உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர்

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 50: கலைமகள் திருக்கோயில் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-50மகா வைத்தியநாதையர் ஒவ்வொரு நாளும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் நேரம் போகமற்ற நேரங்களிற் பழைய பாடங்களைச் சிந்தித்து வருவது மாணாக்கர்கள்வழக்கம். சில சமயம் நான் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களையும்கடிதங்களையும் எழுதுவேன். தேசிகர் பாடம் சொல்லுதல் அவகாசம் ஏற்படும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தாமே சிலருக்குப்பாடம் சொல்லுவார். திருக்குறள் பரிமேலழகருரையில் அவருக்கு மிக்கவிருப்பம் உண்டு. அதனையும், திருக்கோவையார் இலக்கண விளக்கம் என்னும்நூல்களையும் யாருக்கேனும் பாடம் சொல்லுவார். தேசிகர் இலக்கணச்செய்திகளை வரையறையாகச் சொல்வதும்,…

வள்ளுவர் சொல்லமுதம் 14 : அ. க. நவநீத கிருட்டிணன் : நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை

(வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை. நன்றி கொன்ற மகனுக்குக் கழுவாயே இல்லை. அத்துணைப் பெரிய கொடிய பாவம் நன்றி மறத்தல் என்று வள்ளுவர் வன்மையாகக் கூறுவார்.  ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் ந்நன்றி கொன்ற மகற்கு” என்பது அவர்தம் மறைமொழி. ஒருவன் செய்த நன்றி ஒன்றனை நினைந்தபோது, அவன் கொன்றாலன்ன இன்னலைப் பின்னொருகால் கொடுப்பினும் அது மறந்துபோம். அந் நன்றி உணர்ச்சி நடுவுநிலைமையினின்று…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – அ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம் சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 1.            மன்னார் கோயிற் புராணம்            1855                 ⁠மகாவித்துவான் கோவிந்தபிள்ளை 2.            அளவு நூல் (சிற்பநூல்) இரண்டாம் புத்தகம்            1857                 பூதாமசு லுண்டு, 3.            இலக்கணச் சுருக்கம் – மழவை. மகாலிங்க ஐயர்     1861 4.            சிவதருமோத்தரம் மூலமும் உரையும்                        பூமறைஞான சம்பந்த நாயனார்                 ⁠உரை, குறிப்புரை : சாலிவாடீசுர ஓதுவா மூர்த்திகள்               5.            இந்து கைமை…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : கலைமகள் திருக்கோயில்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 49 கலைமகள் திருக்கோயில் மாயூரத்தில் வசந்தோற்சவம் ஆன பிறகு சுப்பிரமணிய தேசிகர்திருவாவடுதுறைக்குப் பரிவாரங்களுடன் திரும்பி வந்தனர். அவருடன்பிள்ளையவர்களும் நாங்களும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தோம். வழக்கப்படிமடத்திலே பாடங்கள் நடைபெற்று வந்தன. தேசிகரின் பொழுது போக்கு சுப்பிரமணிய தேசிகர் காலை எழுந்தது முதல் இரவில் துயிலச் செல்லும்வரையிற் பாடம் சொல்வது, வித்துவான்களோடு சம்பாசணை செய்வது,மடத்திற்கு வருபவர்களுடைய குறைகளை விசாரித்து வேண்டிய உதவிகளைச்செய்வது ஆகிய விசயங்களிலே பெரும்பாலும் பொழுதைப் போக்கி வந்தார்….

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144 (கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) ★ இதழ் : சனவிநோதினி (1910)கட்டுரையாளர் : இசைத்தமிழ்★ நூல் : நாகரீகப் போர் (1925), அதிகாரம் 4 – மாயா மித்திரம், பக்கம்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் : அத்தியாயம்- 48 : சில சங்கடங்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம்அபய வார்த்தை ஓதுவார், “ஐயா, அவரைச் சொன்னால் நாக்கு அழுகிப்போம்.இருந்திருந்து பரம சாதுவாகிய அவரைச் சொல்ல உமக்கு எப்படி ஐயா மனம்வந்தது!” என்றார். அம் மனிதர் ஒன்றும் சொல்ல மாட்டாமல் எழுந்து போய்விட்டார். அபய வார்த்தை அந்த மூவர் வார்த்தைகளையும் நான் கேட்டேன். “நல்ல வேளை,பிழைத்தோம்” என்ற ஆறுதல் எனக்கு உண்டாயிற்று. உடனே எழுந்தேன்.“இவ்வளவு நேரம் என்னைப் பற்றி நடந்த சம்பாசணையைக் கவனித்தேன்.எனக்கு முதலில் உண்டான சங்கடத்தை நீங்கள் நீக்கி…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098- 1120 -தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135 (கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

உ.வே.சா.வின் என் சரித்திரம் : அத்தியாயம்- 48 : சில சங்கடங்கள்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 78 : அன்பு மூர்த்திகள் மூவர்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்- 48 சில சங்கடங்கள் ஒரே மாதிரியான சந்தோசத்தை எக்காலத்தும் அனுபவிப்பதென்பதுஇவ்வுலகத்தில் யாருக்கும் சாத்தியமானதன்று. மனிதனுடைய வாழ்விலேஇன்பமும் துன்பமும் கலந்து கலந்தே வருகின்றன. செல்வத்திலேசெழித்திருப்பவர்களாயினும், வறுமையிலே வாடுபவர்களாயினும் இன்பம்துன்பம் இரண்டும் இடையிடையே கலந்து அனுபவிப்பதை அல்லாமல்இன்பத்தையே அனுபவிக்கும் பாக்கியவான்களும் துன்பத்திலே வருந்தும்அபாக்கியர்களும் இல்லை. எனக்கு வேண்டிய நல்ல வசதிகளும் தமிழ்க் கல்வி இலாபமும்திருவாவடுதுறையிலே கிடைத்தன. மனத்திலே சந்தோசம் இடையறாதுஉண்டாவதற்கு வேண்டிய அனுகூலங்களெல்லாம் அங்கே குறைவின்றிஇருந்தன. ஆனாலும், இடையிடையே அச்சந்தோசத்திற்குத் தடை நேராமல்இல்லை….

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்-தொடர்ச்சி) தமிழர் வீரம் 7கடலாண்ட காவலர் சேரன் காலாட்படை தமிழ் நாட்டு மூவேந்தரும் நிலப்படையோடு கப்பற் படையும் உடையராய் இருந்தனர். சேரநாட்டை யாண்ட செங்குட்டுவன் கப்பற்படையின் வலிமையால் பகைவரை வென்று “கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்”1 என்று புகழ் பெற்றான். அவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன் கலப்படையெடுத்துக் கடம்பர் என்ற கடற்பகைவரை வென்றான். கடற் கடம்பர்இப்பேரரசர் இருவரும் தமிழ் நாட்டு வாணிக வளத்தைப் பாதுகாக்கக் கருதியே கடற்போர் புரிந்தனர் என்று தோற்றுகின்றது. அவர் காலத்தில் கடல்…

வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும்

(வள்ளுவர் சொல்லமுதம் 10 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும் 2- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அ. கொடைநலமும் படைவலமும் ஈகையும் வீரமும் தமிழரின் இணையற்ற பண்புகள் ஆகும். பழந்தமிழ்நாட்டு மன்னர் பலரும் கொடை கலத்திலும் படை வலத்தினும் சிறந்து விளங்கினர். இவ் உண்மையைச் சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் இனிது விளக்கும். பண்டைப் புலவரெல்லாம் மன்னர் கொடைநலத்தையும் படை வீரத்தையுமே கொண்டாடித் தண்டமிழ்ப்பாக்கள் பாடினர். திருவள்ளுவரும் தம் நூலுள் இத்திறங்களை நயம்பட உரைக்கிறார், தமிழ்நாட்டுக் கொடையின் பெருமையைக் குறிக்கத் திருவள்ளுவர்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098-1120

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098-1120 (கவிஞர் சுரதா, கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

உ.வே.சா.வின் என் சரித்திரம் 78 – அன்பு மூர்த்திகள் மூவர்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 77 : அத்தியாயம்-46.2 – தொடர்ச்சி என் சரித்திரம் அத்தியாயம்-47 அன்பு மூர்த்திகள் மூவர் திருவாவடுதுறை மடத்தில் இருவகைப் பாடங்களும் காலையிலும்மாலையிலும் முறையாக நடந்து வந்தன சுப்பிரமணிய தேசிகருடைய அன்புஎன்மேல் வர வர அதிகமாகப் பதியத்தொடங்கியது பிள்ளையவர்களுக்குஎன்பாலுள்ள அன்பின் மிகுதியை அறிந்த தேசிகர் என்னிடம் அதிக ஆதரவுகாட்டினர். அவ்விருவருடைய அன்பினாலும் மற்றவர்களுடைய பிரியத்தையும்நான் சம்பாதித்தேன். மடத்திலே பழகுபவர்கள் என்னையும் மடத்தைச் சார்ந்தஒருவனாகவே மதிக்கலாயினர். மடத்து உத்தியோகத்தர்கள் என்னிடம்பிரியமாகப் பேசி வந்தவுடன் எனக்கு ஏதேனும் தேவை இருந்தால் உடனேகொடுத்து உதவித் தங்கள்…