சிலப்பதிகார விழா – கருத்தரங்கம்

ஆனி 13, 2046 / சூன் 28, 2015  ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மருதம் அரங்கு,  திருச்சிராப்பள்ளி தென்னகக் கலை இலக்கிய வளர்ச்சிக் குழு  

பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும்

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், சித்திரை 12, 2046 / 25.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.   தமிழர்தம் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் சமக்கிருதம் நுழைந்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது குறித்தும், அதை அடையாளம்கண்டு தகர்ப்பதன் மூலமே தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டைக் காத்து, தன்மதிப்பு வாழ்வாக நல வாழ்வாக வாழ முடியும் என்று விளக்குகின்ற வகையிலும் அறிஞர்பெருமக்களின் உரைகள் அமைந்தன. சமக்கிருதத்திற்கு எதிராகப் பல்வேறு காலக்கட்டங்களில் களம் கண்டு…

சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்

 புரட்சிக்கவிஞர் 125 ஆம் பிறந்தநாள் விழா 36ஆம் ஆண்டு தமிழர்கலைபண்பாட்டுப் புரட்சிவிழா சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம் சித்திரை 12 & 13, 2046 25.04.2015 &  26.04.2015  சனி & ஞாயிறு தமிழவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், இசைத்தமிழறிஞர் விபுலானந்த அடிகள்,  பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்,  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் படத்திறப்பு கருத்தரங்கம் கவியரங்கம் பொதுவரங்கம் தமிழர்தலைவர் கி.வீரமணி, பேராசிரியர்  முனைவர் மா.நன்னன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், கவிஞர்…

ஈழமும் பன்னாட்டுச் சதிகளும் – ஈரோட்டிலும் கோபியிலும் கருத்தரங்கம்

கோபியில் சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் காலை10 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். ஈரோட்டில்  சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் மாலை 5 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். மே17 இயக்கம் தவறாமல் வருக!

எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி)  தாய்நிலமாகிய தமிழ்நிலத்திலேயே தமிழுக்கு மதிப்பில்லாச் சூழல் உள்ளது. கல்வியிலும் பணியிலும் வழிபாட்டிலும் ஆட்சியிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. உலகத்தமிழர்களிடையே இன்னல்கள் ஏற்படும் பொழுது குரல்கொடுத்து குறைகளைந்து உதவும் உணர்வு பெரும்பான்மையரிடம் இல்லை. இருந்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலையும் நிலப்பறிப்பும் உறுப்புகள் உடைமைகள் இழப்பும் கற்பழிப்பும் வதைவெறியும் ஆகிய பேரவலம் நிகழ்ந்திருக்காதே! இங்கு நாம் தமிழே படிக்காமல் பணியாற்றவும் வணிகத்தில் சிறக்கவும் வாழ்வாங்கு வாழவும் இயலும். எனவே, தேவையில்லாத மொழியைக்…

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.]  தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 2 தட்டச்சுப் பொறி:-             1961ஆம் ஆண்டு வெளியான அரசின் குறிப்பாணை ஒன்றின்படி “மாவட்ட ஆட்சியர்களும் துறைத் தலைவர்களும் இசைந்ததற்கு இணங்க ஒரே ஒர் ஆங்கிலத் தட்டச்சுப் பொறி…

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.  அவையில் அனைவரின் பாராட்டையும் பெற்ற கட்டுரை இது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் எப்படியெல்லாம் சட்டம் இயற்றக்கூடாது என்பதற்குத் தங்களுக்கு இது மிகவும் வழிகாட்டியாக அமையும் என்றார். முனைவர் நன்னன் அவர்கள் “தமிழ்நாடே இனி உருப்படாதோ என்ற தொனி இருந்தாலும் உண்மைகளைச் சிறப்பாக உரைத்துள்ளீர்கள்” என்றார். கடந்த ஆண்டே அறிஞர்…