உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 85: திருப்பெருந்துறைப் புராணம் – தொடர்ச்சி) என் சரித்திரம் விடை பெறுதல் 121 செய்யுட்களில் நாட்டுப்படலம் நிறைவேறியது. கடவுள் வணக்கம்முதலியவற்றோடு 158 செய்யுட்கள் இயற்றப் பெற்றன. அடிக்கடி சுப்பிரமணியதேசிகர் புராணத்தைப்பற்றிப் பிள்ளையவர்களை விசாரிப்பார். நான் தனியேசென்று பேசும்போது என்னையும் வினவுவார். நான் இன்ன இன்ன பகுதிகள்நிறைவேறின என்று சொல்லுவேன். அவருக்குச் செய்யுட்களைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் உண்டாகும். நாட்டுப்படலம் முடிந்தவுடன் ஆசிரியர் அதுவரையில் ஆனபகுதிகளைச் சுப்பிரமணிய தேசிகர் முன்பு படித்துக்காட்டச் செய்தார்.அச்சமயம் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வந்திருந்தார்.செய்யுட்களைக் கேட்டுத் தேசிகர்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு-தொடர்ச்சி) தமிழர் வீரம்வீர மாதர் வீரத் தாய்தமிழ் நாட்டில் பெண்களும் மனத்திண்மை உடைய வராய் விளங்கினார்கள்; தன் மக்கள் வீரப்புகழ் பெறல் வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத் தாயர் பலர் தமிழ் நாட்டில் இருந்தனர். வாளெடுத்த தாய்வயது முதிர்ந்து, வற்றி உலர்ந்து, தள்ளாத நிலையில் இருந்தாள் ஒரு தாய். அவள் மகன் போர் புரியச் சென்றான். அவன்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி) பூங்கொடி அடிகள் தம்மை, அறியார் கூடி 70நாத்திகர் என்று நவிலுதல் கண்டோம்;வேத்திய லாளரும் வீண்துயர் தந்தும்கண்டின் சுவையைத் தொண்டிலே கண்டனர்;தொண்டர்தம் பெருமை சொல்லவும் போமோ! பூங்கொடியின் உறுதிமொழி எத்துயர் வரினும் எடுத்த பணியேஇலக்கெனக் கொண்டுநீ இயங்கலால் அன்றோஇலக்கியர் என்றோர் விருதினைத் தந்தனர்;பேரா சிரியப் பெரியோய்! நின்போல் 80யாரே செயல்செய வல்லார்? யானும்நின்வழி கொண்டேன், நிலையாய் நிற்பேன்,என்பெரு வாழ்வை ஈந்தனென் பணிக்கே’எனுமொழி கூறி இருந்தனள் ஆங்கே; குறளுரை தெளிதல் கலகப் பொருளுடை கடிகதில்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 12 : தியாக வீரம்- தாெடர்ச்சி) தமிழர் வீரம்வீர விளையாட்டு வீர விளையாட்டில் என்றும் விருப்பமுடையவர் தமிழர். வேட்டையாடல், மல்லாடல், ஏறுதழுவுதல் முதலிய விளையாட்டங்கள் மிகப் பழமை வாய்ந்தனவாகும். வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர் வேடர் என்றும், வேட்டுவர் என்றும் பெயர் பெற்றனர். மற்றும் வில்லாளராகிய பெருநில மன்னரும், குறுநில மன்னரும் பொழுதுபோக்காக வேட்டையாடினர். காவிரிக் கரையிலும், பாலாற்றங் கரையிலும் பரந்து நின்ற காடுகளில் வேட்டையாடப் புறப்பட்ட சோழமன்னன் கோலத்தைக் கலிங்கத்துப் பரணியிலே காணலாம். மல்லாட்டத்தில் வல்லவர் மல்லர் எனப்படுவர்….

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 01. பதிப்பரை

என் தமிழ்ப்பணி பதிப்புரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, என பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள் “தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அருப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்ற பேறு பெற்றவர், பைந்தமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை – தொடர்ச்சி) பூங்கொடிநாவலரின் முன்னை நிகழ்ச்சி மீன்புலி கயலால் மேம்படு தமிழகவிடுதலை குறித்து விளிம்பினேன்; தமிழ்மொழி 50கெடுதலை இன்றிக் கிளந்தெழப் புகன்றேன்,இவையே யான்செய் தவறென இயம்பி,நவைஎனப் பழிஎன நாணார் விலக்கினர்; நாவலர் ஊக்கமூட்டல் என்றவர் ஊக்கினர்; இவ்வுரை கேட்டாள்;`நன்றுநன் றைய! நான்அய ரேன்இப்பணியே உயிராப் பாரில் கொண்டுளேன்; உலகியல் நிலைமை கலையெனக் கொண்டனர்; கருதின் ஒருநாள்பெரியார் அறிஞர் என்றெலாம் பேசுவர்;மறுநாள் மாறி `மதியே இல்லார்,சிறியார்’ எனப்பழி செப்புவர் அந்தோ! 65 தொண்டர்தம்…

உ.வே.சா. வின் என் சரித்திரம் 53: சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் – தொடர்ச்சி) என் சரித்திரம்சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு அவற்றைக் கவனிப்பதற்காக அவர் அங்கே இருக்கிறார்.கல்லிடைக்குறிச்சியிலும் திருவாவடுதுறையைப் போலவே மடமும் அதற்குஅங்கமாகிய கோயில் முதலிய இடங்களும் பரிவாரங்களும் உண்டு.சந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருடங்கள் அங்கேஎழுந்தருளி இருந்தது இந்த ஆதீனத்திற்கு இராசதானி நகரம் போன்றதுதிருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவதுகல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத் திலுள்ளவர்கள்கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும்சொல்வதுண்டு.” “திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சி புரிவதுபோலல்லவா இருக்கிறது?” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்….

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 12 : தியாக வீரம்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 11 : பெண்ணை நாட்டுப் பெருவீரர்- தொடர்ச்சி) தமிழர் வீரம்தியாக வீரம்9. தியாகத்தின் சிறப்பு பிறர்பொருட்டு ஒருவன் தன்னலம் இழக்கும் தகைமையே தியாகம் ஆகும். தமிழகத்தில் என்றும் தியாகத்துக்குத் தனிப் பெருமையுண்டு. “தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்” என்று அத்தகையாரைத் தமிழ்நாடு போற்றுகின்றது. அன்னார் இருத்தலாலே இவ் வுலகம் உள்ளது என்று பாடினான் ஒரு பாண்டியன்.1 குமணனும் இளங்குமணனும்கொங்குநாட்டின் பெருமையெல்லாம் தன் பெருமை யாக்கிக்கொண்டான் ஒரு கொடைவீரன். அவன் முதிரம் என்னும் மலையை ஆண்ட குறுநில மன்னன். குமணன் என்னும்…

வள்ளுவர் சொல்லமுதம் 16: அ. க. நவநீத கிருட்டிணன்: ஊக்கமும் ஆக்கமும்

(வள்ளுவர் சொல்லமுதம் 15: அ. க. நவநீத கிருட்டிணன்: பொருளும் அருளும்-தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்கக ஊக்கமும் ஆக்கமும் வினை செய்தற்கண் கொள்ளும் உள்ளக் கிளர்ச்சியே ஊக்கம் எனப்படும். ஊக்கமே வாழ்வில் உயர்வைத் தருவது. ஆதலின் ‘ஊக்கமது கைவிடேல்‘ என்று ஓதுவார் தமிழ் மூதாட்டியார். ஊக்கம் உடை யவர் எல்லாம் உடையவர் என்றே சொல்லப் பெறுவர். ஊக்கம் இல்லாதவர் என்னுடையரேனும் இலர் என்பர் வள்ளுவர். – ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைபெற்ற செல்வம். பிற செல்வங்களை இழப்பினும் ஊக்கத்தின் உறுதுணையால் அவற்றைப் பெறலாம். ஊக்கம் இல்லாதார்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை – தொடர்ச்சி) பூங்கொடி நாவலர் ஆறுதல் உரை எறிபெருங் கல்லால் இடர்பெரி துற்றேன்,எனினும் பின்னர் என்னுரை விழைவோர் 25நனிபெரு கினரால் நயந்திவண் இருந்தேன்’ நாவலர் ஆறுதல் உரை `அன்னாய்! உலகில் அறிவொளி பரப்பமுன்னுவோர்க் கெல்லாம் முதல்வர விதுவே;தொல்லைகள் பொறுத்துத் தொண்டுகள் ஆற்றின் 30எல்லையில் இன்பம்; எடுத்தது முடியும்;வெற்றி வெற்றி விளைவது கண்டோம்;உற்றநின் துயரால் உளமது கலங்கேல்ஆற்றுக தொண்டே ஆற்றுக தொண்டே; நாவலர் தலைமேற் கல் கல்லார் நல்வழி நில்லார் புல்லார்,குழப்பம்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 41-60 (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர் – தொடர்ச்சி என் சரித்திரம்அத்தியாயம்-51 சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் திருவாவடுதுறையில் இரண்டு பிரிவாக நடைபெற்று வந்த பாடங்களில்சின்ன வகைக்குரிய பாடம் பழனிக்குமாரத் தம்பிரான், ஆறுமுகத்தம்பிரான்முதலியவர்கள் விரும்பியபடி சில தினங்களுக்குப் பிறகு காலையிலே நடைபெறஆரம்பித்தது. குமாரசாமித் தம்பிரானும் நானும் கேட்டு வந்த பாடம்பிற்பகலிலும் முன் இரவிலும் நடந்தது. அப்பாடத்தில் திருநாகைக்காரோணப் புராணம் முடிந்தவுடன் காசி காண்டத்தையும் பிரமோத்தரகாண்டத்தையும் நாங்கள் படித்தோம். அப்பால் கந்த புராணம்ஆரம்பிக்கப்பட்டது. பாடம் மிகவும் வேகமாக நடந்தது. அப்போதுகண்ணப்பத் தம்பிரானென்பவரும் கும்பகோணம் வைத்தியநாததேசிகரென்பவரும் உடனிருந்து…

1 2 78