மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 19 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 8 “நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய்நினைப்பார்கள் மனத்துக்கோர் விபத்தும் ஆனாய்பொன்னானாய் மணியானாய் போகமானாய்பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னைஎன்னானாய் என்னானாய் என்னில் அல்லால்ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே“ – தேவாரம் “முக்கியமான காரியம் பூரணி. எங்கே, எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே. மறுக்காமல் என்னோடு உடனே புறப்படு…” என்று மங்களேசுவரி அம்மாள் வந்து கூப்பிட்டபோது அவளால் அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து சாமான்களை ஒழித்துப் புது…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 44
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 43. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி அந்த வழியே நடந்து சென்று அவர் காட்டிய தேநீர்க் கடையை கண்டுபிடித்தோம். அங்கே தேநீர் தந்து கொண்டிருந்த ஆட்களை உற்றுப்பார்த்தேன். இளைஞனாக இருந்த ஒருவனை அழைத்துச் சந்திரனைப் பற்றிக் கேட்டேன். “நான் இங்கே வந்து ஒருவாரம்தான் ஆச்சு, அதோ அவனைக் கேட்டுப்பாருங்கள்” என்று அவன் வேறொருவனைக் காட்டினான். அவனிடம் நானே சென்று மெல்லக் கேட்டேன். அவன் ஒன்றும் விடை கூறாமல், “நீங்கள் யார்? எந்த ஊர்?”, என்று என்னையே திரும்பக்…
தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள்: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 28 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 29 3. மொழிபற்றிய சிந்தனைகள் அன்பு நிறைந்த தலைவர் அவர்களே!அறிஞர் பெருமக்களே!மாணாக்கச் செல்வங்களே! இன்றைய மூன்றாவது பொழிவு பெரியாரின் ‘மொழி பற்றிய சிந்தனைகள்’ ஆகும். பேச்சைத் தொடங்குவதற்குமுன் வேறு சில செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன். இரண்டு சொற்பொழிவுகளில் தந்தைபெரியாரைப்பற்றி மின்வெட்டு போல சில குறிப்புகள் மட்டிலும் தான் உங்கட்குத் தெரிந்திருக்கும். இந்தப் பெரியார் யார்? என்பதை இன்றைய பொழிவில் விவரமாகச் சொல்வேன். (குறிப்பு 1) பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள் தந்தை பெரியார் பிறந்தது- அவதரித்தது…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 19
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 18. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 7 தொடர்ச்சி தூங்கிக் கொண்டிருந்த கமலாவுக்கு இடையூறில்லாமல் மேசை விளக்கைப் போட்டுக் கொண்டு அரவிந்தனின் ஏட்டுப் புத்தகத்தைப் பிரித்தாள் பூரணி. கடிகாரத்தின் டிக் டிக் ஒலியும், ‘ஙொய்’ என்று சுவர்க்கோழிக் குரலுமாகக் கமலாவின் வீட்டுக் கூடத்தில் இருள் அணையிட்டுக் கொண்டு நின்றது. மேசை விளக்கைச் சுற்றி மட்டும் வெண் நில மின்னொளி, மாவைக் கொட்டின மாதிரி பரவியிருந்தது. ஏறக்குறைய இரண்டரை மணி வரையில் அந்த மேசை விளக்கு அணையவில்லை. படிக்கப் படிக்க ஆச்சரியமாக இருந்தது…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 43
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 42. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி ‘பார்ப்பதற்கு நல்லபடி இருக்கிறாயே’ப்பா உனக்கு என்ன குறை, சொல். ஆங்கில மருத்துவரிடம் போனாலும், அவர்கள் உடனே தெரிந்துகொள்ளமாட்டார்கள். நம் உடம்பில் உள்ள குறை இன்னது என்று நாமே தெளிவாகச் சொன்ன பிறகுதான் ஆராய்ந்து மருந்து கொடுப்பார்கள். இல்லையானால் ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள், ‘முதலில் உன் உடம்புக்கு என்ன என்று சொல்’ என்று கேட்டேன். உடம்பில் சத்து எல்லாம் வீணாகிறது என்றான். ஏன் அப்படி என்றேன். தூங்கும்போது என்றான். உடனே…
பெரியார் குறித்துப் பெரியார்: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 27 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 28 6. பெரியார் பெரியார்: இதுகாறும் நான் கூறிவந்த பெரியார் யார்? அவரே கூறுகிறார். (1) நான் பகுத்தறிவுவாதி எனக்கு மதம் – கடவுள் – மொழி – நாடு-அரசு இவைபற்றியெல்லாம் கவலை இல்லை. யார் ஆட்சி புரிகின்றனர் என்பது பற்றியும் கவலை இல்லை. பகுத்தறிவோடு ஆட்சி செய்கிறார்களா என்பதுதான் முக்கியம் ஆகும். (2) பகுத்தறிவு ஆட்சி என்பது வேறு எந்தக் காரியங்களில் தங்கள் பகுத்தறிவைக் காட்டத் தவறினாலும் இளம் உள்ளங்களில் இம்மாதிரி கீழ்த்தரக் கருத்துகளை (புராண…
புலவர் குழந்தையின் இராவணகாவியம் – கதைச்சுருக்கம் தொடர்ச்சி
(இராவண காவியம் கதைச் சுருக்கம் தொடர்ச்சி) இராவண காவியம் தொடர்ச்சி சித்திரக் கூடத்தைவிட்டு இராமன் தமிழகத்தை அடைய ஆரியர் வரவேற்கச் சில நாளங்கிருந்து சரபங்கன் நிலையை யடைந் திருந்தனர். ஒரு நாள் முனிவர்கள் ஒன்று கூடி வந்து தமிழகத்தில் தாங்கள் தவவேள்வி செய்ய முடியாமல் கரன் தடுப்பதைக் கூறி அவனைக் கொன்று தங்களை வாழ்விக்கும்படி வேண்டினர். ராமன் அதற்கிசைந்து விடை பெற்றுச் சென்று முனிவர் இருக்கையில் தங்கித் தமிழ் கற்றும், வேள்வி செய்ய முனிவர்க்குதவியும், இரண்டகத் தமிழரை நட்பாக்கியும் பத்தாண்டினை அங்கே கழித்தனன்,…
ஈழத்துச் சிறுகதை இலக்கியம் – தொடர்ச்சி: மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 12 அத்தியாயம் 5. சிறுகதை (தொடர்ச்சி) 2 ஈழத்துச் சிறுகதையின் இரண்டாவது தலைமுறை 1940ஆம் ஆண்டுகளில் உருவாகியது. இக்காலத்தில் இலக்கிய ஆர்வம் உடைய ஓர் இளைஞர் குழு யாழ்ப்பாணப் பகுதியில் தோன்றியது. ஈழகேசாி இவர்களின் முதன்மை வௌியீட்டுக் களமாகவும் அமைந்தது. இவர்களுள் சிலர் ஒன்றிணைந்து, ‘மறுமலர்ச்சி’ என்ற ஒரு சஞ்சிகையையும் வௌியிட்டனர். அதைச் சுற்றி ஓர் இலக்கியக் குழுவாகவும் உருவாகினர், ஈழத்து முன்னோடி எழுத்தாளர்கள் இவர்களுக்கு ஆதர்சமாக அமைந்தனர். தமிழகச் சஞ்சிகைகளும் அவற்றில் வௌிவந்த…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 42
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 41. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 மாலனும் நானும் மறுபடியும் ஒரே வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம். மாலன் விடுதியில் முன் இருந்த இடத்தைவிட்டு, என் வரிசையிலேயே ஐந்தாவதாக உள்ள அறைக்கு வந்து சேர்ந்தான். பழையபடியே நாங்கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இடையே வேறுபாடுகளுக்கு இடையே அன்பை வளர்த்து நண்பர்களாக இருந்து வந்தோம். அதை நினைத்து ஒவ்வொரு வேளையில் வியப்படைந்தேன். தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டாலும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தால் நண்பர்களாக வாழலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மாலனுக்கும்…
தந்தை பெரியாரின் தலைவர்கள் குறித்த சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 26 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 27 5. தலைவர்கள் தலைவர்களின் தகுதிகளைப் பற்றி ஐயா அவர்கள் சிந்தித்துள்ளார்கள். அவர்தம் சிந்தனைகள். (1) ஒருதலைவன் வேண்டும், அவன் நடத்துபவனாய் இருக்கவேண்டுமேயொழிய நடத்தப்படுபவனாய் இருக்கக்கூடாது. அடுத்தாற்போல பின்பற்றுபவர்கள் இருக்கவேண்டும். அவர்கள் தலைவர் அபிப்பிராயத்துக்கு உழைக்கிறவர்களாக இருக்கவேண்டும். அதற்குத்தான் ஒத்துழைப்பு என்று பெயர். (2) மக்களை நடத்துகிறவன் தலைவனேயொழிய மக்களின் பின்னால் செல்லுகிறவன், மக்களை அடக்க முடியாதவன் தலைவன் அல்லன் தலைவன் ஆகவும் மாட்டான். (குறிப்பு 1) …
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 17
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 16. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 6 தொடர்ச்சி இந்த இருபத்தெட்டு வயதில் அரவிந்தன், மீனாட்சி அச்சக நிருவாகத்தையே தனித்தூண் போலிருந்து தாங்கிக் கொண்டிருந்தான். அரவிந்தன் அழகன், அறிஞன், கவிஞன், சாமர்த்தியமான குறும்புக்காரன், எல்லாம் இணைந்த ஒரு குணச்சித்திரம் அவன்; பார்த்தவுடன் பதிந்துவிடுகிற, கவரும் தன்மை வாய்ந்த முக்கோண வடிவ நீள முகம் அவனுடையதாகையால், ஒரு தடவை பார்த்தாலும் அவனை மறக்க முடியாது. ஆணியல்புக்குச் சற்று அதிகமாகவே சிவந்து தோன்றும் உதடுகளின் குறும்பு நகை நெளிய அவன்…
புலவர் குழந்தையின் இராவணகாவியம் – கதைச்சுருக்கம்
(முன் கட்டுரையின் தொடர்ச்சி) இராவண காவியம் கதைச்சுருக்கம் மிகப்பழங் காலத்தே தமிழ்நாடு இன்றுள்ள எல்லைக்குட்பட்டிருக்கவில்லை; வடக்கில் பனிமலை காறும் பரவியிருந்தது; அயல்நாடர் குடியேற்றத்தால் பின்னர் விந்தமலையை வடக்கெல்லையாகக் கொண்டது. தென் கடல் நிலமாக இருந்தது. அது, இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கில் ஆயிரங் கல்லுக்கு மேல் அகன்றிருந்தது. கிழக்கிலும் வங்கக் கடலும், சாவக முதலிய தீவுகளும் ஒரே நிலப்பரப்பா யிருந்தது. தென்னிலத்தில் குமரிமலை; பன்மலை முதலிய மலைகள் ஓங்கியுயர்திருந்தன. குமரிமலையில் குமரியாறும், பன்மலையில் புஃறுளி யாறும் தோன்றி அந்நிலத்தை வளஞ்செய்தன. குமரியாற்றுக்கும் பஃறுனியாற்றுக்கும் இடைப்…
