தூய்மைக்கேடாக்கப்படும் மஞ்சளாறு அணை

  தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நாளுக்கு நாள் தூய்மைக்கேடாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் பேரிடர் உள்ளது.   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் உழுதொழில், குடிநீர்த் தேவைகளுக்காகக் கட்டப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் பயிர் நிலங்கள் பயன்அடைந்து வருகின்றன. இதே போல மஞ்சளாறு அணையில் உள்ள நீரை நம்பி ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை பயனடைந்து வருகின்றன.   இப்பொழுது மஞ்சளாறு அணை ஆடு, மாடு போன்ற கால்நடைகள்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 13 –பொறி.க.அருணபாரதி

(ஆவணி 22, 2045 / செப்.07, 2014 இதழின் தொடர்ச்சி) 13. சியான் நகரத்துச் சுடுமண் வீரர்கள்  சியான் நகரின் முதன்மைக் கடைகளிலும், உணவகங்களிலும் வாயிலில் ஒரு சுடுமண்படிம(terracotta or Terra-cotta) வீரர் நிற்பதை நாம் இன்றைக்கும் காண முடியும். சியான் நகருக்குப் பெருமை சேர்க்கும் ஓர் இன்றியமையாத இடம் சுடுமண்படிம வீரர்கள் அமைந்துள்ள பகுதிதான். ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, இவ்விடத்தை 8ஆம் உலக விந்தை என அறிவித்துள்ளது என்பதால், உலகெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் அங்கு வருகிறார்கள். அப்படி என்ன விந்தைம் இங்கு இருக்கிறதென்று கேட்கிறீர்களா?…

சிரீ காளீசுவரி கல்லூரி, தமிழியல்துறை, பயிற்சிப்பட்டறை

புரட்டாசி 8, 2045 / 24.09.2014 சிவகாசி கதையும் கவிதையும் சிறுகதைச்சிந்தனைகள் கவிதைக் கண்ணோட்டம்    

அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 69 ஆவது மாத நிகழ்ச்சி

அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 69 ஆவது மாத நிகழ்ச்சி வருகின்ற  புரட்டாசி 11,2045 / 27.09.2014 சனிகிழமை மாலை 6.30 மணிக்கு அம்பத்தூர் திருமால் திருமண மண்டபதில் நடைபெற உள்ளது . தலமை : திரு.பள்ளத்தூர் பழ. பழனியப்பன் (தலைவர், கம்பன் கழகம்) சொற்பொழிவு : திருமதி.வெற்றிச்செல்வி – பொருள் :சுந்தரன் போற்றும் சுந்தரன் (தலைமை ஆசிரியை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆவடி) தமிழ் சுடர் விருது பெறுபவர்: பேராசிரியை : முனைவர்:ம.வே.பசுபதி மேனாள் முதல்வர், திருப்பனந்தாள் கலை அறிவியல் கல்லூரி, திருப்பனந்தாள் பொருள் :…

புழுதிவாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்

    புழுதிவாக்கம் அண்ணாமலை தெரு குடியிருப்போர் சங்கம், புழுதிவாக்கம் அரிமா சங்கத்துடன் இணைந்து வரும் புரட்டாசி 5, 2045 / 21.09.14 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 2.30 மணி வரை இத் தெருவில் இலவச மருத்துவ முகாம் நடத்துவதாகவும் பொதுமக்கள் பங்கேற்றுப் பயன்பெருமாறும் அண்ணாமலை தெரு குடியிருப்போர் சங்கத் தலைவர் திரு இ.நல்ல பெருமாள் என்ற குமரன் தெரிவித்துள்ளார்.   குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை மருத்துவர் முத்துக்குமார் தலைமையில் மருத்துவர்கள், பொது மருத்துவச் சோதனை, எலும்பு தொடர்பான பரிசோதனை, சருக்கரை…

கல்பெயர்த்து இழிதரும் – (உ)ருத்ரா பரமசிவன்

    கல் பெயர்த்து இழிதரும் இமிழ் இசை அருவி புல்லோடு ஆங்கு பழனம் தழீஇ பச்சை படர்த்தி பகலவன் தீவிழி அவிப்பக் குளிரும் நீர் விரி பரவை நெடுநல் நாட!அஃது மன் அன்று உள் ஊறு தண்புயல் கண்புயல் படர‌ அடுதுயர் தந்தனை வெஞ்சுரம் ஏகி. நீர்ச்சுனை தீச்சுனை போலும் நிழலும் வேகும் அழல்நுரை அள்ளி அன்னமும் கலங்கும். ஐய நின் துழந்த பிரிவின் கொல் துயர் பொய்த்தீ பற்றி பொல்லாங்கு செய்யும். மைபொதி வானும் புள்நிரல் பொலிவும் இடி உமிழ்பு கண்டு…

தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டம்

  தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டத்தால் (அட்டகாசத்தால்) விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, வைகை அணைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வெளவாலகள் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளது. இவ்வகை வெளவால்கள் இப்பொழுது மழை இல்லாததால் பழங்கள் இருக்கும் பகுதியை நாடி இடம் பெயர்ந்து வருகின்றன. மேலும் இப்பொழுது நாவல் பழப் பருவம் தொடங்கியுள்ளதால் நாவல்மரங்கள் அடங்கிய பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.   இவ்வாறு நாவல்மரங்களில் தங்களுக்குத் தேவையான உணவுகள் கிடைக்காவிட்டால் அண்மையில் உள்ள   சீமையிலுப்பை(சப்போட்டா), வெள்ளரித்தோட்டம், முந்திரித்தோட்டம், பப்பாளித்தோட்டங்களில் நுழைந்து…

1 3 4 5 9