வெருளி நோய்கள் 381-385 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 376-380 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 381-385 புனைவுரு பாத்திரமான தித்தி மனிதன்(Candyman) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தியன் வெருளி.தித்தி மனிதன் பாத்திரம் திகிலூட்டுவதால் இப்படத்தைப் பார்த்தாலும் தித்தி மனிதன் தொடர்பான செய்திகளைப் படித்தாலும் தொடர்புடை படங்களைப் பார்த்தாலும் பேரச்சம் கொள்கின்றனர்.00 இன்மா (cake) மீதான மிகையான பேரச்சம் இன்மா வெருளி.cake என்பதற்கு அணிச்சல், இனிப்பப்பம், இனியப்பம், இன்னப்பம், மாப்பண்டம் எனப் பலவாறாகக் கூறுகின்றனர். நான் இன்மா எனச் சுருக்கமாகக் கூறுகிறேன்.இனிப்பு மீதும் இனிப்புப் பொருள்கள் மீதும் வெருளி உள்ளவர்களுக்கு இன்மா…
வெருளி நோய்கள் 376-380 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 371-375 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 376-380 இன்கண்டு(chocolate)பற்றிய அளவற்ற பேரச்சம் இன்கண்டு வெருளி.‘சாக்கலேட்டு’ அல்லது ‘சாக்கொலேட்டு’ என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இது மத்தியக் கால அமெரிக்கச் சொல் ஆகும். கல்கண்டு என்பதன் அடியொற்றி இதன் இனிப்புச் சுவை அடிப்படையில் தமிழில் இன்கண்டு எனலாம்.00 தித்தி (candy) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தி வெருளி.‘மிட்டாய்’ என்பது தமிழ்ச்சொல்லல்ல. karamela என்னும் கிரேக்கச் சொல்லை இன்பண்டம், தித்தி எனச் சொல்லலாம். எனினும் chocolate என்பதை இன்கண்டு எனக் குறித்துள்ளதால் இதனைத்…
மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல்
மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல் நடைபெற்றது. தி. பி.2056, ஆவணி 18/ 03.09.2025 முற்பகல் இந்நிகழ்வு அறிவியல் நூற்கள் கூர்ந்தாய்வர்களிடையே நிகழ்ந்தது. இலக்குவனார் திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் குறித்த நினைவுரையாற்றினார். தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம், தமிழ்ப்போராளி இலக்குவனார் குறித்த புகழுரை ஆற்றினார். தே.மொ.ஊ. மூத்த வளமையர் முனைவர் வின்சுடன் நிறைவுரை யாற்றினார். இலக்குவனார் நினைவேந்தலை முன்னிட்டு, இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தேசிய மொழிபெயர்ப்பு ஊழியத்திற்கு இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பின் வரும் நூல்கள் முதுநிலை…
வெருளி நோய்கள் 371-375 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 366-370 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 371-375 இறைமம்(spiritual thing)சார்பானவை குறித்த வரம்பற்ற பேரச்சம் இறைம வெருளி.இதனை ஆன்மா என்றும் ஆன்மாவைத் தமிழில் ஆதன் என்றும்உயிர் நலம்சார்ந்த என்றும் குறிப்பிடுகின்றனர். எனினும் நடைமுறையில் சமயம் சார்ந்தும் இறை நெறி சார்ந்தும் உள்ளது. எனவே, இதனை இறைமம் எனக் குறிப்பிட்டுள்ளேன்.00 இறைமை தொடர்பான வரம்பற்ற பேரச்சம் இறைமை வெருளி.இறைமை நூலைப்படிப்பதால் மட்டுமல்லாமல், இறைமை வழிபாடு, தொடர்பான நிகழ்வுகள் முதலான அனைத்திலும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.காதல் தோல்வியால்கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே…
வெருளி நோய்கள் 366-370 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 361-365 – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 366-370 இறால் மீன்(shrimp) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறால் வெருளி.இறால் மீனைப் பார்த்தால் அல்லது சமைத்த இறாலைப் பார்த்தால் அல்லது இறால் மீனை உண்டால் பேரச்சம் வரும்.விலங்கு வெருளி(Zoophobia) உள்ளவர்களுக்கும் இப்பி வெருளி (Ostraconophobia) வருபவர்களுக்கும் இறால் வெருளி வர வாய்ப்புண்டு. 00 இறுதிச்சடங்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் இறுதிச்சடங்கு வெருளி.பிறரது இறுதிச்சடங்கைப்பார்க்கும் பொழுது அல்லது பிறரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் பொழுது துயரம் வருவதாலும் தனக்கோ தன் வீட்டிலுள்ள மூத்த உறுப்பினர்களுக்கோ பிறருக்கோ இறுதிச்சடங்கு…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 9 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 8 தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 9 சூரியன் – சூர்ய செக்கு – செக்கு செம்பருத்தி – கெம்பத்தி செருப்பு – செர்ப்பு செவி – கிவி செவ்வரி – கெம்பரி செவ்வவரை – கொம்பவரே செவ்வாம்பல் – கெம்பாவல் செவ்வாழை – கெம்புபாளெ சேரி – கேரி சேலை – சேல சோளம் – (ஞ்)சோள சோளிகை – (ஞ்)சோளிகை தகரம் – தகர தகர் – தகர் தக்காளி தக்காளி தக்கோலம் – …
வெருளி நோய்கள் 361-365 – இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் 356-360 தொடர்ச்சி) 361. இளம்பிள்ளைவாத வெருளி-Poliosophobia இளம்பிள்ளைவாதம்(Polio) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இளம்பிள்ளைவாத வெருளி. இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிசு (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிசு தீ நுண்மம். இது தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது. நுரையீரல் அழற்சி, இதயக்கீழறை மிகுவழுத்தம், அசைவின்மை, நுரையீரல் சிக்கல்கள், நுரையீரல் வீக்கம், அதிர்ச்சி, நிரந்தரத் தசை வாதம், சிறுநீர்ப்பாதைத் தொற்று, இடுப்பு, கணுக்கால், பாதங்களின் குறைபாடுகளுள், ஊனம், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். எனவே, இக்குறைபாடுகள் நேரும்…
வெருளி நோய்கள் 346 – 350 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 341 – 345 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 346 – 350 346 இருள் வெருளி-Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia இரவு, இரவுப்பொழுதில் வரும் இருட்டு முதலியன குறித்த வரம்பு கடந்த பேரச்சம் இரவு வெருளி/ இருண்மை வெருளி/ இருள் வெருளி/ இரா வெருளி என அழைக்கப்பெறுகின்றது. எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதான். எனவே நாம் இருள் வெருளி என்றே அழைப்போம்.இரவில் வெளியே செல்லுதல், இரவில் தனியாகப் படுத்தல், இரவுப்பொழுதில் யாரேனும் வருதல் அல்லது யாரையாவது பார்த்தல், இருட்டுச் சூழல் என இவர்கள் பேரச்சம் கொள்வர்.Nyctohylo…
வெருளி நோய்கள் 341 – 345 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 336 – 340 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 341 – 345 341. இருப்பு இயக்க வெருளி – Fysikophobia இருப்பு இயக்கம்(physical plane of existence) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இருப்பு இயக்க வெருளி. 00 342. இருப்புப்பாதை கடப்பு வெருளி – Bahnubophobia இருப்புப்பாதை கடப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் இருப்புப்பாதை கடப்பு வெருளி. கடப்புவெருளி(Agyrophobia/ Dromophobia/ Banmaxianphobia) உள்ளவர்களுக்கும் தொடரி வெருளி(Siderodromophobia) உள்ளவர்களுக்கும் இவ்வெருளி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்புப்பாதையைக் கடப்பது சடடப்படியும் தவறு. நமக்குக் கேடு…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 8 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 8 கன்னடச் சொற்கள் உணர்த்தும் தமிழ்த்தாய்மை கன்னடச் சொற்களைப் பார்ததால் ஆராயாமலேயே அவை தமிழ் அல்லது தமிழில் இருந்து மாற்றம் பெற்றவை எனலாம். எனவே, கன்னடத்தின் தாய் தமிழ் என்பது சொல்லாமலே விளங்கும். அச்சொற்கள் சிலவற்றைப் பின்வருமாறு பார்ப்போம் ஆடை அணிப் பெயர்கள், இடப்பெயர்கள், உறவுப்பெயர்கள், ஐம்பூதப் பெயர்கள், கருவிப்பெயர்கள், கனிமப்பெயர்கள், காலப் பெயர்கள், சினைப்பெயர்கள், தட்டுமுட்டுப் பெயர்கள், நிறப்பெயர்கள், பறவைப்பெயர்கள், விலங்குப் பெயர்கள், நீர்வாழ்வனவற்றின் பெயர்கள், ஊர்வனவற்றின்…
என்றும் இணைந்து வாழ்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
என்றும் இணைந்து வாழ்வோம்! (“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” என்னும் திரைப்பட மெட்டில் இதனைப் பாடலாம்.) உலகெனும் வீட்டில் அனைவரும் உறவினர் என்று சேர்ந்து வாழ்வோம் – நாம் என்றும் சேர்ந்து வாழ்வோம் – இந்த வீடும், நாடும் கடந்த உலகம் ஒன்று என்று வாழ்வோம் – நாம் ஒன்று பட்டு வாழ்வோம்! நிறமென்ன உருவென்ன பிறப்பென்ன தொழிலென்ன எல்லாம் ஒன்று என்போம் எல்லாம் ஒன்று என்போம்! பகையில்லை போரில்லை இழிவில்லை தாழ்வில்லை என்று இணைந்து வாழ்வோம் – இனி என்றும் இணைந்து…
வெருளி நோய்கள் 336 – 340 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 331 – 335 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 336 – 340 336. இருகாட்சி வெருளி – Diplophobia காண்பது இரட்டையாகத் தெரிவது குறித்த பேரச்சம் இருகாட்சி வெருளி. பெரியவர்கள் தங்களுக்கு இரண்டு இரண்டு உருவமாகத் தெரிவதாகக் கூறும் பொழுது அதைக்கேட்கும் சிறுவர்கள் தங்களுக்கும் அவ்வாறு தெரிவதாகக் கருதிப் பேரச்சத்தை வளர்த்துக் கொள்வர். நாளடைவில் இப்பேரச்சம் வளர்ந்து வெருளியாக மாறும். diplos என்றால் இரட்டை எனப் பொருள். 00 337. இருபடிச் சமன்பாட்டு வெருளி-Quadrataphobia இருபடிச்சமன்பாடு குறித்த அளவுகடந்த பேரச்சம் இருபடிச்சமன்பாட்டு…
