தேவதானப்பட்டிப் பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம்

  தேவதானப்பட்டிப் பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, மேல்மங்கலம் முதலான பகுதிகளில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை. இதனால் உழவர்கள் தங்கள் வேளாண் பணியை விட்டுவிட்டுத் தொழில்நகரங்களை நாடிச்சென்றனர். ஒரு சிலர் கூலி வேலைக்காக அருகில் உள்ள ஊர்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். தற்பொழுது மஞ்சளாறு அணை, வைகை அணை போன்ற அணைகள் பாசன வசதிக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்து வருகிறது. இதனால் உழவர்கள் தங்கள்…

தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை உயர்வு

தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மேல்மங்கலம், செயமங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் இப்பொழுது கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் புதுமணத்தம்பதிகள் தலைதீபாவளிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். தலை தீபாவளி, திருவிழாக்கள் இணைந்து வருவதால் நாட்டுக்கோழி விற்பனை சூடுபிடித்துள்ளது.   கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வீட்டிலும் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தனர். அதன் பின்னர் இறைச்சிக் கோழி வருகையால் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவந்தது.   இந்நிலையில் தற்பொழுது தென்னந்தோப்புகளிலும், பண்ணை வயல்களிலும் நாட்டுக்கோழிகளை வளர்த்து…

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் எதிரொலி-அரசுப்பேருந்துகளில் கூடுதல் கட்டணம்

தேவதானப்பட்டி பகுதியில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு அரசுப்பேருந்துகளில் கூடுதல் கட்டணம் பெறப்பட்டது. இதனால் நடத்துநர்களுக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திண்டுக்கல், தேனிப்பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிமுக பொதுச்செயலாளரைப் பிணையில் விடுவிக்கதனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. மேலும் தொடர்ச்சியாகக் காந்தி பிறந்தநாள், சரசுவதி பூசை, அடுத்து வந்த சனி, ஞாயிறு, அடுத்து ஈகைத்திருநாள் எனத் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் முதலானோர் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். இந்நிலையில் அனைவரும் தங்கள் ஊருக்கும் திரும்பும் நேரத்தில் தனியார் பேருந்துகள் வேலை…

தேவதானப்பட்டியில் மின்கம்பங்களால் கண்டம்(ஆபத்து)

தேவதானப்பட்டி பகுதியில் மின்கம்பங்களால் மின்கேடு(விபத்து) ஏற்படும் தீக்கேடு உள்ளது. தேவதானப்பட்டி பகுதியில் அண்மைக்காலமாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மின்கம்பங்களில் கம்பிவடத்தொலைக்காட்சியின் கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. இணைப்புவடக் கம்பிகள் முறையாக இணைப்பில்லாமல் ஆங்காங்கே விரிவு ஏற்பட்டு அதன் மேல் காப்புநாடா ஒட்டப்படாமல் உள்ளது. இதனால் மழை நேரங்களில் கம்பிகள் செல்லும் வீடுகளின் மீதுள்ள இரும்புக் கதவு, தகரம் ஆகியவற்றில் மின்சாரம் பாய்கிறது. இவை தவிர மின்கம்பங்களில் ஆங்காங்கே செடிகள் பின்னிக்கிடக்கின்றன. இதனால் செடி, கொடிகளை உண்ணச்செல்லும் கால்நடைகள் அதன்மூலம் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது….

தேவதானப்பட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி

  தேவதானப்பட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால்   உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.  தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில் தக்காளிப் பயிரிடல் நடைபெற்று வருகிறது.    இப்பகுதியில் விளையும் தக்காளிகள் சென்னை, பெங்களுர், வத்தலக்குண்டு, ஆண்டிப்பட்டி சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.   கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் நெல், கரும்பு, வாழை போன்ற பயிரிடலை விட்டு விட்டுக் குறுகிய காலப்பயிர்களான தக்காளி, கத்திரிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில்…

குப்பைகளைப் பிரித்துக் கொட்டவேண்டும்- தேவதானப்பட்டிப் பேரூராட்சி

தேவதானப்பட்டிப் பகுதியில் வணிக நிறுவனங்கள் குப்பைகளைப் பிரித்துக் கொட்டவேண்டும் -பேரூராட்சி அறிவிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து கொட்டவேண்டும் எனப் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்துக் கொட்டவேண்டும் எனவும் வணிக நிறுவனங்கள், திருமணம் முதலான சிறப்பு நிகழ்வுகள் நடத்துபவர்கள் குப்பைகளை வெளியே கொட்டாமல் தங்கள் செலவிலேயே மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தரம்பிரித்து…

தேவதானப்பட்டி பகுதியில் இறக்குமதி செய்யப்படும் இளநீர்கள்

தேவதானப்பட்டி பகுதியில் இளநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இறக்குமதி செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில் தென்னை மரம் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதியில்விளையும் தென்னங்காய்கள் காங்கேயம், மும்பை, கேரளா என ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இப்பொழுது கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் இப்பகுதியில் தென்னை மரம் பயிரிடலின் பரப்பளவு சுருங்கிவருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் தண்ணீர் குறைந்ததால் தேங்காய், இளநீர் ஆகியன பெரிதாக இல்லாமல் சிறிய அளவில் இளநீர், தேங்காய்கள் காணப்படுகின்றன. இதனால்…

தனியார் பிடியில் இராணிமங்கம்மாள் உருவாக்கிய மத்துவார் குளம்

தேவதானப்பட்டி பகுதியில் இராணிமங்கம்மாள் காலத்தில் உருவாக்கப்பட்ட மத்துவார் குளம் கேட்பாரன்றிக் கிடக்கிறது. 1689 முதல் 1706 ஆம் ஆண்டு வரை சார்பரசியாக மதுரையை ஆண்டவர் இராணிமங்கம்மாள். அவர் காலத்தில் மதுரையிலிருந்து ஆவியூர், காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கும் திருச்சுழியலுக்கும் பெரியகுளத்திலிருந்து கெங்குவார்பட்டி வழியாக மதுரைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டன. அச்சாலைகள் இன்று வரை மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது. இராணிமங்கம்மாள் காலத்தில் பல்வேறு குளங்கள், சத்திரங்கள், சாவடிகள், அன்னதான மண்டபங்கள் என ஏராளமாகக் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட குளங்களில் ஒன்று கெங்குவார்பட்டியில் உள்ள மத்துவார்குளம். இக்குளத்தை பொதுமக்களுக்காகக்…

தேவதானப்பட்டியில் அழிந்து வரும் சிற்பக்கலை

  தேவதானப்பட்டி பகுதியில் சிற்பக்கலை அழிந்து வருகிறது. அதனைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி பகுதியில் சிலைகள் வடிவமைக்கத்தேவையான திறனுடைய கற்கள் அதிகம் உள்ளன. மறைந்த முன்னாள்  தலைமையாளர் இராசீவு காந்தி அவர்களுக்குத் திருப்பெரும்புதூரில் சிலை அமைக்க இப்பகுதியில் இருந்துதான் கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அவ்வளவு பெருமை வாய்ந்த கற்கள் இப்பகுதியில் உள்ளன.   இப்பகுதியில் உள்ள பழமையான கோயில்கள், கற்சிலைகள் அனைத்தும் அ.வாடிப்பட்டி பகுதியில் இருந்த கற்களைக் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டன….

தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டம்

  தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டத்தால் (அட்டகாசத்தால்) விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, வைகை அணைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வெளவாலகள் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளது. இவ்வகை வெளவால்கள் இப்பொழுது மழை இல்லாததால் பழங்கள் இருக்கும் பகுதியை நாடி இடம் பெயர்ந்து வருகின்றன. மேலும் இப்பொழுது நாவல் பழப் பருவம் தொடங்கியுள்ளதால் நாவல்மரங்கள் அடங்கிய பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.   இவ்வாறு நாவல்மரங்களில் தங்களுக்குத் தேவையான உணவுகள் கிடைக்காவிட்டால் அண்மையில் உள்ள   சீமையிலுப்பை(சப்போட்டா), வெள்ளரித்தோட்டம், முந்திரித்தோட்டம், பப்பாளித்தோட்டங்களில் நுழைந்து…

மூடுவிழாவை நோக்கிக் கயிறு திரிக்கும் தொழில்

  தேனிப் பகுதியில் கயிறு திரிக்கும் தொழில் மூடப்படும் பேரிடர்(அபாயம்) உள்ளது.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளில் தென்னை மரத்தின் மட்டைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழில் குடிசைத்தொழிலாக நடைபெற்று வருகிறது. இத்தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தென்னை மட்டைகளின் நார்கள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் செங்கல் போன்று கடினமாக்கப்பட்டு அதனையும் வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். இதனால் அதிக விலை கொடுத்தும்முன் தொகை கொடுத்தும் தென்னை மட்டைகளை வாங்கிச்செல்கின்றனர். தற்பொழுது குடிசைத்தொழிலாக உள்ள இத்தொழில்போதிய மூலதனத்துடன் நடைபெறுவதில்லை. இவை…

தேனிப் பகுதியில் நீரின்றிக் கருகிய கரும்புகள் – துயரீட்டுத்தொகை வழங்குக!

தேனிப் பகுதியில் நீரின்றிக் கருகிய கரும்புகளால்  உழவர்கள் கவலை அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி பகுதி அருகே உள்ள  ஊர், தே.வாடிப்பட்டி. இப்பகுதியில் நெல்,  கரும்பு  ஆகிய பயிரிடல் முதன்மை உழவாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் மஞ்சள் ஆறு நீரை நம்பி  உழவுத்தொழில்  நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள கிணறுகள், கண்மாய்கள், குளங்கள் அனைத்தும் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. மேலும் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து விட்டது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள  உழவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி இப்பகுதியில் உள்ள  பயிர்த்தொழிலைக் காப்பாற்றி வந்தனர். இப்பொழுது தண்ணீர்…