சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன் 106. Abiding கீழ்ப்படிகின்ற கடைப்பிடிக்கின்ற   நெறிமுறைக்கு அல்லது விதிமுறைக்குக் கீழ்ப்படிகின்ற அல்லது அதனைக் கடைப்பிடிக்கின்ற செயல். 107. Abiding interest நிலை நலன்   நிலையான அக்கறை அல்லது நிலையான ஆர்வம் கொண்டிருத்தலைக் குறிக்கிறது.   ஒரிசா குத்தகைச் சட்டம், சொத்தில் நிலையான ஆர்வம் கொண்டவர், உறுதியாக .. . . .  எப்போதும் நிலத்தில் நிலையான ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்…

சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 101. abide by arbitration பொதுவர்  தீர்ப்புக்கு இணங்கு   Abide – அமைந்தொழுகு, மதித்து நடத்தல்; எனினும் இணங்கு என்னும் சுருக்கச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.   arbitration என்றால் நடுத்தீர்ப்பு என்கின்றனர். தீர்ப்பு என்றாலே நடுநிலையில்தான் இருக்க வேண்டும். நடுவர் தீர்ப்பு என்றும் சொல்கின்றனர். magistrate என்பவரை நடுவர் என்பதால் வேறுபாடு காட்ட வேண்டி உள்ளது. இரு தரப்பிற்கும் ஒத்திசைவு காண்பதற்குரிய பொதுவானவர் என்ற பெயரில் பொதுவர் எனலாம்….

கனடா, தொல்காப்பிய மன்ற இணையக்  கருத்தரங்கு – 06/07.2024

அன்புடையீர்! கனடா, தொல்காப்பிய மன்றத்தின் சனவரி மாத “மாதாந்தக் கருத்தரங்கு”  சனவரி மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை மார்கழி 21, 2054  / 06. 01. 2024), மாலை 6 மணிக்கு , தமிழ் நாட்டு நேரம்  மார்கழி 22, 2054  ஞாயிறு 07.01.2024 காலை 4.30 மணிக்கு  மெய்நிகர் வழியாக நடைபெற இருக்கின்றது என்பதை அன்புடன் அறியத் தருகின்றேன். சிறப்புரை:   முனைவர் செல்வநாயகி சிரீதாசு நெறியாளர் : மருத்துவர் மேரி கியூரி போல் உரையாளர்களும் தலைப்புகளும்  திரு இலக்குவனார் திருவள்ளுவன் – தமிழ்க்காப்புத் தலைவர்…

சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 96. Abeyance   செயலற்ற தன்மை இடைநிறுத்தம்  செயல்நிறுத்தம் நிறுத்தி வைத்தல்   உரியரிலாநிலை   காலவரையறையற்ற அல்லது இடைக்கால செயலற்றநிலையைக் குறிப்பது.   இடைநீக்கம் என்கின்றனர். அவ்வாறு சொன்னால் suspension எனத் தவறான பொருள் கொள்ள நேரலாம். ஆங்கிலத்தில் பொருள் சரிதான். ஆனால், தமிழ் வழக்கில் இடையில் விலக்கி வைப்பது வேறு. முடிவு காண வழியில்லாமல் செயல்பாடின்றி ஒத்தி வைப்பது வேறு. ஒரு கோப்பு…

சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 91. Abetment of suicide of child குழந்தைத் தற்கொலைக்கு உடந்தை   குழந்தை அல்லது இளவர் தற்கொலை புரிந்துகொண்டால் அதற்கு உதவிய அல்லது உடந்தையாக இருந்து அல்லது தூண்டுதலாக இருந்தவர் தண்டிக்கப்படுவார்.   18 அகவைக்குட்பட்ட / மனநலங் குன்றிய/பிற ழ் மனம் உடைய/மடமை மிகுந்த/போதையில் உள்ள/ எவரேனும் தற்கொலை புரிந்து கொண்டால், இதற்கு உடந்தையாக இருப்பவர் மரணத் தண்டனை அல்லது வாணாள் தண்டனை…

தமிழ்த் தேசியத் திருவிழா!, தமிழ்த் தன்னுரிமை இயக்கம், சென்னை

எங்கள் தமிழ் வாழ்க! தமிழ்த் தன்னுரிமை இயக்கம் முத்தமிழ்க் காவலர் ஐயா கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா! தமிழர் திருநாள் பொங்கல் விழா! தமிழ் வல்லார் பெருமக்களுக்கு விருது வழங்கும் விழாவெனத் தமிழ்த் தேசியத் திருவிழா! இடம்: செ நா தெய்வநாயகம் பள்ளி, வெங்கடநாராயணன் சாலை, தியாகராயநகர் சென்னை-600017 நாள்: திருவள்ளுவர் ஆண்டு மார்கழித்திங்கள் 26 2054(10/1/2024) புதன்கிழமை மாலை 4:00 மணி கவியரங்கம்: தலைப்பு: வெல்லும் தமிழ்நாடு!  தலைமை: கவிஞர் தாமரைப்பூவண்ணன் ஒருங்கிணைப்பு: கவிஞர் நல்ல…

சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 86. Abetment of assault தாக்குதலுக்கான / தாக்க முனைதலுக்கான உடந்தை   திடீரென, கடுமையான ஆத்திர மூட்டலினாலின்றித்,   தாக்குதல் நடத்துதல் அல்லது குற்ற வன்முறையைப் பயன்படுத்தல் இ.த.ச.பிரிவு 134 இன் கீழ்க் குற்றமாகும்.   தரைப்படையில் அல்லது கப்பற்படையில் அல்லது வான்படையில் உள்ள அதிகாரியோ வீரரோ மீகாமரோ(கப்பலோட்டி வீரர்) வான்படைஞரோ அலுவற்பொறுப்பை நிறைவேற்றும் எந்த ஓர் உயர் அதிகாரியைத் தாக்கினாலும் அஃது ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனைக்கும் தண்டத்தொகை விதிப்பிற்கும் உரியது.   தாவு/தாக்கு …

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கமும் என்னூல் திறனரங்கமும் – 07.01.24

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கமும் என்னூல் திறனரங்கமும் – இணைய அரங்கம் மார்கழி 23, 2053 / 07.01.2024 காலை 10.00 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.   (திருவள்ளுவர், திருக்குறள் – 1031) தமிழே விழி!                                                                      தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை:  கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் கலைமாமணி முனைவர் சேயோன் முனைவர் இரா.பிரபா, உதவிப் பேராசிரியர்,…

சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொகுப்பு) சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 81. Abetment by aid தூண்டல் உதவி   குற்ற உடந்தை உதவி – குற்றவாளி, குற்றம் புரிவதற்கு வேண்டுமென்றே உதவி, தூண்டுதலாக இருப்பது.   குற்றம் புரிய அல்லது குற்றச் செய்கையை எளிமையாக்கத் தூண்டுநர் உதவுகையை இது குறிக்கிறது. குற்றவாளிக்கு உதவும் எண்ணம் இருப்பதே முதன்மையானது.   தூண்டுதல் என்பது, குற்றவாளி குற்றத்தைச் செய்யும்போது, குற்றம் புரிய ஏவுதல் அல்லது சொல்லிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல் அல்லது…

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு ஆடி 27, 2054 —– ஆகட்டு 12, 2023 பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள்  1/7 கலைச்சொற்கள், துறைச் சொற்கள், தொழில் நுட்பச் சொற்கள் எனச் சிலவாறாகக் கூறப்படும் சொற்கள் இயல்பான வழக்கில் கருதப்படும் பொருள்களுக்கு மாறாகச் சிறப்புப் பொருள்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு சொல்லே பயன்படும் இடத்திற்கு ஏற்ப இயல்புச் சொல்லாகவோ சிறப்புச் சொல்லாகவோ பயன்படுத்தப்படுகிறது. எனவே, கலைச்சொல் என…

அதிகார வெறி இருப்பின், பாசக ஆளும் மாநில முதல்வராகலாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிகார வெறி இருப்பின், பாசக ஆளும் மாநில முதல்வராகலாமே! பாசக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் ஆட்டம் அனைவரும் அறிந்ததே! அவர்களை ஆட்டுவிப்பவர்கள் ஒன்றிய அரசின் முதன்மைப் பொறுப்புகளில் இருப்பதை நாமறிவோம். எனவே, தமிழக ஆளுநர் தனியரசு நடத்துவதற்கு அவர்களை மட்டும் குறை கூறிப் பயனிலை. எனினும் பின்னணியில் இருப்பவர்கள் மறைமுகமாகச் செயற்படுவதால் ஆளுநரின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலே அது பின்னணியினரையும் குறிக்கும். எனவே, தமிழ்நாட்டு ஆளுநரை மையப்படுத்தியே இக்கட்டுரை அமைகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய  தென் மாவட்டங்கள் பெருமழையால், ஊர்களை மூழ்கடிக்கும் வெள்ளப்பெருக்கால்…

சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 71. Abbreviate சுருக்கு   நூல் முதலிய எதையும் சுருக்குதல், எனினும் குறிப்பாக ஒரு தொடரைச் சுருக்கித் தலைப்பெழுத்துச் சொற்களால் குறிப்பிடல்.திருவள்ளுவர் ஆண்டு என்பதைத் தி.ஆ. எனக் குறிப்பிடல்போல்.   காண்க: Abbreviation 72. Abbreviation           குறுக்கம்   குறியீடு சுருக்கக் குறியீடு குறுங்குறி குறிப்பெழுத்து சொல்குறுக்கம் சுருக்கீடு   ஒரு சொல் அல்லது தொடரின் சுருக்கம். திருவள்ளுவருக்குப் பின் என்பதைத்…