மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  66

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 65 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 24 பால்வாய் பிறைப்பிள்ளை ஒக்கலை கொண்டுபகல் இழந்தமேம்பால் திசைப்பெண் புலம்பறுமாலை      — திருவிருத்தம் இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது (இ)ரப்பர் காட்டுகிற நீளம் அதனுடைய இயல்பான நீளமன்று. இழுத்துக் கொண்டிருப்பவனுடைய கை உண்டாக்கிக் காட்டும் செயற்கையான நீளம் அது! அதைப் போல் இயல்பாகவே தங்களிடம் உள்ள நேர்மைக் குறைவால், அதைத் தாங்கள் பிறரிடம் காட்டும்போது பெரிதாக்கிக் காட்டி வாழ்கிறவர்கள் சிலர் சமூகத்தில் உண்டு. அகவாழ்வில் கொடுமையே உருவானவராய்த் தெரியும்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  65

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 64 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம்  23 தொடர்ச்சி ‘பணமும், பகட்டும் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களை மதிக்காத இந்த பருமாக்காரக் கிழவர் இன்று ஏன் இப்படி என்னிடம் ஒட்டிக் கொள்கிறார்? சிற்றப்பனின் சொத்துகளுக்கு நான் வாரிசு ஆகப் போகிறேன் என்பதற்காகவா? அடடா; பணமே, உனக்கு இத்தனை குணமுண்டா? இத்தனை மணமுண்டா‘ என்று எண்ணிக் கொண்டான் அரவிந்தன். பருமாக்காரருடைய சிரிப்பிலும், அழைப்பிலும், அன்பிலும், ஏதோ ஓர் அந்தரங்கமான நோக்கத்தின் சாயல் பதிந்திருப்பதை அவன் விளங்கிக் கொள்ள முயன்றான். அலாரம் வைத்த…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  64

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 63 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 23 தொடர்ச்சி மதுரையில் வையை நதியின் வடக்குக்கரையில் தல்லாகுளம், கொக்கிகுளம் முதலிய கலகலப்பான பகுதிகளிலிருந்து ஒதுங்கிப் புதூருக்கும் அப்பால் அழகர் கோயில் போகிற சாலையருகே அரண்மனை போல் பங்களா கட்டிக் கொண்டார். பங்களா என்றால் சாதாரணமான பங்களா இல்லை அது. ஒன்றரை ஏக்கர் பரப்புக்குக் காடு போல் மாமரமும், தென்னை மரமுமாக அடர்ந்த தோட்டம். பகலிலே கூட வெய்யில் நுழையாமல் தண்ணிழல் பரவும் அந்த இடத்தில் தோட்டத்தைச் சுற்றிப் பழைய காலத்துக் கோட்டைச்…