ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1465-1476 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1452 – 1464 இன் தொடர்ச்சி) 1465. மறையிடர் பொருளியல் Risk – ஆபத்து,ஆபத்து காரணி, இழப்பு, இடர், அபாயம், அபாய நேர்வு, கெடு, கேடு, இன்னல், இடையூறு, இக்கு எனப் பல வகையாகக் குறிக்கப் பெறுகிறது. அதில் ஒரு இக்கன்னா இருக்கிறது எனப் பேச்சு வழக்கில் இயல்பாக உள்ள ‘இக்கு’ என்பதை நான் முதலில் பயன்படுத்தினேன். இதே சிந்தனை கொண்ட மற்றொருவரும் இச்சொல்லைப் பயன்படுத்தி வந்தார். இருப்பினும் இக்கு என்பதைக் கலைச்சொல் வடிவமாகப் பெரும்பான்மையர் கருதவில்லை. எனவே,…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1452 -1464 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1434 – 1451 இன் தொடர்ச்சி) 1452. மருந்து வேதியியல் Medicinal chemistry 1453. பவ்வீ இயல் Coprology – மலத்தியல்,  கசட்டியல், மலத்தியல், மல இயல், சாண இயல், சாண வியல். சாண அறிவியல் எனப்படுகிறது. மாட்டின் மலம்தான் சாணம். சாணம், மலம் ஆகிய மூலப்பொருள் அடிப்படையில்  ,  சாணவியல் , மலவியல் எனக் கூறுகின்றனர். இரண்டும் சரிதான்.  ஆட்டின் கழிவு பிழுக்கை, குதிரையின் கழிவு இலத்தி, யானையின் கழிவு இலண்டம் முதலான பிற உயிரினங்களின் கழிவுகளையும் …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75

(இராவண காவியம்: 1.2.66-70 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   71.குன்றுறை கோட்டி யானை குறுகியே பழனந் தன்னைத் தின் றுசெங் கரும்பைக் கையிற் செழுங்கிளைக் காகக்கொண்டு சென்றிடும் வழியில் வேங்கை செருக்கவக் கரும்பாற்றாக்கி வென் றதை யெயினர் கொள்ள வீசிவே தண்டஞ்சாரும். 72.புல்லிய சுடுவெம் பாலைப் புறாவயல் மருதம் புக்கு நெல்லயின் றேகும் போது நீர்க்கொடி பலவைக் கவ்விச் செல்லவே யிளம்பார்ப் பென்று செருச்செய்தச் சுளைப்பலாவை முல்லையாய்ச் சிறுவர்க் காக்கி முனைப்பொடு பறந்துசெல்லும். அஞ்சிறைப் பொன்காற்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1434 – 1451: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1424-1433 இன் தொடர்ச்சி) 1434. மர வளைசலியல் Dendroecology – மரவரை சுற்றுப்புறவியல் எனக் குறிக்கப்படுகிறது. வரலாற்று சுற்றுச்சூழல் செயல்முறைகளை பகுப்பாய்வு செய்ய மரக்காலவியலைப் பயன்படுத்தும் அறிவியல் என்றும் கடந்தகால, நிகழ்கால வனச்சூழல் மாறுபாடுகளை மதிப்பிடுவது என்றும் இவ்வறிவியல் குறித்து விளக்கு கின்றனர். மரத்தின் அடிப் படையிலான புறவியல் என்பதாலும் ecology / வளைசலியல் என நாம் வரையறுத்துள்ளதாலும்,  மர வளைசலியல் – Dendroecology எனலாம். Dendroecology 1435. மரவரைத் தொல்லியல் மரவரை என்பது மரத்தில் உள்ள காலங்காட்டும்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 67

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 66. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 26 தொடர்ச்சி “என்ன தெரிந்துவிட்டது?” என்று அவளைக் கேட்டேன். அதற்குள் மாதவி மெல்லச் சுவரைப் பிடித்தபடியே நடந்து வந்து என் மடியின்மேல் ஏறித் தன் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டினாள். “சரிதான். வாய்க்குள் நாக்கு இருப்பது தெரிந்து விட்டது என்கிறாள். அதுதானே நீ சொல்வது?” என்றேன். மனைவி சிரித்தாள். “சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதன் பிறகு சிரிக்கமாட்டீர்கள். உடனே போய்ப் பார்க்கலாம் என்று புறப்படுவீர்கள்” என்றாள். “உங்கள் வீட்டுக்காரர்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1424-1433 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1411 – 1423 இன் தொடர்ச்சி) 1424. மரபு உளவியல் Genetic Psychology 1425. மரபு நுட்பியல் Genetic Technology 1426. குடிவழி யியல் மரபுவழியியல், கொடிவழி, குலவழி, குலமரபு, கால்வழியியல், மரபுவரிசை யியல்,  குடிமரபியல், மரபியல் எனக் கூறுகின்றனர். Genetic-மரபியல் எனப்படுவதால் அதனை நீக்கி விடலாம்.  குடிமரபியல், மரபு வழியியல் என்றாலும் குழப்பம் வரலாம். கொடிவழி, குலவழி, கால்வழி என்பன ஒத்த பொருளுடை யனவே. எனினும் எளிமையாகக் குடி வழி > குடிவழியியல் எனலாம். Geneology/ Geneaology/Genealogy…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1411 – 1423 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1401 – 1410 இன் தொடர்ச்சி) 1411. மதலையியல் neonātus என்னும் இலத்தீன் சொல் பச்சிளங்குழந்தையைக் குறிக்கிறது. அண்மையில் பிறந்த மழலையரைக் குறிக்கும் மதலை என்னும் சொல்லைக் கையாண்டுள்ளோம். Neonatology 1412. மதிப்புச்செய்திறனியல் மதிப்பு மேலாண்மைக்கு ஒத்ததாக இது கருதப்படுகிறது. செயல்பாட்டை மேம்படுத்து வதன் மூலம் செலவையும் குறைத்து மதிப்பை உருவாக்குவது குறித்த செய்திறன்துறை. எனவே, இதனை மதிப்புப் பொறியியல் என்று சொல்வதைவிட, மதிப்புச் செய்திறனியல் எனலாம். Value Engineering 1413. மதுக்காய்ச்சியல் brew  என்னும் கிரேக்கச் சொல்லின்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1401  – 1410  : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1391  – 1400 இன் தொடர்ச்சி) 1401. மண் ஆய்வியல்  pedo-என்னும் பழங்கிரேக்க முன்னொட்டுச் சொல் மண் தொடர்பான என்பதைக் குறிக்கிறது. (உயிரெழுத்திற்கு முன் ஓ/O வராது.) Pedogenics 1402. மண்உயிரியல் Soil biology 1403. மண்டலப் புவியியல்            Regional Geology 1404. மண்டலப் பொருளியல் Regional Economics 1405. மண்டையோட்டியல் cranium என்னும் இடைக்கால இலத்தீன் சொல்லின் பொருள் மண்டையோடு. Craniology / Fronology 1406. மண்ணியல் Agrology  என்பதையும் மண்ணியல் என்கின்றனர். ஆனால், அதை மண்ணியலின் ஒரு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  40

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  39 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி தற்செயலாகச் சந்திக்கும் போதும் உரையாடும் போதும் கூட தமிழில் இப்படி எத்தனையோ நுணுக்கமான செய்திகளை அரவிந்தனுக்குச் சொல்லியிருந்தாள் பூரணி. அவள் தன் அன்பை மட்டும் அவனுக்குத் தந்துகொண்டிருக்கவில்லை. அன்போடு சேர்த்துத் ‘தமிழ்’ என்னும் அளப்பரிய செல்வத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தாள். பூரணியோடு அவன் பழகுவதில் மூன்றுவித நிலைகள் இருந்தன. அவள் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண். அவள் தந்தையின் நூல்களை அவளிடமிருந்து வாங்கி வெளியிடுகிற முறையில் ஓர் உறவு. அந்த உறவுதான் மற்ற…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1391-1400 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1381  – 1390  இன் தொடர்ச்சி) 1391  பூந்தாதியல் – palynō / palúnō என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள்கள் தூவு/தெளி. இச்சொல் நுண்பொடி/ துகள்/ தூசி என்னும் பொருள் கொண்ட pálē என்னும் சொல்லில் இருந்து உருவானது. Palynology  என்பதன் நேர் பொருள் தூளியல்/ துகளியல்(study of dust – இங்கே dust என்றால் தூசி எனக் கருதாமல் தூள்/துகள் எனக் கருத வேண்டும்).  இந்த இடத்தில் துகள் என்றால் பூந்துகள்தான். மகரந்தம் எனப்படும் இதனைப் பூந்தாது…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.66-70

(இராவண காவியம்: 1.2.61-65 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   வேறு பசிபட வொருவன் வாடப் பார்த்தினி திருக்குங் கீழ்மை முசிபட வொழுகுந் தூய முறையினை யறிவார் போல வசிபட முதுநீர் புக்கு மலையெனத் துவரை நன்னீர் கசிபட வொளிமுத் தோடு கரையினிற் குவிப்பா ரம்மா.   பாணியுஞ் சீருந் தூக்கும் பண்ணொடு பொருந்தச்செங்கை ஆணியுந் திவவுங் கூட் டி யமைத்தயாழ் நரம்பைச் சேர மாணிழைப் பரத்திபாட மகன்றில்கேட் டுவக்கும்பாக்கம் காணிய கலமுள் ளோர்க்குக் கலங்கரை விளக்கங்காட்டும்….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1381  – 1390  : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1367  – 1380 இன் தொடர்ச்சி) 1381. பொறிசார் பூச்சியியல் Entomechology 1382. பொறியியப் புவியியல் Engineering geology 1383. பொறியியல் Engineering 1384. போக்குவரத்துப் பொறியியல் ஊர்தி நடமாட்டப் பொறி யியல், போக்குவரத்துப் பொறி யியல் என இருவகையாகக் குறிக்கின்றனர். போக்குவரத்துப் பொறியியல் என்பதைத் தரப் படுத்திக் கொள்ளலாம். Transportation engineering/Traffic Engineering/ Transport Engineering 1385. போசர் ஐன்சுதீன் புள்ளியியல் Bose Einstein Statistics 1386. போட்டியியல் Agonistics  1387. போரியல் pólemos என்னும் பழங்கிரேக்கச்…