நாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா? – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி

  நாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா? இப்பொழுதெல்லாம் வலைத்தள ஊடகங்களில், குழந்தைக்குச் சூட்டுவதற்குத் தமிழில் நல்ல பெயர் பரிந்துரைக்குமாறு பலரும் அடிக்கடி கேட்கிறார்கள். பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! அதே நேரம், இப்படிக் கேட்பவர்களில் பலர் குழந்தை பிறந்த நட்சத்திரத்தைத் தெரிவித்து, அதற்குரிய எழுத்தில் தொடங்கும் பெயராகக் கேட்பதையும் பார்க்கிறோம். அஃதாவது இந்தியச் சோதிட முறையில் குறிப்பிடப்படும் 27 உடுக்களில் (நட்சத்திரங்களில்) ஒவ்வோர் உடுவுக்கும் உரியவையாகச் சில எழுத்துகள் குறிப்பிடப்படுகின்றன; அந்த எழுத்துகளில் தொடங்குமாறு பெயர் வைப்பது சிறப்பானது என நம்பும்…

மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்

வள்ளுவத்தை வாழ வைப்போம்! வாருங்கள்! உலகத்திருக்குறள் மையம் மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்   ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை 27.10.2018 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை பெயர் சூட்டுநர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் க.தமிழ்ச்செல்வன் முனைவர் இரா.மதிவாணன் இலக்குவனார் திருவள்ளுவன்   திருக்குறள் எழுச்சி மாநாடு – கால்கோள் விழா நண்பகல் 12.00 சிறப்புரை: திருக்குறள்தூயர் கு.மோகன்ராசு

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 4 இலக்குவனார் திருவள்ளுவன்.

(மாசி 24, 2046 / மார்ச்சு 08,2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] பெயர்ப் பலகை:-             பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்; அல்லது முதலில் தமிழில் 5 பங்கு, அடுத்து ஆங்கிலத்தில் 3 பங்கு, தேவையெனில் பிற மொழியில் 2 பங்கு என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என அரசாணை உள்ளதை…