மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 73

(குறிஞ்சி மலர்  72 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 26 தொடர்ச்சி “தோட்டத்துப் பக்கமாகப் போனான். நீங்கள் வேண்டுமானால் போய்ச் சொல்லிப் பாருங்கள்” என்று நம்பிக்கையில்லாத குரலில் பதில் சொன்னார் மீனாட்சிசுந்தரம். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனைத் தேடிக் கொண்டு தோட்டத்துப் பக்கமாகப் போனாள். அப்போது காரில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மலையைச் சுற்றிக் காட்டுவதற்காகப் போயிருந்த முருகானந்தமும் வசந்தாவும் திரும்பி வந்தார்கள். வசந்தா காரிலிருந்து குழந்தைகளை இறக்கி உள்ளே கூட்டிக் கொண்டு போனாள். முருகானந்தம் மீனாட்சிசுந்தரத்துக்கு அருகில் வந்து மரியாதையோடு அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டான். “உட்கார் தம்பி. உன்னிடம்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 72

(குறிஞ்சி மலர்  71 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 26 குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால்அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல்இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லைமயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.      — திருமந்திரம் அரவிந்தனும் பூரணியும் புகைப்பட நிலையத்துக்குச் சென்றிருந்தபோது வீட்டில் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் அவர்கள் இருவரையும் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். “எனக்கு ஒன்று தோன்றுகிறது. என் பெண் வசந்தாவின் திருமணத்தை மட்டும் தனித் திருமணமாக நடத்துவதற்குப் பதிலாக அதே மண மனையில் இவர்களுக்கும் முடிபோட்டு இணைத்துவிட்டால் என்ன? இவர்களும் தான்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 71

(குறிஞ்சி மலர்  70 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 25 தொடர்ச்சி இவரைக் காண வேண்டும் என்று நேற்றும் அதற்கு முன் தினங்களிலும் எவ்வளவு ஏங்கிக் கொண்டிருந்தேன். எவ்வளவு தாகமும் தாபமும் கொண்டிருந்தேன். பார்த்த பின்பும் அவற்றை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பும், அறிவும், மனம் கலந்து அன்பு செலுத்துவதற்குப் பெரிய தடைகளா! இவரிடம் என் அன்பையெல்லாம் கொட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் ஏதேதோ அறிவுரை கூறுவது போல் பேசிவிட்டேன். எனக்கு எத்தனையோ அசட்டு இலட்சியக் கனவுகள் சிறு வயதிலிருந்து உண்டாகின்றன. அதை இவரிடம் சொல்லி இவருடைய…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 70

(குறிஞ்சி மலர் 69 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 25 தொடர்ச்சி “ஒரு நாள் ஓரூரில் சாயங்காலச் சந்தையொன்று கூடியது. சில செம்படவப் பெண்கள் தாம் கொண்டு வந்த மீனை அங்கு விற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தனர். முன்னிருட்டு வந்துவிட்டது. மழையோ பாட்டம் பாட்டமாகப் பெய்யத் தொடங்கியது. பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்? பக்கத்தில் ஒரு பூக்கடைக்காரனுடைய குடிசை இருப்பதைப் பார்த்து அங்கு ஓடினர். அந்தப் பூக்கடைக்காரன் மிகவும் நல்லவன். “அவன் அங்கு வந்த அப்பெண்களின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு தனது குடிசையின் ஒரு பகுதியை அவர்கள்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 69

(குறிஞ்சி மலர்  68 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 25 பொன்காட்டும் நிறம்காட்டிப்பூக்காட்டும் விழிகாட்டிப்பண்காட்டும் மொழிகாட்டிப்பையவே நடைகாட்டிமின்காட்டும் இடைகாட்டிமுகில்காட்டும் குழல்காட்டிநன்பாட்டுப் பொருள் நயம்போல்நகைக்கின்றாய் நகைக்கின்றாய்பண்பாட்டுப் பெருமையெலாம்பயன்காட்டி நகைக்கின்றாய்.      — அரவிந்தன் கோடைக்கானலிலேயே அழகும், அமைதியும் நிறைந்த பகுதி குறிஞ்சி ஆண்டவர் கோயில் மலைதான். குறிஞ்சியாண்டவர் கோவிலின் பின்புறமிருந்து பார்த்தால் பழநி மலையும், ஊரும் மிகத் தெளிவாகத் தெரியும். நெடுந்தொலைவு வரை பச்சை வெல்வெட்டு துணியைத் தாறுமாறாக மடித்துக் குவித்திருப்பது போல் மலைகள் தெரியும் காட்சியே மனத்தை வளப்படுத்தும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 25

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 10 தொடர்ச்சி   ஆனால் அப்படிச் சொல்ல வாயெழவில்லை. நடுத்தெருவில் திடீரென்று அவளைச் சந்தித்த கூச்சம் தடுத்தது. புன்னகைக்குப் பதிலாகப் புன்னகை மட்டும் செய்தான். பூரணி தனக்குத்தானே நினைத்துப் பார்த்தாள். ‘புது மண்டபத்து புத்தக வியாபாரி உட்பட பெரும்பாலோர், பிறருக்குச் சேரவேண்டிய பொருளையும் தாமே அபகரித்துக் கொண்டு வாழ ஆசைப்படும் இதே உலகில்தான் அரவிந்தனும் இருக்கக் காண்கிறேன். தனக்குக் கிடைக்கிறதையெல்லாம் பிறருக்கே கொடுத்து மகிழும் மனம் இந்த அரவிந்தனுக்கு எப்படித்தான் வந்ததோ?’…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 23 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 10  உடல்குழைய என்பெலாம் நெக்குருகவிழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்றஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவேஓர் உறவும் உன்னியுன்னிப்படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற…      — தாயுமானவர் இயல்பாகவே அரவிந்தனுக்கு மென்மையும் நளினமும் இணைந்த உடம்பு வாய்த்திருந்தது. எந்த இடத்திலாவது இலேசாகக் கிள்ளினால் கூட இரத்தம் வருகிற உடம்பு அது. உரோஜாப்பூவின் மென்மையும் சண்பகப் பூவின் நிறமும் கொண்ட தேகம் அவனுடையது. அந்த உடலில் வலிமை உண்டு. ஆனால் முரட்டுத்தனம் கிடையாது. அழகு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 23

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 22 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 9 தொடர்ச்சி   ஒவ்வொரு நாளும் அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளுக்காக மாலையில் மதுரைக்குப் புறப்படும்போது தம்பிகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்க மாட்டார்கள். அதனால் குழந்தையையும் வீட்டுச் சாவியையும் ஓதுவார் வீட்டிலோ பக்கத்தில் கமலாவின் தாயாரிடமோ ஒப்படைத்துவிட்டுப் போவாள். தம்பிகள் வந்தவுடன் சாவியை வாங்கிக் கொண்டு குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு பூரணி நகரத்திலிருந்து வீடு திரும்புவாள். சில நாட்களில் தம்பிகளும் தங்கையும் அவள் வருமுன்பு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 22

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 21 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 9   “பூப்போலக் கண்கள் பூப்போலப் புன்சிரிப்புபூப்போலக் கைவிரல்கள் பூப்போலப் பாதங்கள்பூப்போலக் கன்னம் புதுமின் போல் வளையுமுடல்பார்ப்போர் செவிக்குத்தேன் பாய்ச்சும் குதலைமொழி“      — சது.சு.யோகி அந்த மழை இரவு பூரணியின் வாழ்வில் மறக்க இயலாத ஒன்று. அன்று அரவிந்தன் வெறும் மழையில் நனைந்து கொண்டு தன்னோடு வந்ததாக அவள் நினைக்கவில்லை. தன் உள்ளங் குழைத்து, நெக்குருகி நெகிழ்ந்து ஊற்றெடுத்துச் சுரந்த அன்பிலேயே நனைந்து கொண்டு வந்ததாகத்தான் தோன்றியது அவளுக்கு. அந்த…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 21

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20 தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் அத்தியாயம் 8 தொடர்ச்சி   “செல்லம், அந்த அக்காவை விட்டுவிடாதே. அடுத்த மாதம் முதல் மாதர் சங்கத்திலே தினம் சாயங்காலம் இவங்க தமிழ்ப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க. நீயும் தவறாமப் போகணும்” என்று சிரித்துக் கொண்டே பெண்ணுக்குச் சொன்னாள் மங்களேசுவரி அம்மாள். “இந்த அக்கா சொல்லிக் கொடுப்பதாக இருந்தால் நான் இருபத்து நாலுமணி நேரமும் மாதர் சங்கத்திலே இருக்கத் தயார் அம்மா” என்றவாறே புள்ளிமான் போல துள்ளிக் குதித்து ஓடிவந்து பூரணியின்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 19 தொடர்ச்சி)   குறிஞ்சி மலர்அத்தியாயம் 8   “நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய்நினைப்பார்கள் மனத்துக்கோர் விபத்தும் ஆனாய்பொன்னானாய் மணியானாய் போகமானாய்பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னைஎன்னானாய் என்னானாய் என்னில் அல்லால்ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே“      – தேவாரம் “முக்கியமான காரியம் பூரணி. எங்கே, எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே. மறுக்காமல் என்னோடு உடனே புறப்படு…” என்று மங்களேசுவரி அம்மாள் வந்து கூப்பிட்டபோது அவளால் அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து சாமான்களை ஒழித்துப் புது…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 6

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 5. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 2 “தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீகல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீஅறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீஅனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ”      -பரிபாடல் குழந்தை மங்கையர்க்கரசி புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிப் போயிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் எழுதியிருந்த கடிதத்தோடு மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூரணி. மங்கையர்க்கரசியைப் போல் நானும் குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய போது மனமெல்லாம் ஏக்கம் நிறைந்து தளும்பியது அவளுக்கு….