கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia

கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia    பணி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 9 இடங்களில் இடம் பெற்றிருந்தாலும், பணிவு அல்லது தாழ்தல் என்னும் பொருள்களிலேயே வந்துள்ளன. தொழில் என்னும் சொல்தான் 84 இடங்களில் பல்வகை வேலைகளையும் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. மருந்தில் கூற்றத்து அருந்தொழில் (புறநானூறு : 3.12) முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலில் (பரிபாடல் : 3.71) செய்தொழில் கீழ்ப்பட்டாளோ, இவள்? (கலித்தொகை : 99.12) தொழில் செருக்கு (அகநானூறு : 37.6) மழை தொழில் உதவ (மதுரைக்…

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 7 : இலக்குவனார் திருவள்ளுவன்

(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.]   வாழும் மூத்த மொழித் தகுதி             வாழ்விழந்த மொழிக்குத்தான் செம்மொழித் தகுதி தருவோம் எனக்கூறி உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கு அத்தகுதி மறுக்கப்படுவதால், ‘வாழும் மூத்தமொழி’ என்ற தகுதியைத் தமிழுக்குத் தந்து தமிழ்க்கண்டத்திலும் ஐ.நா. போன்ற உலக அமைப்புகளிலும்…

எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி)  தாய்நிலமாகிய தமிழ்நிலத்திலேயே தமிழுக்கு மதிப்பில்லாச் சூழல் உள்ளது. கல்வியிலும் பணியிலும் வழிபாட்டிலும் ஆட்சியிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. உலகத்தமிழர்களிடையே இன்னல்கள் ஏற்படும் பொழுது குரல்கொடுத்து குறைகளைந்து உதவும் உணர்வு பெரும்பான்மையரிடம் இல்லை. இருந்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலையும் நிலப்பறிப்பும் உறுப்புகள் உடைமைகள் இழப்பும் கற்பழிப்பும் வதைவெறியும் ஆகிய பேரவலம் நிகழ்ந்திருக்காதே! இங்கு நாம் தமிழே படிக்காமல் பணியாற்றவும் வணிகத்தில் சிறக்கவும் வாழ்வாங்கு வாழவும் இயலும். எனவே, தேவையில்லாத மொழியைக்…

இலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்!

மக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும்!   நம் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் பொழுது அத் தொகுதியைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகின்றேன் என்பார்கள். இவ்வாறு எடுத்துக்காட்டாகக் கூறும் அளவிற்குச் சிங்கப்பூரைச் செதுக்கியவர்தான் மக்கள் தலைவர் இலீ குவான் இயூ(lee-kuan-yew: 1923-2015). தமிழ், தமிழர், தமிழ் ஈழம் மீது பரிவு கொண்டு செயல்பட்ட மாபெரும் தலைவர் இலீ மறைந்தது உலகெங்கும் உள்ள தமிழர்க்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவே உள்ளது. தமிழீழ விடுதலை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடி மகிழும்வரை காலன் விட்டு வைத்திருக்கலாம்….

கலைச்சொல் தெளிவோம்! 128 : ஞாங்கர்-Lance/javelin

ஞாங்கர் (14) என்னும் சொல், ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன (நற்றிணை : 171.8) என்னும் அடியில் வேலாயுதத்தைக் குறிக்கிறது. மீனியலில் lance மீனெறிவேல் எனப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஞாங்கர் என ஒற்றைச் சொல்லில் குறிக்கலாம். ஞாங்கர்-Lance/javelin – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 127: ஞமன்-pointer

 பாயிண்ட்டர்/pointer என்பதற்குச் சுட்டுமுள், சுட்டிக்காட்டி, குறிமுள், காட்டி, சுட்டி, எனப் பலவாறாக ஆட்சியியல், வேதியியல், பொறிநுட்பவியல், மனையியல், தகவல் நுட்பவியல், கணக்கியல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.  தெரிகோன் ஞமன்போல (புறநானூறு 6. 9) எனத் துலாக் கோலின் முள்முனை கூறப்பட்டுள்ளது. மேலே குறித்தவற்றைவிடச் சங்கச்சொல் சிறப்பாகவே உள்ளது.   ஞமன்-pointer – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 126 : கொழு-awl

நாஞ்சில்ஆடிய கொழுவழிமருங்கின் (பதிற்றுப்பத்து 58.17) என வருவது போன்று கொழு(65) என்னும் சொல் கொழுப்பு, செழிப்பு, கலப்பையில் பதிக்கும் இரும்புஆணி, துளையிடும் பெரியஊசி முதலான பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. துளையிடும் பெரிய ஊசி என்னும் பொருளில், கொழுச்சென்ற வழித் துன்னூசி யினிது செல்லுமாறுபோல (தொல். பாயி. உரை). எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்பொழுது ஆ(வ்)ல்/ awl-தமரூசி (தொல்.,பொறி.,கல்.) என்றும் கூரூசி(தொல்.) என்றும் சொல்லப்படுகின்றது. சங்கச் சொல்லாகிய கொழு என்பதே பொருத்தமான சொல்லாக அமைகின்றது.  கொழு-awl – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 125 : இவரி/இவருநர்-jockey

சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் (நற்றிணை 67.1) குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல், உந்தி (மதுரைக்காஞ்சி 245) என்னும் இடங்களில் செல்லுதல், செலுத்துதல் என்னும் பொருள்களில் இவர்தல் கையாளப்பட்டுள்ளது. குதிரையேறிச் செலுத்துபவரை இவருநர் எனலாம். பொறியியல், இயற்பியல் முதலான அறிவியல் துறைகளில் இவரி எனச் சொல்லலாம். இவரி/இவருநர்-jockey – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 124 : அதரி-valve

 வால்வு (valve) என்பதற்குக் கால்நடையியலிலும் மீனியலிலும் தடுக்கிதழ் என்றும், வேளாணியலில் தடுக்கிதழ், ஒருபாற்கடத்தி என இருவகையாகவும், பொறிநுட்பவியலில் தடுக்கிதழ், அடைப்பிதழ், ஓரதர், கவாடம் என நால்வகையாகவும், மருத்துவயியலில் ஒருவழி மடல், கதவம் தடுக்கிதழ், கவாடம் என நால்வகையாகவும், மனையியலில் ஓரதர், வேதியியலில் கவாடம், வால்வு என இருவகையாகவும் பயன்படுத்துகின்றனர்.  அதர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 43 இடங்களில் வருகின்றது. பெரும்பாலும் வாயில் என்னும் பொருளே கையாளப்படுகின்றது. ஆனினம் கலித்த அதர்பல கடந்து (புறம் 138:1) மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் (நற்றிணை :…

கலைச்சொல் தெளிவோம்! 123. தேரை வெருளி-Bufonophobia

தேரை(10) என்னும் உயிரினமும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். தேரைஅல்லது தேரையினம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் தேரை வெருளி-Bufonophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் : Haptephobia, Aphephobia & Chiraptophobia

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் தீண்ட(3), தீண்டல்(1), தீண்டலின்(4), தீண்டவர்(1), தீண்டற்கு(1), தீண்டா(1), தீண்டாது(1), தீண்டி(21), தீண்டிய(3), தீண்டு(1)தீண்டு்ம் (1), தொடு(10), தொடுதல்(2), எனப் பல சொற்கள் தொடுதலைக்குறிக்கும் வகையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பிறரால் தொடப்படுவது குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் தீண்டுகை வெருளி-Haptophobia/Haphephobia/ Haptephobia அல்லது தொடுகை வெருளி–Aphephobia/ Aphenphosmphobia அல்லது தீண்டல் வெருளி-Chiraptophobia எனப்பெறும். [தீண்டு > தீண்டுகை+ வெருளி; தொடு> தொடுகை+ வெருளி] – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 6 : இலக்குவனார் திருவள்ளுவன்

 (பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)   [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.]   இந்தியா என்றால் ‘இந்தி’ யா?             நடுவணரசின் நோக்கம் ‘இந்தியா’ என்றால் ‘இந்தி’ என்பதுதான். காற்றில் வீசும் வாள் வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பைக் கண்டு நடுவணரசு மிரளாது. எந்த அளவிற்கு நாம் பொங்கி எழுகிறோமோ…