வெருளி நோய்கள் 1186-1190 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1181-1185 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1186-1190 தலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தலை வெருளி.தலையின் தோற்றம், வடிவம், அழகு, வரக்கூடிய நோய்கள் முதலானவைபற்றிக் கவலைப்பட்டுத் துன்புற்றுப் பேரச்சத்திற்கு ஆளாவது தலை வெருளி.Kefali என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தலை.00 உடலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பேரச்சம் கொள்வது தலைகீழ் வெருளி.நோய் வெருளியைப் போன்றதுதான் இதுவும்.Anapoda என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தலைகீழ் எனப் பொருள்.00 தலைக்காப்பி (Helmet) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தலைக்காப்பி வெருளி.தலைக் கவிப்பு, தலைக்கவசம், தலை காப்பணி ,தலையணி…
வெருளி நோய்கள் 1181-1185 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1176-1180 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1181-1185 தம்பா(Tampa) மாநகரம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் தம்பா வெருளி.ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தம்பா மாநகரம் உள்ளது. இம் மாநிலம், மாநில மக்கள், விளைபொருள்கள், பழக்க வழக்கங்கள், தொடர்பானவை குறித்துக் காரணமற்ற பேரச்சம கொள்வர் இத்தகையோர்.00 தராசு தொடர்பிலான அளவு கடந்த பேரச்சம் தராசு வெருளி.தராசு நிறைகோல் என்றும் துலாக்கோல் என்றும் அழைக்கப் பெறும்; தட்டுத்தராசு, வில் தராசு, மின்னணு தராசு, வேதியல் தராசு எனப் பலவகைப்படும். தராசுகளில் மோசடி செய்து எடையைத்…
வெருளி நோய்கள் 1176-1180 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1171-1175 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1176-1180 தந்தையர் நாள் (Father’s Day) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தையர் நாள் வெருளி.தந்தை வெருளி(Patrophobia) உள்ளவர்களுக்குத் தந்தையர் நாள் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 தந்தையின் உடன்பிறப்புகளான அத்தையர், பெரியப்பா, சித்தப்பாக்கள் ஆகியோர் மீதான தேவையற்ற பேரச்சம் தந்தையின் உடன்பிறப்பர் வெருளிதந்தையின் உடன்பிறப்புகள் காட்டும் கண்டிப்புகளால் அவர்கள் மீது வெருளி வருகிறது.00 தந்தைவழி மாமன் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தைவழி மாமன் வெருளி.தந்தைவழி மாமன் கண்டிப்பைப் புரிந்து கொள்ளாமல் அவரகள்மீது…
வெருளி நோய்கள் 1171-1175 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1166-1170 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1171-1175 தண்ணீர்ப்பூசணி(Watermelon) பற்றிய அளவு கடந்த பேரச்சம் தண்ணீர்ப்பூசணி வெருளி.தண்ணீர்ப்பூசணி, ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகைப்பழம், கோசாப் பழம், தர்பீசு, தண்ணீர்ப் பழம் எனவும் அழைக்கப்படும். பூசணியைப் பூசுனி, பூசனி என்றும் குறிப்பிடுவர்.00 தந்தையுடன் பிறந்த தமக்கை, தங்கை ஆகிய அத்தைமார் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தை உடன்பிறந்தாள் வெருளி.அத்தை என்று சொன்னால், தாயுடன் பிறந்த உடன்பிறந்தவரின் மனைவி என்றும் பொருள் கொள்ளப்படும். எனவே,…
வெருளி நோய்கள் 1166-1170 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1161-1165: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1166-1170 தசைக்கனி (Berry) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தசைக்கனி வெருளி.இதனைச் சிலர் Fructophobia என்கின்றனர். fructus என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பழம் எனப் பொருள். எனவே, Fructophobia என்பதைப் பழ வெருளி எனப் பொதுவாகக் குறிப்பிட வேண்டும். Mourophobia என்பது குறிப்பாகத் தசைக்கனியைக் குறிப்பது.தசைக்கனியில் வழல் நச்சம்(சப்போனின்/saponin) என்னும் நச்சுக் கலவை உள்ளது. இது குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பை முதலியவற்றை ஏற்படுத்தக் கூடும். இதனால் தசைக்கனி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00…
வெருளி நோய்கள் 1161-1165: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1156-1160:தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1161-1165 புனைவுரு கதைப்பாத்திரமான சோனிகன்(Sonic) குறித்த வரம்பற்ற பேரச்சம் சோனிகன் வெருளிசப்பானியக் காணொளி ஆட்டத்தின் பெயரே ‘சோனிக்கு’ (Sonic, the Hedgehog). இப்பெயரில் திரைப்படமும வந்துள்ளது. இவ்வாட்டத்தை ஆடுபவர்களுக்கும் இதனை ஆடும் சிறுவர்களால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என அஞ்சும் பெற்றோர்களுக்கும் சோனிகன் வெருளி வருகிறது.‘க்‘ எழுத்தில் சொல் முடியாது. எனவே, ‘சோனிக்’ என்பது அன் விகுதி சேர்த்து சோனிகன் எனப்பட்டது.00 ஞாயிற்றுக்கிழமை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஞாயிற்றுக் கிழமை வெருளி.விடுமுறை நாள் என்பதால் வரும் சோம்பல்,…
வெருளி நோய்கள் 1151-1155: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1146-1150: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1151-1155 சேலாப்பழம் (Cherry) பற்றிய அளவுகடந்த பேரச்சம் சேலாப்பழ வெருளி.சேலாப்பழத்தில் கொடிய நச்சுப்பு(சயனைடு) உள்ளது. ஒவ்வொரு கல்(கிராம்) விதையிலும் 0.17 கல்(கிராம்) நச்சுப்பு உள்ளது இருப்பதால், புதியதாக உடைக்கப்பட்ட பருப்பு ஒன்று அல்லது இரண்டு உட்கொண்டாலே உயிரை எடுக்கும். பருப்பின் அளவைப் பொறுத்து நச்சுத்தன்மை அளவும் மாறுபடும். பக்க விளைவுகளும் உண்டு. எனவே, இதனை மிகுதியாக உட்கொள்ளக் கூடாது. சேலாப்பழம் மீது வெருளி கொள்கின்றனர்.Kerasi என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சேலாப்பழம்(cherry)00 சேறு குறித்த பேரச்சம்…
வெருளி நோய்கள் 1136-1140: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1131-1135: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1136-1140 பார்வைத்திறன், கேட்புத்திறன் ஆகிய இரண்டுமில்லாதவர்கள் தொடர்பான தொடர்பான பேரச்சம், செவிடர் குருடர் வெருளி.பார்வைத்திறன் குறைபாடும் கேட்புத்திறன் குறைபாடும் ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் அளவில் இருக்கும். எனினும் இரு திறனும் இன்றிச் செவிட்டுக் குருடராக இருப்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்கள், தன்வெறுப்பும் கொள்பவர்களாக உள்ளனர்.Surdo, caeco ஆகிய இலத்தீன் சொற்களுக்கு முறையே செவிடு, குருடு எனப் பொருள்கள்.00 செவிடர் தொடர்பான பேரச்சம் செவிடர் வெருளி.காது கேளாதவர்கள், கேட்பு உதவியை(Hearin Aid) அணிந்து கொள்ளத் தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர். இவர்களிடம்…
