அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது? – இலக்குவனார் திருவள்ளுவன்

அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது?     கலைஞர்  கருணாநிதியின் 94 ஆம் பிறந்தநாள் பெருமங்கலத்துடன் சட்டமன்றப்பணிகளின் மணிவிழாவும் நடைபெற உள்ளது.(60 ஆண்டினைக் குறிக்கும் இதனை மணிவிழா என்றுதான் சொல்ல வேண்டும். வைர விழா என்பது தமிழர் மரபல்ல.) இவ்விழா அரசியல் சார்புடையது  எனப் பொன்.இராதாகிருட்டிணன், தமிழிசை முதலான பா.ச.க.தலைவர்கள் கூறுகின்றனர். தன் வாழ்வில் பெரும்பகுதியை அரசியல் உலகில் செலவிட்டவரின் பிறந்தநாளின்பொழுது அரசியல் பேசாமல் எப்படி இருக்க இயலும்?   அரசியல் தலைவர்கள் தேநீர் அருந்தும்பொழுதும் இணைந்து உண்ணும்பொழுதும்…

அழிமொழி சமற்கிருதப் பற்றாளர்கள் தரும் தொடர் துன்பம் – இலக்குவனார் திருவள்ளுவன்

அழிமொழி சமற்கிருதப் பற்றாளர்கள் தரும் தொடர் துன்பம்  சமற்கிருதத்தால்  – சமற்கிருதப் பிழைப்புவாதிகளால் – நாம் காலந்தோறும் அடையும் தீங்குகள் பெரிதினும் பெரிது! அதன் தீமை குறித்தும் தமிழ்த்தேசியத்தைப் பேண வேண்டிய பாங்கு குறித்தும் நாம் விழிப்புணர்வு அடைந்துவரும் வேளையில், தமிழர்க்கெனத் தனியரசு இன்மையால் சமற்கிருதத்திணிப்புகளால் நாம் அடையும் இன்னல்கள் மிகுதியினும் மிகுதி! சமற்கிருதத்திணிப்பால் நாம் மொழித்தூய்மையை இழந்தோம்! தமிழ்பேசும் மக்கள் தொகையளவில் குறைந்தோம்! தமிழ்பேசுவோர் நிலப்பரப்பைப் பெரிதும் இழந்தோம்! தமிழ்த்தேசிய உணர்வை இழந்தோம்! பிறப்பு முதல் இறப்பு வரை, தமிழ், தமிழ், தமிழ்…