திருக்குறள் அறுசொல் உரை – 090. பெரியாரைப் பிழையாமை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 089. உள்பகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை பெரியார்சொல் கேட்பார், பிழைசெய்யார்  பெரியார்சொல் கேளார், பிழைசெய்வார்.   ஆற்றுவார் ஆற்றல், இகழாமை; போற்றுவார்          போற்றலுள் எல்லாம் தலை.      செயல்வல்ல பெரியாரை இகழாது,        மதித்துச் செயல்படல் சிறப்பு.   பெரியாரைப் பேணா(து) ஒழுகின், பெரியாரால்      பேரா இடும்பை தரும்.      பெரியார்தம் சொல்வழி நடவாமை,        பெயராப் பெரும்துன்பம் தரும்.   கெடல்வேண்டின், கேளாது செய்க; அடல்வேண்டின்,     …

திருக்குறள் அறுசொல் உரை – 087. பகை மாட்சி : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 086. இகல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 087. பகை மாட்சி படைஅறிவு, வலிமை, நல்துணை பொறுமை போன்றன பகைச்சிறப்புகள். வலியார்க்கு மா(று)ஏற்றல் ஓம்புக; ஓம்பா      மெலியார்மேல் மேக பகை.      வலியார் பகையை, விலக்குக;        மெலியார் பகையை, விரும்புக.   அன்(பு)இலன், ஆன்ற துணைஇலன், தான்துவ்வான்,      என்பரியும் ஏ(து)இலான் துப்பு….?      அன்பு,துணை, வலிமை இல்லான்,        பகைவரை எப்படி எதிர்கொள்வான்….?   அஞ்சும், அறியான், அமை(வு)இலன், ஈகலான்,      தஞ்சம்…

திருக்குறள் அறுசொல் உரை – 086. இகல்: வெ. அரங்கராசன்

(அதிகாரம்  085. புல்அறிவு ஆண்மை தொடர்ச்சி) 02. பொருள் பால்     12. துன்ப இயல் அதிகாரம்   086. இகல் வெறுப்பு, பகைமை, பேரிழப்பு துயரம்எனப் பெருக்கும் மனமாறுபாடு. இகல்என்ப .எல்லா உயிர்க்கும், பகல்என்னும்      பண்(பு)இன்மை பாரிக்கும் நோய்.       பிரிவுஎனும் தீப்பண்பை வளர்க்கும்        கொடிய நோய்தான் மனமாறுபாடு.   பகல்கருதிப் பற்றா செயினும், இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.      பிளவால் விரும்பாதன செய்வார்க்கும்,        மாறுபாட்டால், தீங்கு செய்யாதே.     இகல்என்னும் எவ்வநோய் நீக்கின், தவல்இல்லாத்…

திருக்குறள் அறுசொல் உரை – 085. புல்அறிவு ஆண்மை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 084. பேதைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம்  085. புல்அறிவு ஆண்மை    பேர்அறிஞர் என்று காட்டுதற்குக் கீழ்அறிவைக் கைஆளும் அறியாமை அறி(வு)இன்மை, இன்மையுள் இன்மை; பிறி(து)இன்மை,      இன்மைஆ வையா(து) உலகு.    அறிவு இல்லாமையே, வறுமை;        பிறஎலாம், வறுமைகள் அல்ல.   அறி(வு)இலான் நெஞ்(சு)உவந்(து) ஈதல், பிறிதுயாதும்    இல்லை, பெறுவான் தவம்.        அறியான் மனம்மகிழ்ந்து தருதல்,        பெறுவான் செய்த தவத்தால்தான்.   அறி(வு)இலார், தாம்தம்மைப் பீழிக்கும் பீழை,   …

திருக்குறள் அறுசொல் உரை – 083. கூடா நட்பு: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 082. தீ நட்பு தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல் அதிகாரம் 083. கூடா நட்பு  கூடாத மனங்களின் கூடாத போலிமை நட்போடு கூடாமை. சீர்இடம் காணின், எறிதற்குப் பட்டடை,    நேரா நிரந்தவர் நட்பு.          மனம்கூடா நண்பர், வாய்ப்புவரின்,      துயரம் செய்வார்க்கும் துணைஆவார்.     இனம்போன்(று) இனம்அல்லார் கேண்மை, மகளிர்    மனம்போன்று, வேறு படும்          போலிமை நண்பர்தம் நட்பும்,          விலைமகளிர் மனம்போல் மாறுபடும்.   பலநல்ல கற்றக்…

திருக்குறள் அறுசொல் உரை – 084. பேதைமை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 083. கூடா நட்பு தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 084. பேதைமை அறிய வேண்டுவன அறியாமையும்,    அறிய வேண்டாதன அறிதலும். பேதைமை என்ப(து)ஒன்று யா(து)…?எனின், ஏதம்கொண்டு,    ஊதியம் போக விடல்.         தீமையைப் பிடித்துக் கொண்டு,          நன்மையைப் போகவிடும் அறியாமை.   பேதைமையுள் எல்லாம் பேதைமை, காதன்மை      கைஅல்ல தன்கண் செயல்.         ஒழுக்கம் அல்லாத செய்கை,        அறியாமையுள் பெரிய அறியாமை.   நாணாமை, நாடாமை, நார்இன்மை,…

திருக்குறள் அறுசொல் உரை – 082. தீ நட்பு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 081. பழைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல்  அதிகாரம் 082. தீ நட்பு  தீப்போன்று, கொடிய பேர்அழிவுதரு தீமையான நட்போடு சேராமை.   பருகுவார் போலினும், பண்(பு)இலார் கேண்மை      பெருகலின், குன்றல் இனிது.            பண்புஇலார் போலித் தீநட்பு        நிறைதலினும், குறைதல் இனிது.     உறின்நட்(டு), அறின்ஒரூஉம், ஒப்(பு)இலார் கேண்மை,    பெறினும், இழப்பினும் என்?          பெறும்போது, ஓங்கும்; அறும்போது,          நீங்கும் தீநட்பு எதற்கு?   உறுவது…

திருக்குறள் அறுசொல் உரை – 081. பழைமை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 080. நட்பு ஆராய்தல் தொடர்ச்சி) 02. பொருள் பால்     11. நட்பு இயல். அதிகாரம் 081. பழைமை பற்பல ஆண்டுகளாய்த் தொடரும்  பழம்நட்பின் சிறப்புஉரிமை, பெருமை.   பழைமை எனப்படுவ(து) யா(து)?எனின், யாதும்    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.        எதனாலும் கீழ்மைப்படா நட்புஉரிமை          பெற்ற நட்பே, பழைமை.       நட்பிற்(கு) உறுப்புக் கெழுதகைமை; மற்(று)அதற்(கு)      உப்(பு)ஆதல், சான்றோர் கடன்.          உப்புபோல், அமையும் உரிமைச்        செயல்தான் நட்பிற்கு உறுப்பு. பழகிய நட்(பு)எவன்…

திருக்குறள் அறுசொல் உரை – 080. நட்பு ஆராய்தல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 079. நட்பு தொடர்ச்சி) 02. பொருள் இயல் 11. நட்பு இயல்      அதிகாரம் 080. நட்பு ஆராய்தல் வாழ்க்கை முழுதும் கூடவரும் ஆழ்நட்பை, ஆராய்ந்து ஏற்றல்.   நாடாது நட்டலின் கே(டு)இல்லை; நட்டபின்,        வீ(டு)இல்லை, நட்(பு)ஆள் பவர்க்கு.          ஆராயா, நட்பு கேடு; ஏன்எனில்,          நட்புக்குப்பின் விடுபடல் கடினம்.   ஆய்ந்(து)ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை,     தான்சாம் துயரம் தரும்.            ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் நட்பு,          இறுதியில் சாவுத் துன்பம்தான்.  …

திருக்குறள் அறுசொல் உரை – 079. நட்பு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 078. படைச் செருக்கு தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல்      அதிகாரம் 079. நட்பு   இணைஇலா நலம்தரும் துணையாக  விளங்கும் வளர்நட்பின் இலக்கனம்.   செயற்(கு)அரிய யாஉள நட்பின்? அதுபோல்,    வினைக்(கு)அரிய யாஉள காப்பு?          நட்புபோல் அரியதோர் நல்உறவும்,        பாதுகாப்பும், வேறு எவை?         நிறைநீர, நீரவர் கேண்மை; பிறைமதிப்    பின்நீர, பேதையார் நட்பு.           அறிஞரின் நட்பு, வளர்பிறை;        அறிவிலியின் நட்பு தேய்பிறை.   நவில்தொறும்…

திருக்குறள் அறுசொல் உரை – 078. படைச் செருக்கு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 077. படை மாட்சி தொடர்ச்சி) 02. பொருள் பால் 10. படை இயல்     அதிகாரம் 078. படைச் செருக்கு படைவீரரின் வீரப்பண்பு, மான உணர்வு, வெற்றிப் பெருமிதம்.     என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்,என்ஐ    முன்நின்று, கல்நின்ற வர்.          பகைவரே! என்தலைவன்முன் நில்லாதீர்,        நின்றார் நடுகல்லாய் நிற்கிறார்.   கான முயல்எய்த அம்பினில், யானை    பிழைத்தவேல், ஏந்தல் இனிது.              முயல்குறி தப்பாத அம்பைவிட,        யானை தப்பியவேல் சிறப்பு. பேர்ஆண்மை என்ப தறுகண்;ஒன்(று)…

திருக்குறள் அறுசொல் உரை – 077. படை மாட்சி : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 076. பொருள் செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 10. படை இயல்     அதிகாரம்  077. படை மாட்சி நாட்டுப் பாதுகாப்புக்குத் தேவையான வீரப்படையின் சீரும், சிறப்பும்.   உறுப்(பு)அமைந்(து), ஊ(று)அஞ்சா வெல்படை, வேந்தன்    வெறுக்கையுள் எல்லாம் தலை.                               பல்உறுப்போடு அஞ்சாத வெல்படையே,        ஆட்சியர்க்குத் தலைமைச் செல்வம். உலை(வு)இடத்(து) ஊ(று)அஞ்சா வன்கண், தொலை(வு)இடத்தும்,    தொல்படைக்(கு) அல்லால் அரிது.   அழிவிலும் அஞ்சாப் பெருவீரம், பயிற்சிப் பழம்படைக்கே எளிது.   ஒலித்தக்கால் என்ஆம் உவரி..?…