திரைப்படங்களின் துவக்கத்தில் திருக்குறள் தேவை! – பேரா. சி. இலக்குவனார்
(இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்! – தொடர்ச்சி) திரைப்படங்களின் துவக்கத்தில் திருக்குறள் தேவை! திருவள்ளுவர் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் அனைவரும் உணர முதலில் இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திருவள்ளுவர் திருநாள் தேசியப் பெருநாளாகக் கொண்டாடப்பட வேண்டும்; திருவள்ளுவர் பிறந்த நாளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என வலியுறுத்தினார் பேரா. இலக்குவனார். மகாவீரர் போன்றவர்களுக்கு ஒன்றிய அரசு இந்தியா முழுமையும் விடுமுறை விட்டுள்ளதால் இதனையும் நடைமுறைப்படுத்தலாம். இதன் மூலம் அனைத்து மக்களும் திருக்குறளின் அருமை பெருமைகளை அறியச் செய்ய வேண்டும். பேரா.இலக்குவனார் தமிழ் உரிமைக்கு…
வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்குகள் -1174 : தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்குகள் -1174 தி. ஆ. 2057, ஆவணி 26 12-09-2026 சனிக்கிழமை முற்பகல் 10 மணி திருவள்ளுவரின் மேலாண்மையியல் சிந்தனைகள் – 4 இடம்: மாக்கவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை . (பார்த்தசாரதி திருக்கோயில் பின்புறம்) திருவள்ளுவர் வாழ்த்து: நாள்தோறும் நற்பணிகள் நங்கைநல்லூர் துரைராசு வரவேற்புரை: திருக்குறள் ஆய்வாளர் கோ. சுமத்திரா தேவி, சென்னை இணைப்புரை : திருக்குறள் ப. மதியழகன், இயக்குநர்,…
இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!
(பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் – தொடர்ச்சி) இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்! ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் : அமைச்சர் யார் (1949), எல்லோரும் இந்நாட்டரசர், திருக்குறள்-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர் வகுத்த அரசியல் (1968), வள்ளுவர் கண்ட இல்லறம் (1971) எனத் திருக்குறளுக்குச் சிறப்பான உரையும் விளக்கங்களும் எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம். 1. எளிமை, 2. நுண்மை, 3. பகுத்தறிவுப் பார்வை, 4. தமிழ் நெறிப் பின்புலம்,5. பெண்ணுரிமை பேணல், 6. உரையாளர் தவறுகளை நயம்பட மறுத்தல்,7. ஒப்புமைக்…
இலக்குவனார் திருக்குறள் விருது : தகுதியானவர்கள் தகவல் தரலாம்
இலக்குவனார் திருக்குறள் விருது தகுதியானவர்கள் தகவல் தரலாம் திருக்குறள் குறித்த கட்டுரைகள், நூற்கள், உரைகள், சொற்பொழிவுகள், அமைப்புகள், போட்டிகள், காணொளிகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பி வரும் திருக்குறள் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருது வழங்கப் பெறும். 1.) கட்டுரைகள், நூற்கள், உரைகள் 2.) சொற்பொழிவுகள், வகுப்புகள் 3.) இணையத் தளங்கள், வலைப்பூக்கள், இதழ்கள் 4.) மொழி பெயர்ப்புகள் 5.) அமைப்புகள், போட்டிகள், பிற வகைகள் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்று விருதுகள் வழங்கப் பெறும். மேலும்,…
நாலடி நல்கும் நன்னெறி 31. இருக்கும்போதே கொடுத்திடு! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 30 : பண்பாளர் நட்பு இருப்போர் பிறப்பை வெறுப்பதில்லை- தொடர்ச்சி) முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புளபின்னரும் பீடழிக்கும் நோயுள; – கொன்னேபரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. நாலடியார், பாடல் 92, அறத்துப்பால், ஈகை கருத்து: நம் எதிரே இறப்பு, மூப்பு, பிணி ஆகிய மூன்றும் காத்திருக்கின்றன. எனவே, கையில் செல்வம் அல்லது பொருள் அல்லது உணவு உள்ளபோதே, அதை மறைத்து வைக்காமல் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும். பதவுரை கவிஞர் மாயவநாதன் “தனக்கு தனக்கு என்று…
குறட் கடலில் சில துளிகள் 47: நல்லினத்துடன்சேர்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – தொடர்ச்சி) குறட் கடலில் சில துளிகள் 47: நல்லினத்துடன் சேர்க! நற்சேர்க்கை போல் சிறந்த துணை இல்லை! நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். (௪௱௬௰ – 460) உலகில் நல்லினம்போல் துணையாய் அமைவது வேறில்லை; தீயினம்போல் துன்பம் தருவது யாதுமில்லை. பதவுரை நல்=நல்ல; இனத்தின்=சேர்க்கையைவிட; ஊங்கு=மேற்பட்ட; துணை=துணை; இல்லை=இல்லை; தீ=தீய; இனத்தின்- சேர்க்கையைவிட; அல்லல்=துயர்; படுப்பதூஉம்=உண்டாக்குவதும்/ தருவதும்; இல்=இல்லை. ‘ஊங்கு’ என்ற சொல்லுக்கு மிக்க,…
நாலடி நல்கும் நன்னெறி 30 . பண்பாளர் நட்பு இருப்போர் பிறப்பை வெறுப்பதில்லை.
(நாலடி நல்கும் நன்னெறி 29: தீயன விலக நல்லோரைச் சார்க! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 30. பண்பாளர் நட்பு இருப்போர் பிறப்பை வெறுப்பதில்லை. இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்பிறப்பினை யாரும் முனியார்; – பிறப்பினுள்பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்நண்பாற்றி நட்கப் பெறின். நாலடியார் பாடல் 174; பொருட்பால் – நல்லினம் சேர்தல் [ இறப்ப நினையும்கால் இன்னாது எனினும் பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள் பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பு ஆற்றி நட்க பெறின். ] பொருளுரை:மிகவும்…
குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! மனநலத்தி னாகு மறுமைமற் றஃது மினநலத்தி னேமாப் புடைத்து (திருக்குறள், ௪௱௫௰௯ – 459) [ மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. ] மனநலத்தால் மறுமை உண்டாகும். அதுவும் இன நலத்தால் சிறப்படையும். பதவுரை: மன நலத்தின்=உள்ளத்தின் சிறப்பால்; ஆகும்=உண்டாகும்; மறுமை=மறுமுறை அடையும் நல்வாய்ப்பு; மற்று=மீண்டும்; அஃதும்= அங்ஙனம் ஆவதும்;…
கொல்லும் சொல் : ‘மாடல்’ – எண்ணுவோம் தமிழில் : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! 24 இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1 தொடர்ச்சி) கொல்லும் சொல் : ‘மாடல்’ தி.மு.க.தலைவருக்கு ஆங்கில மோகம் உள்ளது அனைவரும் அறிந்ததே! “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” எனப் பேசி வந்தாலும் ஆங்கிலச்சொல் அறிமுகமானால் அதைத்தான் பயன்படுத்துபவர். விளம்பரங்களிலும் புதிய திட்ட முழக்கங்களிலும் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுவதும் அறிந்ததே. நாம் இதனைப் பன்முறை சுட்டிக்காட்டியுள்ளோம். சிலவற்றைக் கேட்டுக் கொண்டாலும் திராவிட மாடல் பெயர்ப் பற்று அவரை விட்டுப் போகவில்லை. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. …
குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 45. இன நலமே பாதுகாப்பு! மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௮ – 458) மனம் நன்னலமாக இருப்பினும் சான்றோர்க்கு இனநலமே பாதுகாப்பானது. பதவுரை: மன-மனத்தின்; நலம்-நன்மை; நன்கு-மிகுதியும்; உடையர்-உ்டையவர்கள்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கும் பண்பாளர்க்கு; இனநலம்-இனத்தின் நன்மை; ஏமாப்பு-வலிமை, பாதுகாவல்; உடைத்து-உடையது. கருத்துரைகள் மன நலம் இருப்பினும் சிற்றினம் சேராமல் நல்லினத்துடன் சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பு…
நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 27 அறநெறி அறியுங்கள்! அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். [அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர் கடு சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார் வாய் சொல்.] நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 172 பதவுரை: அறம் = அறத்தின்; நெறி =…
குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 44 புகழைத் தருவது நற்றுணையே! மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௭ – 457) மன்னுயிர்க்கு ஆக்கம் தருவது நல்ல மனநிலையே! எல்லா வகையான புகழையும் தருவது நல்லினத்தின் துணையே! பதவுரை: மனநலம்=மனத் தூய்மை, மனத்தது நன்மை; மன்னுயிர்க்கு= நிலைபெற்ற உயிர்க்கு; ஆக்கம்=பெருக்கம், செல்வம், சொத்து, உயர்வு, ஆற்றல்; இனம்=குலம், சுற்றம்,…
