கலைச்சொல் தெளிவோம் 27 : முகிலம் – nebula
27. முகிலம் – nebula குறுங்கோள் வகைகளையும் நம்மிடம் பழங்காலந்தொட்டு நிலவும் சொற்களின் அடிப்படையில் பின்வருமாறு மீட்டுருவாக்கம் செய்வதே எளிமையாக உள்ளது. கார்பன் என்றால் கரியம், கரி, (வேளா.) கரிமம்( பொறி., சுற்., மீனி., மனை.) கார்பன் (சுற்.) எனக் கூறுகின்றனர். கரி(23) என்பதன் அடிப்படையில் கரியம் மிகுதியாக உள்ளது கரிமி எனலாம். இரும்பு(29) என்பதன்அடிப்படையில்இரும்பு மிகுதியாக உள்ளது இரும்பி எனலாம். மாழை மிகுதியாக உள்ளது மாழையம் வெண் (254), செம்(359), வெள்ளிடை(1) என்னும் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். வெண்மை நிறமானது வெண்மி…
கருவிகள் 1600 : 121 – 160 : இலக்குவனார் திருவள்ளுவன்
121. இடைவீழ் மழைமானி – interceptometer : மரங்களின் கீழ் அல்லது இலைதழைகளின் வழியாக விழும் மழையளவை அளக்கும் மழைமானி. இடைவெட்டு மழைநீர் அளவி (-இ.) எனச்சொல்வதைவிட இடைவீழ் மழைமானி என்பது ஏற்றதாக அமையும். 122. இடையீட்டு அளவி – slip gauge / Gauge block / gage block / Johansson gauge / Jo blocks : இடைவெளியைத் துல்லியமாக அளவிடும் கருவி. நேர் பொருளாக நழுவு அளவி / நழுவல் அளவி என்றெல்லாம் சொல்லாமல்…
கருவிகள் 1600 : 1 – 40 – இலக்குவனார் திருவள்ளுவன்
‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி – U-tube manometer ‘வளை ப’(U) வடிவக் குழாய் வளியழுத்தமானி > ‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி அகச்சிவப்பருகு படவரைவு கதிர்நிரல் மானி(அ. ப. க) – near-infrared mapping spectrometer (nims) அகச்சிவப்பு ஒளி முனைவுமானி (அ.சி.ஒ.மு.மா) – infrared photo-polarimeter (isophot) : வான்பொருள் வெளிப்படுத்தும் அகச்சிவப்புக் கதிரியத்தைக் கண்டறிய உதவும் கருவி. அகச்சிவப்பு நிறமாலைமானி – infrared spectrometer : வேதியல் கலவைகளின் செறிவை அகச்சிவப்புக் கதிரியத்தை அளப்பதன் மூலம் கண்டறியப்பயன்படும் கருவி. அகச்சிவப்பு…
கருவிகள் 1600 : 81 – 120 : இலக்குவனார் திருவள்ளுவன்
81. ஆரையளவி – fillet gauge / radius gauge 82. ஆவன்னா – இகர அளக்கைமானி – beta-gamma survey meter : அளவை மானி என்றால் அளவிடும் கருவி( guage) எனத் தவறாக எண்ணலாம். எனவே, அளக்கை மானி எனலாம். 83. ஆவன்னாக் கதிர் எதிர்ச்சிதறல் தடிம அளவி – beta-ray backscatter thickness gauge : அகரக்கதிருக்கு அடுத்ததை ஆகாரக்கதிர் எனக் குறிக்கும் பொழுது உணவு எனத் தவறாக எண்ணலாம். எனவே, இங்கே ஆவன்னாக்கதிர் எனக் குறிக்கப்பெறுகிறது. 84. ஆவி…
கலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf
28. குறுமி- dwarf ஞாயிற்றைவிடப் பெரியவிண்மீன்களை gaint என்றும் மிகவும் சிறிய விண்மீன்களை dwarf என்றும் தமிழிலேயே ஒலிபெயர்ப்பாகக் குறிக்கின்றனர். அல்லது அரக்கன் என்றும் குள்ளன் என்றும் மாந்தர்களைக் குறிப்பதுபோல் நேர்மொழிபெயர்ப்பாகக் குறிப்பிடுகின்றனர். dwarf – குட்டை, குள்ளமான என வேளாணியலிலும் குள்ளர் எனச் சூழறிவியலிலும் குட்டையான, குள்ளன் என மனையறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், குள்ளமாக உள்ள மனிதர்களைக் குறிக்கும் சொல்லால் விண்பொருளையும் குள்ளன் என்று குறிப்பது பொருத்தமில்லை. குறு(56), குறுக்கை(2), குறுக(6), குறுகல்(7), குறுகல்வேண்டி(3), குறுகல்மின்(1), குறுகா(2), குறுகாது(3), குறுகார்(1),…
இலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனாரின் புதிய பார்வை இலக்குவனார் திருவள்ளுவன் தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் புரிந்து கொள்ளப் பெரும் உதவியாகஇருப்பன உரைகளே ஆகும். இலக்கிய, இலக்கணக் கடலின் கலங்கரை விளக்கங்களாக உரையாசிரியர்கள் திகழ்கின்றனர். உரையாசிரியர் களால் பல மூல நூல்களும் நமக்குக்கிட்டும் வாய்ப்பு அமைந்துள்ளன. நமக்கு வழிகாட்டும் உரையாசிரியர்களுள்இக்காலத்தில் போற்றத் தகுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர்முனைவர் சி.இலக்குவனார். உரையாசிரியர்கள் இலக்கிய விளக்கம்நமக்குப் பயன்தருகின்றன என்பது ஒரு பக்கம். மறுபுறமோ, அவர்கள், தம் காலச்சூழலுக்கேற்ற உரை விளக்கம் அளித்தும் தம் விருப்பு வெறுப்புக்கேற்பமூலநூல்களை அணுகியும் பொருந்தா உரைகளும் அளித்துள்ளனர்…
கருவிகள் 1600 : 41 – 80 : இலக்குவனார் திருவள்ளுவன்
கருவிகள் 1600 : 41 – 80 : இலக்குவனார் திருவள்ளுவன் 41. அதிர்வுக்கோல்மானி – vibrating reed meter [ அதிர்வுக்கோல்மானி: இயற்கையான அதிர்வு நிகழ்வெண்களுடைய கோல்களைப்பயன்படுத்தும் ஒரு வகை நிகழ்வெண்அளவுமானி. ( ம.660)] 42. அதிர்வுமானி – vibrometer / vibration meter : அதிர்வு அலைவீச்சுகளை அளவிடும் கருவி. 43. அதிர்வுவரைவி – vibrograph : அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவி. 44. அமிழ்த்தளவி – dip guage 45. அமிழ்வு ஒளிவிலகல்மானி – immersion refractometer 46….
கலைச்சொல் தெளிவோம் 25 : உலவி-moon / satellite
25 : உலவி-moon / satellite வானில்ஒருகோளைச்சுற்றி – உலவி – வரும் விண்பொருளைmoon/satellite என்கின்றனர். வானியல், மனையியல், கணக்கியல் ஆகியவற்றில் மூன் / moon – நிலா, திங்கள், மதி எனக் குறிப்பிட்டு இருப்பினும் காலத்தைக் கணிக்க உதவும் திங்களை மட்டும்தான் இது குறிப்பதாக அமையும். இவ்வாறு நாம் மூன்/moon என்றால் நிலவைத்தான் நினைப்போம். எனவே, நிலா என்னும் சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்தினால் பொருட்குழப்பம்தான் வரும். உலவு(1) என்னும் சங்கச் சொல் அடிப்படையில் வானில் உலவி வருவனவற்றை உலவி என்று சொல்வதே பொருத்தமாக…
கலைச்சொல் தெளிவோம் 24 : யாணர் – fresh income
24. யாணர் – fresh income யாணர்(86), யாணர்த்து(7), யாணரஃது(1), எனப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் கையாண்டுள்ளனர். பொதுவாகப் புது வருவாய் என்பது செல்வத்தை மட்டுமல்லாமல் புதிய விளைச்சல், புதிய உணவு என்ற வகையில் எல்லா வளத்தையும் குறிக்கின்றது. புதிது படற்பொருட்டே யாணர்க் கிளவி என்னும் தொல்காப்பியத்திற்கேற்ப (உரி.21) புதியனவெல்லாம் யாணர் எனக் குறிக்கப்பட்டுள்ளன. சான்றுக்குச் சில பார்ப்போம். பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. (பதிற்றுப்பத்து : 24.30) அறாஅ யாணர் அகன் றலைப் பேரூர்ச் (பொருநர் ஆற்றுப்படை: 1) இருங் கதிர்…
கலைச்சொல் தெளிவோம் 23 : எக்கர் – Sand hill; sandy
23 எக்கர் – Sand hill; sandy மணற்குன்று எக்கர் என்பது பெருமணற்பரப்பை, மணற்குன்றைக் குறிக்கும் 54 பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அவற்றில் சில : எக்கர் இட்ட மணலினும் பலவே (புறநானூறு: 43.23) நில வெக்கர்ப் பல பெயரத் (பொருநராற்றுப்படை: 213) தூஉஎக்கர்த் துயில் மடிந்து (பட்டினப்பாலை 117) படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர் (அகநானூறு 11.9) முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்(நற்றிணை 15.11) sandy-மணல்மிகு எனப் பொறிநுட்பவியலிலும் மணல் கொண்ட எனக் கால்நடை அறிவியலிலும் பயன்படுத்துகின்றனர். அதைவிட எக்கர்…
கலைச்சொல் தெளிவோம் 22 : அட்டில்- cuisine
அட்டில்- cuisine தமிழில் சமையலறை எனப் பொதுவாகச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் இருவகையாகச் சொல்லப்படுகிறது; kitchen-அடுக்களை, சமையலறை என வேளாண்துறையிலும் மனை அறிவியல் துறையிலும் கையாளப்படுகின்றது. cuisine-என்பதும் சமையலறை என்றே கையாளப்படுகிறது. அவற்றுக்குத் தமிழிலும் தனித்தனிச் சொற்களைக் கையாளலாம். புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறுபாண் ஆற்றுப்படை 132 அறம்நிலைஇய அகன்அட்டில் – பட்டினப் பாலை 43 விருந்துண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில் – பட்டினப் பாலை 262 அட்டில் ஓலை தொட்டனன் நின்மே –நற்றிணை 300.12 உதியன் அட்டில் போல ஒலிஎழுந்து –…
பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார்
பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார் மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர்திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகளைப் புறக்கணித்து மகனைமட்டுமேஉயர்த்தும் வகையில் அவர் எழுதியுள்ளதாகப் பலரும்தவறானவிளக்கங்கள்அளித்துள்ளனர். இவற்றை மறுத்து மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும்பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தைமகற்காற்றும் நன்றி, மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள்முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச்சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கி யுள்ளார். இவ்வாறுபெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின் விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும்…
