கலைச்சொல் தெளிவோம்! 3.] உணவும் சாப்பாடும் – இலக்குவனார் திருவள்ளுவன்

      உணவு- meal(ஆட்.,கால்.), food(வேளா.,சூழ.,), diet(பயி.,மீனி.) என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். (இ)டயட்(டு) – diet என்பதைத் திட்ட உணவு(ஆட்.,வேளா.,மனை.), சீர் உணவு(ஆட்.), சரியுணவு, அளவு உணவு என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் இயல்பான நிலையில் உள்ள சரியளவு உணவைக் குறிப்பதாகவே கருதப்படுகின்றன. பத்தியம் என்றும் சிலர் சொல்கின்றனர். இது சரியான சொல் என்றாலும் நோய்நிலையுடன் தொடர்புபடுத்தியே கருதிப் பார்ப்பதால் இதுவும் இயல்பான நிலையில் ஏற்கத்தக்கதாகக் கருதப்படவில்லை. உணவுக் கட்டுப்பாட்டையே வழக்கத்தில் இச்சொல்லின் பொருளாகக் கருதுகிறோம். நாம் கொள்ளத் தக்கனவும் தள்ளத்தக்கனவும்…

கலைச்சொல் தெளிவோம்! 2.] பொரித்தலும் வறுத்தலும் – இலக்குவனார் திருவள்ளுவன்

    (குஞ்சு)பொரித்தல்-hatch/hatching(வேளா., பயி., மனை., கால்.);  fry/frying (கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.); வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.) என்று   அடைகாத்துக் குஞ்சுபொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறுவகைக்குக் குறிப்பிடுகின்றனர்.   சங்கக்காலத்தில் கருனை(4) எனப் பொரித்தகறியைக் (Any preparation which is fried) குறிப்பிட்டுள்ளனர். கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு (நற்றிணை367.3) [கரிய கண்ணையுடைய கிழங்கின் பொரிக்கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத்திரளை] பசுங்கண்கருனைச்சூட்டொடுமாந்தி…

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

 (கார்த்திகை 21, 2045 திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி) முதல் காப்பியம்   இத்தகைய மாறுபட்ட எண்ண ஓட்டங்களிடையே கல்லூரிக்கால விடுமுறையில் நூலகத்தில் படித்த ‘மாங்கனி’ எப்பொழுதும் நினைவில் மணக்கிறது; கருத்தில் சுவைக்கிறது. அதனைப்பற்றிய எண்ணத்தைப் பகிர விரும்புகின்றேன். கண்ணதாசன்எழுத்துலகில் இடம் பெற்ற 10 ஆண்டுகள் கழித்து எழுதிய இலக்கியமான ‘மாங்கனி’யே அவரது முதல் காப்பியம். 1954இல் கல்லக்குடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்று திருச்சிராப்பள்ளி மத்தியச் சிறையில் இருந்த பொழுது உருவானது இக்காப்பியம். தம் காவிய ஆசையைத் தீர்க்கும் வகையில் நாளொன்றுக்கு ஒரு…

பாடி மகிழ்வோம் பைந்தமிழில் – இலக்குவனார் திருவள்ளுவன்

பாடி மகிழ்வோம் பைந்தமிழில்    உலகில் தோன்றிய முதல் மொழி தமிழே. எனவே, பிற அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது. ஆதலின்,,இசை, கூத்து ஆகிய மூன்றிலும் தாய்மைச் சிறப்புடன் இலங்குகிறது. இசைச் செல்வம் மிகுந்தது தமிழ் என்பதை மறந்து பிற மொழிகளில் பாடுவதையே பெருமையாகக் கொள்வது நமது பழக்கமாக உள்ளது. புலவர்களின் இசைப் பாடல்களைச் சிறு அகவையிலேயே நாம் சிறுவர் சிறுமியருக்குப் பயிற்றுவிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த அல்லது எளிமையான பாடல் மெட்டுகளில் பாடிப் பழகுவது தமிழ்ப் பாடல்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே, சில…

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  கண்ணதாசன் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது அவரது திரைப்பாடல்கள்தாம். நம் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளின் பொழுது நம்மோடு தொடர்புடையனவாக – நமக்கே என்று எழுதப்பட்டனவாக – அமைந்த பாடல்கள் வழி நாம் அவரை என்றும் நினைவில் கொள்கிறோம். ஆனால் அவர் பாடலாசிரியராக மாறும் முன்னரும் பின்னருமே கவிஞர், கதையாசிரியர், நாடக ஆசிரியர். இதழாசிரியர், திரைப்படக் கதைஉரையாடலாசிரியர், புதின எழுத்தாளர், காவிய ஆசிரியர், கட்டுரையாளர், எனப் பன்முகமும் கொண்டவர். பிறப்பும் சிறப்பும்   கண்ணதாசன் ஆனி 10, 1958 / 24.6.1927 இல் சிறுகூடல்பட்டியில்சாத்தப்பன்-விசாலாட்சி…

பாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்

பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் : கார்த்திகை 9, 10 – 2045 / நவம்பர் 25, 26 – 2014 எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை பாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல மின்னிதழ் <www.akaramuthala.in> thiru2050@gmail.com கலை, அறிவியல் படைப்புகள் யாவுமே பயன்பாட்டிற்குரியனவே. எனினும் தமிழ்வளர்ச்சி நோக்கில் பார்க்கும் பொழுது, கல்வியில் அன்றாடப் பயன்பாட்டிற்கு முதன்மை அளிக்க வேண்டும். ‘தமிழறிவியல்’ அல்லது ‘அறிவியல் தமிழ்’ எனத் தனியாகக் கற்பிக்கத் தேவையில்லை. முதல் வகுப்பிலிருந்தே பாடநூல்கள் வாயிலாகப் பயன்பாட்டு முறையில்…

பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ் முதுகலை – உயராய்வுத் துறை எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை கார்த்திகை 10 & 11, 2045 –  நவம்பர் 26  & 27 2014  

‘இந்தியால் தமிழ் கெடும்’ என உணர்த்திய இலக்குவனார்

‘இந்தியால் தமிழ் கெடும்’ என உணர்த்திய இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் திங்கள், 17 நவம்பர் 2014 (18:18 IST) Share on facebook Share on twitter More Sharing Services (கார்த்திகை 1 / நவம்பர் 17ஆம் நாள், தமிழறிஞர் இலக்குவனார் பிறந்த நாள்) பழைய இலக்கியங்களை ஏட்டிலிருந்து அச்சிற்குக் கொண்டு வந்தது, உரை எழுதியது, பிற மொழிச் சொற்களை நீக்கியது எனப் பல்வேறு செயல்பாடுகளால் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்கள் தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தினர். இவர்களுள் பலர் எழுத்தால் தொண்டாற்றினர்; சிலர்…

இரண்டாம் ஆண்டில் ‘அகரமுதல’

  ‘அகரமுதல’ மின்னிதழ் இரண்டாம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் அடிஎடுத்து வைக்கின்றது. இதன் வளர்ச்சியில் நாட்டம் கொண்ட படிப்பாளர்கள் படைப்பாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நன்றியைத் தெரிவிக்கிறோம்.   ‘அகரமுதல’ மின்னிதழ் அடைய வேண்டிய இலக்கு இன்னும் தொலைவில் உள்ளது. இருப்பினும் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கின்றது.   நற்றமிழில் நடுவுநிலையுடனும் துணிவுடனும் செய்திகளையும் படைப்புகளையும் தரும் மின்னிதழ் எனப் படிப்போர் பாராட்டுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. தமிழ் மொழி, தமிழினம், ஈழத்தமிழர் நலன், கலை, அறிவியல், தொல்லியல் முதலான பல்துறைச் செய்திகள், கதை, கவிதை, கட்டுரை, நாடகம்…

தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழ் மொழி தமிழ்நாட்டின் அனைத்து நிலைகளிலும் நிலைத்து நிற்கும் மொழியாக இருக்க வேண்டுமென்பது நம் இன்றைய கனவு மட்டும் அல்ல; பல நூற்றாண்டுக் கனவாகும். ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் ஊடக மொழியாகவும் வேலைவாய்ப்பு மொழியாகவும் வணிக மொழியாகவும் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் எனத் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால், இத்தகைய நிலையை எட்டும் காலம்…