ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 12 : வழக்குரைஞராகவேலைபார்த்தது தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2 இப்படிச் சொல்வதினால் சில கட்சிக்காரர்கள் என்னை விட்டு அகன்றபோதிலும் நான் எடுத்துக்கொண்ட வழக்குகளில் பெரும்பாலும் வெற்றி பெற்றதனால் நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்னிடம் ஒரு மதிப்பு உண்டாயிற்றென்றே சொல்ல வேண்டும். சில சமயங்களில் நான் உண்மையை அறியாத சில தப்பான வழக்குகளை நடத்திக்கொண்டு வருகையில் இடையில் இது பொய் வழக்கு என்று கண்டறிந்தால் நீதிமன்றத்தில் நடவடிக்கையை நடத்திவிட்டு முடிவில் தொகுப்புரை (Sum up)…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 12 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 1/2

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 11 : நடுப் பருவம் – தொடர்ச்சி) என் சுயசரிதை  : அத்தியாயம் 6. வழக்குரைஞராக வேலை பார்த்தது 1/2 என் தமையனார் ஐயாசாமி முதலியார் இதற்கு முன்பாகவே உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தார். ஆகவே அவரது அறையிலேயே நான் வழக்குரைஞராக அமர்ந்தேன். எழுத்தர், வேலையாள் முதலிய சௌகர்யங்களுக்கெல்லாம் நான் கட்டப் படாதபடி ஆயிற்று. நான் பதிவு (enrol) ஆன தினமே அவருக்கு பதிலாக ஒரு வழக்கை நடத்தினேன். சென்னையில் சிறுவழக்கு நீதிமன்றத்தில் நான் முதல்முதல் ஒரு வழக்கில் கட்டணம்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 11 : நடுப் பருவம்

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம் – தொடர்ச்சி) என் சுயசரிதை : அத்தியாயம் 5. நடுப் பருவம் பி.ஏ. தேறினவுடன், நான் வழக்குரைஞராக வேண்டுமென்று தீர்மானித்து சட்ட வகுப்பில் சேர்ந்தேன். சட்டக்கல்லூரியில் படித்தபோது பெரும்பாலும் எங்கள் தகப்பனார் புதிதாய் கட்டிய எங்கள் எழும்பூர் பங்களாவிலிருந்து கல்லூரிக்கு மிதிவண்டியில் போய்க்கொண்டிருந்தேன். இந்தச் சட்டக்கல்லூரியில் நான் சேர்ந்தவுடன் நான்கைந்து வருடங்களாக என்னை விட்டுப்பிரிந்த என் உயிர் நண்பராகிய வி. வி. சீனிவாச ஐயங்கார் தானும் பி.ஏ. பரிட்சையில் தேறினவராய் என்னுடன் சேர்ந்தார்….

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 6  

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 5. தொடர்ச்சி) 1882-ஆம் வருட முடிவில் என்னை என் தகப்பனார் பச்சையப்பன் கல்லூரியின் கிளைப் பள்ளிக்கூடமாகிய அப்பள்ளிக்கூடத்தின் கீழ்ப்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த கோவிந்த நாயுடு பிரைமெரி (Primary) பள்ளிக்கூடத்தில் சேர்ப்பித்தார். என்னை அழைத்துக்கொண்டுபோய் அதன் பிரதம உபாத்தியாயர் ஏ. நரசிம்மாச்சாரியிடம் விட்டு, “இவன் இரண்டாம் வகுப்பில் போன வருடம் படித்தான். வகுப்பில் முதலாவதாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். இவனை விசாரித்து எந்த வகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியுமோ அப்படியே செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். நரசிம்மாச்சாரியார் ஒன்றாவது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 5. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 4. தொடர்ச்சி) 4. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது முதல் பள்ளிக்கூடம் இப்போது நானிருக்கும் வீட்டிற்கு 100 அடி தூரத்திற்குள் ஒரு வீட்டில் நடை திண்ணையி லிருந்தது. அதில் என்னுடன் பத்து பதினைந்து பிள்ளைகள் தான் படித்தார்கள் என்று நினைக்கிறேன். அதன் ஒரே உபாத்தியாயர் மிகவும் வயது சென்றவர். அவர் நரைத்த முகம் எனக்கு வெறுப்பைத் தந்தது. அவரிடம் தான் என் அண்ணன்மார்களெல்லாம் அட்சராப்பியாசம் ஆரம்பித்தார்களாம். எனது அண்ணனாகிய ஏகாம்பர முதலியாரைப்பற்றி அவர் விசயமாக ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 4 –

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 3. தாய் தந்தையர் போற்றல்-தொடர்ச்சி) எழுத்தறிவு என் தாயாருடைய தகப்பனார் அடையாளம் பேடு அப்பாவு முதலியார் என்பவர். அடையாளம் பேடு என்பது சென்னைக்கு ஒன்பது கல் தூரத்திலிருக்கும் ஒரு சிறு ஊர். அவருக்கு அந்த ஊரிலும் அதற்கடுத்த ஊராகிய வானகரத்திலும் கொஞ்சம் நிலமுண்டு. அதை ஆட்களைக் கொண்டு பயிரிட்டு அவர் சீவித்து வந்தனராம். இங்கு அவரைப் பற்றி எனது மாமி அதாவது அப்பாவு முதலியாருடைய மருமகப் பெண் சொல்லிய ஒரு கதை எனக்கு ஞாபகம் வருகிறது. மூன்றாவது மைசூர்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’   3. தாய் தந்தையர் போற்றல்

(ப. சம்பந்த(முதலியா)ரின் என் சுயசரிதை 2. தொடர்ச்சி) என் சுயசரிதை’   3. ஏழைக் குடும்பம் தொடர்ச்சி அவர் சென்னைக்கு வந்த பிறகு பெரிய காஞ்சிபுரம் சிரீ ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கும், சென்னையில் பெத்து நாய்க்கன் பேட்டையிலிருக்கும் சிரீ ஏகாம்பரேசுவரர் ஆலயத்திற்கும் சென்னையில் திருவட்டீசுவரன் பேட்டையிலிருக்கும் சிவாலயத்திற்கும் 10 ஆண்டுகளாக தருமகர்த்துவாக இருந்தார். அவர் சீவித காலத்தில் வருடா வருடம் காஞ்சிபுரத்து சிவன் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் எங்களை அழைத்துக் கொண்டு போவார். இதை நான் இங்கு எழுதிய தன் முக்கிய காரணம் என்னவென்றால் இந்த…

ப. சம்பந்த(முதலியா) ரின் ‘என் சுயசரிதை’   2. ஏழைக் குடும்பம்

(ப. சம்பந்த(முதலியா)ரின் என் சுயசரிதை 1. தொடர்ச்சி) 3. ஏழைக் குடும்பம் என் தகப்பனார் அந்தக் கல்லூரியில் அரைச் சம்பளத்தில் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் என்பவர் செல்வந்தரல்ல, ஒரு சாராயக்கடையில் குமாசுத்தாவாக சொல்பச் சம்பளம் பெற்று, குடும்பத்தைச் சம்ரட்சணம் செய்துவந்தனராம். ஆயினும் தன் பிள்ளைகள் இருவரும் நன்றாய்ப் படிக்கவேண்டுமென்று தீர்மானித்துக் கட்டப்பட்டு அரைச்சம்பளத்தில் அந்தக் கல்லூரியில் படிக்கச் செய்தராம். இந்த நிலையில்தான் என் தகப்பனார் கட்டப்பட்டுப் படித்ததற்கு உதாரணமாக அவர் எனக்குக் கூறிய கதை ஒன்றை இங்கு எழுதுகிறேன். அச்சமயம்…

ப. சம்பந்த(முதலியா)ர் எழுதிய”என் சுயசரிதை” (வாழ்க்கை வரலாறு) 1.

“என் சுயசரிதை“1. என் இளம் பருவ சரித்திரம் “பம்மல் விசயரங்க முதலியார் இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன் திருஞான சம்பந்தம் 1873-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் 1-ஆந்தேதிக்குச் சரியான ஆங்கீரச வருடம் தை மாதம் 21ஆந்தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் சனனம் சென்னப்பட்டணத்தில்” என்று நான் தகப்பனார் விசயரங்க முதலியார் எழுதி வைத்துவிட்டுப்போன குடும்ப புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கிறது. நான் இப்போது இதை எழுதத் தொடங்கும்போது வசிக்கும் ஆச்சாரப்பன் வீதி 70-ஆம் எண் வீட்டில் முதற்கட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் நான் பிறந்ததாக…