தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 4 இலக்குவனார் திருவள்ளுவன்.

(மாசி 24, 2046 / மார்ச்சு 08,2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] பெயர்ப் பலகை:-             பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்; அல்லது முதலில் தமிழில் 5 பங்கு, அடுத்து ஆங்கிலத்தில் 3 பங்கு, தேவையெனில் பிற மொழியில் 2 பங்கு என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என அரசாணை உள்ளதை…

கலைச்சொல் தெளிவோம்! 99& 100. ஒளி வெருளி-Photo Phobia; ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia

99& 100. ஒளி வெருளி-Photo Phobia ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia   ஒள் (118), ஒள்வானமலை(1), ஒளி(76), ஒளிக்கும் (6), ஒளித்த (6), ஒளித்தன்று (1), ஒளித்தாள் (1), ஒளித்தி (1), ஒளித்து (9), ஒளித்தென (1), ஒளித்தேன் (1), ஒளித்தோள் (2), ஒளிப்ப (3), ஒளிப்பன (1), ஒளிப்பார் (1), ஒளிப்பான் (1), ஒளிப்பின் (1), ஒளிப்பு (1), ஒளிப்பேன் (1), ஒளியர் (1), ஒளியவை (1), ஒளியோர் (1), ஒளிர் (13), ஒளிர்வரும் (3), ஒளிரும் (1), ஒளிவிட்ட (2), ஒளிறு (41),…

கலைச்சொல் தெளிவோம்! 98. இரைச்சல் வெருளி-Acousticophobia

 98. இரைச்சல் வெருளி-Acousticophobia   பரிபாடல் திரட்டு இரண்டாம் பாடலில் ஆரவார ஒலி இரை எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இரை என்னும் சொல்லடிப்படையில் பிறந்த சொல்லே இரைச்சல். இரைச்சலைக் கேட்கும் பொழுது ஏற்படும் பேரச்சம் இரைச்சல் வெருளி. இரைச்சல் வெருளி-Acousticophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 97. ஒலி வெருளி-Phonophobia

 97. ஒலி வெருளி-Phonophobia ஒலி (115), ஒலிக்குங்கால் (1), ஒலிக்குந்து 92), ஒலிக்கும் (19), ஒலித்த (1), ஒலித்தல் (1), ஒலித்தன்று (1), ஒலித்து (9), ஒலிந்த (2), ஒலிப்ப (29), ஒலிப்பர் (1), ஒலிபு (1), ஒலிய (1), ஒலியல் (5), ஒலிவரும் (9) என ஒலிபற்றிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. சான்றுக்குச் சில: ஓங்கு திரை ஒலி வெரீஇ, (பொருநர் ஆற்றுப்படை : 206) ஒலி முந்நீர் வரம்பு ஆக (மதுரைக் காஞ்சி : 2) கல்லென்று இரட்ட, புள்ளினம்…

கலைச்சொல் தெளிவோம்! 96. எண் வெருளி-Arithmophobia

கலைச்சொல் தெளிவோம்! 96. எண் வெருளி   எண்(19), எண்கை(1), எண்பதம்(1), எண்பேரெச்சம் (2), எண்மர்(2) என எண்ணிக்கை தொடர்பான சொற்களைச் சங்கப்பாடல்களில் காணலாம். எண் என்பது எண்ணிக்கை பொருளுடன், எட்டு என்ற எண்ணிக்கை, எளிமை ஆகிய பொருள்களையும் தரும் வகையில் சொற்கள் உள்ளன. எண்களைப் பற்றியும் சிலர் அஞ்சுவர். இவ்வாறு எண் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம், எண் வெருளி-Arithmophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 95. உருமு வெருளி -Brontophobia

 95. உருமு வெருளி-Brontophobia உருமு பற்றிய சங்கஇலக்கிய அடிகள் வருமாறு: உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் (நற்றிணை : : 104:10) உருமுப் படு கனலின் இரு நிலத்து உறைக்கும் (ஐங்குறுநூறு :: 320:3) உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து (பதிற்றுப்பத்து : : 30: 42) உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, ( கலித்தொகை : : 45: 3) உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் (அகநானூறு : :92:11) இடி…

கலைச்சொல் தெளிவோம்! 92 – 94. உயர்வு தொடர்பான வெருளிகள்

92 – 94. உயர்வு தொடர்பான வெருளிகள் உயர்பு வெருளி-Acrophobia உயர்நிலை வெருளி-Altophobia உயர வெருளி-Hypsiphobia   ஆழம் பற்றிய அச்சம் வருவதுபோல், உயரம் பற்றிய அச்சமும் இயல்புதானே! சங்கப்பாடல்களில் உயர்(210), உயர்க்குவை(1), உயர்க(3), உயர்த்த(8), உயர்த்து(4), உயர்திணை(1), உயர்ந்த(15), உயர்ந்ததேஎம்(1), உயர்ந்தவர்(1), உயர்ந்தவள்(1), உயர்ந்தன்று(4), உயர்ந்திசினோர்(1), உயர்ந்து(17), உயர்ந்துழி(1), உயர்ந்தோர்(8), உயர்ந்தோருலகு(1), உயர்ந்தோர்நாடு(1), உயர்ந்தோருலகம்(1), உயர்ந்தோன்(1), உயரிநிலைஉலகம்(7), உயர்நிலைஉலகு(5), உயர்பு(4), உயர்வு(2), உயர(2), உயரி(2), உயரிய(6), உயரும்(1), உயருலகு(1) என மலையுச்சி போன்ற உயரமான இடங்களைக் குறிக்கும் வகையிலும் உயரத்தின் அடிப்படையில் பண்பில்,…

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு :3 – இலக்குவனார் திருவள்ளுவன்

[மாசி 17, 2046 / மார்ச்சு 01, 2015 தொடர்ச்சி] [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] படிவங்கள் , பதிவேடுகள்:-             1973 ஆம் ஆண்டில் படிவங்கள், பதிவேடுகள் ஆகிய அனைத்தும் தமிழில்தான் அச்சிட்டு வழங்கப்பட வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் அச்சிடப்பட வேண்டிய சில இருப்பின் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் இசைவைப் பெற்று, இசைவு பெறப்பட்ட…

கலைச்சொல் தெளிவோம்! 91. உணவு வெருளி-Sitophobia

91. உணவு வெருளி-Sitophobia   முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் (பெரும்பாண் ஆற்றுப்படை : 246) சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் (அகநானூறு : 283.5) பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட (மதுரைக் காஞ்சி : 660) வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த (பெரும்பாண் ஆற்றுப்படை : 137) ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், (பட்டினப் பாலை : 191) சிறு புல் உணவு, நெறி பட மறுகி, (அகநானூறு : 377.2) உண்டி கொடுத்தோர்…

கலைச்சொல் தெளிவோம்! 90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia

90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia பொன்னால் வளைத்து இரண்டு சுற்றாக அமைக்கப்பட்ட காற்சரி என்னும் கால்நகையைக் குறிப்பிடுகையில் கலித்தொகை(85.1) ஈரமை சுற்று என்கின்றது. கீழும் மேலுமாக அமைந்த நீச்சல் உடை ஈரணி எனப்படுகின்றது. ஈரறிவு (பதிற்றுப்பத்து : 74.18), ஈருயிர்(அகநானூறு : 72.12), ஈரெழுவேளிர்(அகநானூறு :135.12), ஈரைம்பதின்மர் (புறநானூறு : 2.15; பதிற்றுப்பத்து : 14.5; பெரும்பாணாற்றுப்படை 415) என இரண்டின் அடுக்கு சுட்டப்படுவதைப் பார்க்கிறோம். வாழ்(17), வாழ்க்கை(60), வாழ்க(25), வாழ்கல்லா(1), வாழ்குவன்(1), வாழ்ச்சி(1), வாழ்த்த(10), வாழ்த்தி(20), வாழ்த்தினர்(1), வாழ்த்தினெம்(1), வாழ்த்தினேம்(2), வாழ்த்து(2), வாழ்த்தும்(2),…

கலைச்சொல் தெளிவோம்! 89. இருள் வெருளி

 89. இருள் வெருளி- Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia இருள் (164), இருளி (6), இருளிய (9), இருளின் (1) என இருள் தொடர்பான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து (திருமுருகு ஆற்றுப்படை : 10) அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி, (பெரும்பாண் ஆற்றுப்படை : 1) குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் (மதுரைக் காஞ்சி : 195) உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள் (நற்றிணை : 68.8) நிலவும் இருளும்…

கலைச்சொல் தெளிவோம்! 87. அனைத்து வெருளி

87. அனைத்து வெருளி-Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது. எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர். அனைத்தும், புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266) கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா (மலைபடுகடாம் : 22) அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், (பரிபாடல் : 3:68) அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, (அகநானூறு : 378:16) இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்        அறி அறிவு ஆகாச் செறிவினை…