், இயல் கடந்த ஆராய்வு, மீ இயற்பியல், மீயியல், மீ இயல், அதீதவியல் எனப் பலவாறாகக் கூறுகின்றனர். அப்பாலை(Apalaí) என்பது பிரேசில் நாட்டில்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 22
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 21 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 9 “பூப்போலக் கண்கள் பூப்போலப் புன்சிரிப்புபூப்போலக் கைவிரல்கள் பூப்போலப் பாதங்கள்பூப்போலக் கன்னம் புதுமின் போல் வளையுமுடல்பார்ப்போர் செவிக்குத்தேன் பாய்ச்சும் குதலைமொழி“ — சது.சு.யோகி அந்த மழை இரவு பூரணியின் வாழ்வில் மறக்க இயலாத ஒன்று. அன்று அரவிந்தன் வெறும் மழையில் நனைந்து கொண்டு தன்னோடு வந்ததாக அவள் நினைக்கவில்லை. தன் உள்ளங் குழைத்து, நெக்குருகி நெகிழ்ந்து ஊற்றெடுத்துச் சுரந்த அன்பிலேயே நனைந்து கொண்டு வந்ததாகத்தான் தோன்றியது அவளுக்கு. அந்த…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 79-106 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 60-78 இன் தொடர்ச்சி) 79. ஆவியியல் pneûma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் மூச்சு. நடைமுறையில் ஆவி, தூய ஆவி என்று சொல்கின்றனர். pneûma என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மூச்சு. நடைமுறையில் ஆவி, தூய ஆவி என்று சொல்கின்றனர். spectrum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் தோற்றம், உரு. மாய உருவை – பேயுருவை இதன் மூலம் குறிக்கின்றனர். spook என்பதற்கு ஒல்லாந்தர் (Dutch) மொழியில் பேய் எனப் பொருள். fantosme என்னும் பழம்பிரெஞ்சுச்…
இராவண காவியம்:பாயிரம்: புலவர், அரசர்
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 11-15 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 16-20 16.ஒருது ளிகடு வுண்ணினும் பால் கெடும் பொருளை யாய்ந்தயற் புன்மையைப் போக்கியே பெருமை வாழ்வு பெறுதற் கவாவியே வருத னித்தமிழ் மக்களைப் போற்றுவாம். புலவர் 17.பலது றைத்தமிழ்ப் பாட்டு முரையுஞ்செய் துலக மின்புற வோதியுந் தாய்மொழிக் கலகி லாததொண்டாற்றிய முத்தமிழ்ப் புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம். 18.மூப்பி யன்றநம் முன்னவர் வாழ்விய லாப்ப யின்ற வொழுக்க மனைத்தையும் யாப்பி யற்படி நூல்செய் தனித்ததொல் காப்பி யப்பெரி யாரைக் கருதுவாம். வேறு…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 60-78 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 44-59 இன் தொடர்ச்சி) 60. அறியாப்பறப்பியல் பறக்கும் தட்டு ஆய்வியல், அறியா பறக்கும் பொருளியல், அறியாப் பறப்பியல் எனப்படுகிறது. Ufo என்பது unidentified flying object என்பதன் தலைப் பெழுத்துச் சொல்லாகும். இதன் பொருள் அடையாளம் அறியாத பறக்கும் பொருள் என்பதாகும். இதனைச் சுருக்கமாக அறியாப் பறப்பியியல் – Ufology எனலாம். Ufology 61. அறிவீட்டவியல் Gnoseology 62. அறுவடை பிந்திய நுட்பியல் Post Harvest Technology 63. அறை ஒலியியல் Room Acoustics 64. அற்பச் செய்தியியல்…
ஈழத்து நாடக இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 15 6. நாடகம் ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிாிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகங்களும் நவீன நாடகங்களாகும். மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஈழத்தில் நாடக…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 44-59 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 21-43 இன் தொடர்ச்சி) 44. அலையியல் Tidology 45. அல்பேனியரியல் Albanology 46. அழகெழுத்து வரைவியல் பிரெஞ்சுச் சொல்லின் மூலமான kállos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அழகு. + gráphō என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எழுத்து. எனவே, kalligraphía என்பது அழகான எழுத்தைக் குறிக்கிறது. Calligraphic graphics 47. அழிப்புநுட்பியல் Terminator Technology 48. அழுத்த இயங்கியல் Barodynamics 49. அளபுரு நீரியல் Parametric Hydrology 50. அளவறிபுவிவடிவியல் Quantitative Geomorphology 51. அலகியல் …
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 46
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 45. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 19 நான் எண்ணியது உண்மை ஆயிற்று. இரண்டு வாரங்கள் கழித்து ஆசிரியர் எனக்கு விடுதி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். சந்திரன் தேயிலைத் தோட்டத்தை அடியோடு மறந்துவிட்டான் என்றும், அங்கு உள்ளவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதவில்லை என்றும், முன்போல் பரபரப்பாக அலையாமல் வீட்டோடு ஒதுங்கியிருந்தாலும் கவலை இல்லாமல் இருக்கிறான் என்றும், தந்தையார் திருமணத்துக்காகப் பெண் பார்த்து வருகிறார் என்றும், ஆவணியில் தவறாமல் திருமணம் நடக்கும்போல் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். ‘ஏதாவது…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 21-43: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1-20 இன் தொடர்ச்சி) 21. அண்டஆண்டியல் அண்டநேரவியல், அண்டக் காலவியல் என்றும் குறிக்கின்றனர். நேரம் என்பது இந்த இடத்தில் பொருந்தாது. காலம் என்பதும் பொதுவாகப் பருவகாலத்தையே குறிப்பதால் அண்டத்திலுள்ள விண்மீன் முதலான உறுப்புகளின் ஆண்டுக் காலத்தைக் குறிப்பதால் ஆண்டியல் எனப் படுகிறது. Cosmochronology 22. அண்ட மின்னியங்கியல் Cosmic electrodynamics 23. அண்டப் பயணவியல் Cosmonautics 24. அண்டவியல் Universology அண்ட கோளங்கள், அண்ட கோளங்கள் பற்றிய ஆய்வு, படைப்பாய்வு நூல், மன்னல ஆய்வு…
