தமிழ்,தமிழர்,தமிழ் நிலம் – இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் : உரையரங்கம்
தமிழ்க்காப்புக் கழகம் ஆடி 29, 2053 / 14.08.2022 ஞாயிறு காலை 10.00 இணைய வழி இந்திய விடுதலை நாள் உரையரங்கம் தமிழ், தமிழர், தமிழ் நிலம் – இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் உரையாளர்கள்: தோழர் தியாகு தோழர் பொழிலன் திருவாட்டி புனிதா சிவக்குமார் வரவேற்புரை: திரு. ப.சிவக்குமார் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் நன்றியுரை: : தமிழாசிரியை (உ)ரூபி கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) …
தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும் தமிழ்நாட்டில் – மாமல்லபுரத்தில் – 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டியை அரசு சிறப்பாக நிகழ்த்தி இன்று(09/08/22) நிறைவு விழாவும் நிகழ்கிறது. போட்டியில் வாகை சூடிய அனைவருக்கும் பாராட்டுகள். பங்கேற்ற பிற போட்டியாளர்களுக்கு அடுத்து வெற்றியைச் சுவைக்க வாழ்த்துகள். சிறப்பாக நடத்திய தமிழக அரசிற்கும் வழி நடத்திச் செல்லும் மாண்புமிகு முதல்வர் மு.க.தாலினுக்கும் பாராட்டுகள். ஆடி 12, 2053 / 28.07.2022 முதல் நடைபெறும் சதுரங்க விழாவிற்கு வந்துள்ள 186 நாடுகளிலிருந்து பங்கேற்ற 1,736 பன்னாட்டு வீரர்களும் வீராங்கனைகளும்…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம்
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம் ஆடி 22, 2053 ஞாயிறு , 07.08.2022, காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: கலைமாமணி குத்தாலம் மு.செல்வம் பரதக் கலாலயப் பள்ளி திருபுவனம் ஆத்துமநாதன் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை கலைச்சுடர் மணி சசிரேகா கனகசபை பரதநாட்டியப் பள்ளி கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: தமிழாசிரியை (உ)ரூபி தலைமையுரை…
ஆங்கில விளம்பரங்களை நிறுத்து! – தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தல், தாய் இதழ்
ஆங்கில விளம்பரங்களை நிறுத்து! தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தல் 44ஆவது சதுரங்கப் பெருவிழாவில் ஆங்கில விளம்பரங்களே எங்கும் காணப்படுகின்றன. இது குறித்து ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மேற்கொண்டு சில விவரங்களை அவரிடம் கேட்டோம். அந்த நேர்காணல் இதோ… வணக்கம் ஐயா வணக்கம். ஐயா, நீங்கள் சதுரங்க உலகப் போட்டி தொடர்பாகச் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளீர்கள். அது குறித்து மேற்கொண்டு சில விவரங்களைக் கேட்கலாமா? கேளுங்கள். சொல்கிறேன். நடைபெறும் சதுரங்கப் போட்டியை ஆங்கிலத்தில் குறிப்பிடாமல், 44…
சிறப்புக் கட்டுரை: சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
சிறப்புக் கட்டுரை: சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்! அரசியல் சிறப்புக் கட்டுரை Jul 24, 2022 08:49AMJul 24, 2022 IST : –இலக்குவனார் திருவள்ளுவன் சதுரங்க ஞாலப் போட்டி 2022 இற்கு வாழ்த்துகள்! 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி ஆடி 12, 2053 / 28.07.2022 -ஆடி 25, 2053/ 10.08.2022 நாட்களில் நடைபெறுகிறது. சதுரங்க ஞாலப்போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது. நேப்பியர் பாலத்தைச் சதுரங்கக் கட்டங்களாக வண்ணந்தீட்டி விளம்பரப்படுத்துவதிலிருந்து எல்லா வகையிலும் முதல்வர் அவர்கள் அறிவுரைக்கிணங்க அதிகாரிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்….
அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆங்கில மோகம் கொண்ட அதிகாரிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(6. புதிய ஆட்சித்தமிழ்ச்சட்டம் தேவை தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 7. அதிகாரிகளின் ஆங்கில மோகத்தை அகற்றுங்கள்! அல்லது அவர்களை உயர் பொறுப்புகளில் இருந்து அகற்றுங்கள்! [குறிப்பு: தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 7. திரைத்துறையின் தமிழ்க்கொலைகளைத் தடுத்திடுக ; 8. இதழியல் துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்திடுக! என்பனவற்றைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். தேவை கருதி இப்பொழுது அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆங்கில மோகம் கொண்ட அதிகாரிகள் குறித்து எழுதுகிறோம்.] சதுரங்க ஞாலப் போட்டி 2022 இற்கு வாழ்த்துகள்! 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி …
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 10,11 & 12 : இணைய அரங்கம் – சூலை 24,2022
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 10,11 & 12: இணைய அரங்கம் ஆடி 08, 2053 ஞாயிறு , சூலை 24, 2022, காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: கவிஞர் முனைவர் மு.பொன்னவைக்கோ முன்னை மும்மைத் துணைவேந்தர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ மேனாள் தலைவர், பாரதிதாசன் உயராய்வு மையம் முனைவர் (இ)லிங்க.இராமமூர்த்தி ஆய்வுத் தகைமையாளர் . இந்தியக் குமுகாய அறிவியல் ஆராய்ச்சிக் கூட்டமைப்பு. கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 2/2 பழந்தமிழ் நிலை என்னும் தலைப்பில் பழந்தமிழ்ச் சொற்களைப்பற்றி விளக்குவதுடன் தற்போது வழக்கு வீழ்ந்துள்ள பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அளித்து இவற்றை வழக்கில் கொணர்ந்து தமிழை வளப்படுத்த வேண்டும் என்கிறார். அடுத்த தலைப்பில் பழந்தமிழின் எழுத்துச் சான்றுகளை இந்தியக் கண்டத்தின் பிற மொழி இலக்கியக் காலங்களுடன் ஒப்பிட்டு விளக்கித் தமிழும் இந்திய அரசின் முதன்மைமொழியாக, அலுவல் மொழியாகத், தேசிய மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்கிறார். பழந்தமிழ்ச் சொல்…
அ.தி.மு.க. வழக்குகள்: நீதிபதிகளும் மனிதர்கள்தாமே!- இலக்குவனார் திருவள்ளுவன்
அ.தி.மு.க. வழக்குகள்: நீதிபதிகளும் மனிதர்கள்தாமே! நீதிமன்றத் தீர்ப்புகள் கருத்தாய்விற்கு உட்பட்டனவே. அவ்வாறு கூறும் பொழுது தீர்ப்புரையை அலுவல் பணியாகக் கருதவேண்டுமே தவிரத் தனிவாழ்வுடன் இணைத்துச் சொல்லக் கூடாது. அஃதாவது தீர்ப்பின் நிறைகுறைகளைக் கூறுகையில் தீர்ப்பாளருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கூறக்கூடாது. இந்த அடிப்படையில் எல்லாத் தீர்ப்புகளும் மேலாய்விற்கு உட்பட்டனவே. தீரப்புகள் சொல்லப்பட்ட சூழலில் தவறுகளுக்கு ஆளானவையாக இருக்கலாம். அதனால்தான் மேல்முறையீடுகள் வருகின்றன. மேல் முறையீட்டில் முந்தைய தீர்ப்புகள் தவறெனச் சுட்டிக்காட்டப்பட்டு மாற்றப்படுகின்றன. எனவே, தீர்ப்புகளை மறைவாக்குகளாகக் கருதி ஒன்றும் சொல்லக்கூடாது என்பதல்ல. அண்மையில் மக்களால்…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் – சூலை 03,2022
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் ஆனி 19, 2053 ஞாயிறு , சூலை 03, 2022, காலை 10.00 “இயக்கமும் நானும்” முனைவர் இல.அம்பலவாணன் நிறுவன இயக்குநர், மக்கள் மேம்பாட்டு வினையகம் தலைமையிடம் : திருச்சிராப்பள்ளி பேராசிரியர் முனைவர் ந.மணிமேகலை இயக்குநர், மகளிரியல் துறைத் தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோழர் ப. பரிமளா தலைவர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி /…
பு தி ய ஆ ட் சி த் த மி ழ் ச் ச ட் ட ம் தே வை! – இலக்குவனார் திருவள்ளுவன்
(5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 6. பு தி ய ஆ ட் சி த் த மி ழ் ச் ச ட் ட ம் தே வை! தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பது கட்சி, சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பாராலும் பலமுறை வற்புறுத்தப்பட்டு வந்தது. தமிழறிஞர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், அரசியலாளர்கள் எனப் பலரும் கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றியும் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினர். இவற்றின் பயனாக, ஆட்சிமொழிச்சட்டம் 1956இல்…
5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக!– தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் 1956 நிறைவேற்றப் பட்டதிலிருந்து இதுநாள் வரை தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்காகப் பல்வேறு அரசாணைகள், தொடர்பான சுற்றறிக்கைகள், மடல்கள், வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்வளர்ச்சித்துறை இணையத்தளத்தில் 02.08.1968 முதல் 02.11.2021 வரையிலான 120 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில முன்னர் வெளியிடப்பட்டவற்றையே வலியுறுத்திப் பின்னரும் வெளியிடப்பட்டனவாக இருக்கின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளமையே தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் எந்த அளவில்…
