வருமானவரித்துறையை மூடுக!
பெரும்பான்மையருக்கு உதவாத மத்தியஅரசின் பாதீடு – நிதிநிலை அறிக்கை 2015 – 2016 ஆம் நிதியாண்டிற்கான மத்தியில் ஆளும் பா.ச.க.வின் வரவுசெலவுத்திட்டமாகிய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்(செட்லி) அளித்துள்ளார். செல்வர்கள் நலனில் கருத்து செலுத்தும் மத்திய அரசு ஏழை மக்களையும் நடுத்தரநிலை மக்களையும் கருத்தில் கொள்ள வில்லை. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியும் மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவவசதியும் அளிக்க வேண்டிய கடமையில் இருந்து தவறியுள்ளது. நாடெங்கிலும் ஏறத்தாழ 80,000 உயர்நிலை பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 2 தட்டச்சுப் பொறி:- 1961ஆம் ஆண்டு வெளியான அரசின் குறிப்பாணை ஒன்றின்படி “மாவட்ட ஆட்சியர்களும் துறைத் தலைவர்களும் இசைந்ததற்கு இணங்க ஒரே ஒர் ஆங்கிலத் தட்டச்சுப் பொறி…
கலைச்சொல் தெளிவோம்! 76. கணம்-Cirrostratus
76. கணம்-Cirrostratus கணம் அடுத்த அடுக்கில் 8000 பேரடி(மீட்டர்) உயரத்தில் கூட்டம் கூட்டமாக உள்ள குவியடுக்கு முகிலின் பெயர் கணம். மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன் (புறநானூறு : 131.1) அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக் (பதிற்றுப்பத்து : 17.11) இவ்வாறு இடி, மின்னல் இணைந்த மழை முகிலைக் கணம் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனையே சிர்ரோசுதிரட்டசு/Cirrostratus எனக் குறிப்பிடுகின்றனர். கணம்-Cirrostratus – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 75. செல்-Cirrocumulus
75. செல்-Cirrocumulus செல் செல்(117) என்பதற்கு உள்ள சில பொருள்களில் ஒன்று முகில் என்பதாகும். “வான்முழக்குச் செல்” (பரிபாடல் 13.44) என்னும் பொழுது இடி முழக்கத்துடன் இணைந்த மழைமுகிலைக் குறிப்பிடுகின்றது. இத்தகைய தன்மை உடைய 7000 பேரடி (மீட்டர்) உயரத்தில் உள்ள சுருள்குவிவு முகில் சிர்ரோகியூமுலசு/Cirrocumulus எனப்படுகின்றது. செல்-Cirrocumulus – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை. அவையில் அனைவரின் பாராட்டையும் பெற்ற கட்டுரை இது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் எப்படியெல்லாம் சட்டம் இயற்றக்கூடாது என்பதற்குத் தங்களுக்கு இது மிகவும் வழிகாட்டியாக அமையும் என்றார். முனைவர் நன்னன் அவர்கள் “தமிழ்நாடே இனி உருப்படாதோ என்ற தொனி இருந்தாலும் உண்மைகளைச் சிறப்பாக உரைத்துள்ளீர்கள்” என்றார். கடந்த ஆண்டே அறிஞர்…
செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்
செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் – இலக்குவனார் திருவள்ளுவன் உலகின் முதல் மொழியான தமிழ், உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்னும் செம்மைச்சிறப்புடன் தோன்றும் பொழுதே செம்மொழியாய் அமைந்தது. இருப்பினும் ஆங்கிலேயர் ஆட்சியில் செயற்கை மொழியான சமற்கிருதம் போன்றவற்றைச் செம்மொழி என்ற போர்வையில் ஊக்கப்படுத்தி வந்தது அரசு. ஆனால் உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கும் செம்மொழிக்குரிய அறிந்தேற்பு வழங்க வேண்டும் என நல்லறிஞர்கள் குரல் எழுப்பி வந்தனர். இதன் தொடர் நிகழ்வால் 12.10.2004 அன்று மத்திய அரசு தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பை வழங்கியது….
கலைச்சொல் தெளிவோம்! 74. மை-Altostratus
74. மை-Altostratus மை 6000 பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள இடைஅடுக்கு முகிலே மை என்பது. மை(110) எனில், கருநிறம், வண்டி மை, பசுமை, குற்றம் என்பன போன்று பல பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் முகில் என்பது. மைபடு சென்னி (கலித். 43), “மைபடு மால்வரை”(நற்றிணை : 373:3. ) “மைபடு சிலம்பின்” (குறுந். 371 & பரிபாடல் : 16:2) “மைபடு குடுமிய குலவரை” (பரிபாடல் : 15:9-10) என்னுமிடங்களில், ‘மை’ மலைகளில் தவழும் முகிலைக் குறிக்கின்றது. மழைக் கருக்கொண்டபின் கருமையாய் அமையும்…
கலைச்சொல் தெளிவோம்! 73. கார்-Altrocumulus
73. கார்-Altrocumulus கார் கடல் முகந்து வந்தன்று, கார்! (முல்லைப்பாட்டு : வெண்பா 2) காரும் ஆர்கலி தலையின்று. தேரும் (அகநானூறு : 54.3) கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் (குறுந்தொகை : 162.1) தளி தரு தண் கார் தலைஇ (நற்றிணை : 316.9) கார்கலித்து அலைப்ப (ஐங்குறுநூறு : 496.2) என்பன போல் சங்க இலக்கியத்தில் 139 இடங்களில் வந்திருந்தாலும் கார் முகிலையும் கார் பருவத்தையும் இச் சொல் குறிக்கின்றது. 5000 பேரடி(மீட்டர்) உயரத்தில் மழை பெய்யும் நிலையில்…
கலைச்சொல் தெளிவோம்! 72. விண்டு-Stratocumulus
72. விண்டு-Stratocumulus விண்டு விண்டு சங்க இலக்கியத்தில் 8 இடங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனினும் மலையைத்தான் குறிக்கிறது. ஆனால், விண்டுச் சேர்ந்த வெண்மழை போல (பதிற்றுப்பத்து 55.15) விண்டு முன்னிய புயல்(பதிற்றுப்பத்து (84.22) என்பன போல், பெரும்பாலும் மழை முகிலோடு தொடர்பு படுத்தியே விண்டு குறிக்கப்பெறுகின்றது. பிங்கல நிகண்டு விண்டு என்பதன் ஒரு பொருளாக முகிலையும் குறிக்கின்றது. விண்டு ஆகிய மலையில் குவியும் முகில் பின்னர் விண்டு என்றே அழைக்கப் பெற்றிருக்க வேண்டும். எனவே, சங்க இலக்கியங்களில் பயன்பெற்ற சொல் என்ற…
கலைச்சொல் தெளிவோம்! 71. முதிரம்-Cumulonimbus
71. முதிரம்-Cumulonimbus முதிரம் புறநானூற்றில் வரும் இரு பாடல்களிலுமே உயர்கொடை வள்ளல் குமண மன்னன் ஆட்சிப்பரப்பிற்குட்பட்ட முதிரமலையையே முதிரம் என்பது குறிக்கின்றது. பின்னரே இச்சொல் முகிலைக் குறிப்பதாய் அமைந்துள்ளது. மூவாயிரம் பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள அடுத்த முகில்கூட்டத்தின் பெயர் கியூமுலோநிம்பசு-Cumulonimbus என்பதாகும். இதனையே முதிரம் எனக் குறிக்கலாம். முதிரம்-Cumulonimbus – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 70. மஞ்சு-cumulus
70. மஞ்சு-cumulus மஞ்சு (11) விசும்பிற்கு மேற்பட்ட நிலையில் ஈராயிரம் பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள முகிலை அடுத்துப் பார்ப்போம். பின்வரும் பாடல் அடிகள் மழையைச் சுற்றி மஞ்சு எனப்படும் முகில் கூட்டம் அமைந்துள்ளதை விளக்குகின்றன. மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த (நற்றிணை: 154:1-4) மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து (கலித்தொகை: 49.16) அகல்இரு வானம் அம்மஞ்சு ஈன(ப்), (அகநானூறு: 71.8) முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும் (புறநானூறு:103: 6.7) மஞ்சு…
கலைச்சொல் தெளிவோம்! 69. விசும்பு-stratus
69. விசும்பு-stratus எழிலிக்கு அடுத்த அடுக்கில் 1000 பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள பாவடி முகில் குறித்து அடுத்துப் பார்ப்போம். விசும்பு என்னும் சொல்லைச் சங்கப் புலவர்கள் 164 இடங்களில் கையாண்டுள்ளனர்; விசும்பு வானத்தையும் குறிக்கின்றது, வானத்தில் உள்ள முகில்கூட்டத்தையும் குறிக்கின்றது. முகில் என்னும் பொருளில் ‘விசும்பு’ வரும் சில இடங்கள் வருமாறு : ஒருகை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒருகைவான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட (திருமுருகு ஆற்றுப்படை : 115-116) நீல் நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் (பெரும்பாணாற்றுப்படை :…
