தேவதானப்பட்டியில் மின்கம்பங்களால் கண்டம்(ஆபத்து)

தேவதானப்பட்டி பகுதியில் மின்கம்பங்களால் மின்கேடு(விபத்து) ஏற்படும் தீக்கேடு உள்ளது. தேவதானப்பட்டி பகுதியில் அண்மைக்காலமாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மின்கம்பங்களில் கம்பிவடத்தொலைக்காட்சியின் கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. இணைப்புவடக் கம்பிகள் முறையாக இணைப்பில்லாமல் ஆங்காங்கே விரிவு ஏற்பட்டு அதன் மேல் காப்புநாடா ஒட்டப்படாமல் உள்ளது. இதனால் மழை நேரங்களில் கம்பிகள் செல்லும் வீடுகளின் மீதுள்ள இரும்புக் கதவு, தகரம் ஆகியவற்றில் மின்சாரம் பாய்கிறது. இவை தவிர மின்கம்பங்களில் ஆங்காங்கே செடிகள் பின்னிக்கிடக்கின்றன. இதனால் செடி, கொடிகளை உண்ணச்செல்லும் கால்நடைகள் அதன்மூலம் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது….

‘தாய்வீடு’ இதழ் வழங்கும் அரங்கியல் விழா

‘தாய்வீடு’  இதழ் வழங்கும் அரங்கியல் விழா எதிர்வரும் 2045, ஐப்பசி 1, 2 (ஒக்டோபர் 18ஆம் 19 ஆம்) நாள்களில் 1785 ஃபிஞ்ச்சு நிழற்சாலையில் (Finch Avenue) அமைந்திருக்கும் யார்க்கு உடு (York wood) கலையரங்கில், மூன்று நாடகங்கள்:   கே. கே. இராசாவின் நெறியாள்கையில் ‘தீவு’   ஞானம் இலம்பேட்டின் நெறியாள்கையில் ‘காத்திருப்பும் அகவிழிப்பும்’   பொன்னையா விவேகானந்தனின் நெறியாள்கையில் ‘சுமை’ ஐப்பசி 1, 2045 / அக்.18 ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் ஒன்று முப்பதுக்கும் ஆறு மணிக்குமாக இரண்டு காட்சிகள்,…

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் – இலக்குவனார் திருவள்ளுவன்

  உலகில் பண்பிலார் பெருகிவிட்டனர். ஒழுங்கின்மையும் ஊழலும் ஒழுக்கக்கேடும் பெருகிவிட்டன. எனினும் பண்பில் சிறந்தவர்கள் இன்றும் உள்ளனர்! இனியும் இருப்பர்! நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.   என்னும் ஔவையார் மூதுரைக்கு(10) இணங்க இத்தகைய சிலரால்தான் பிறர் பயனுறுகின்றனர். இத்தகையோரை நாம் வாழ்வில் சந்தித்திருப்போம்! நானும் பலரைச் சந்தித்துள்ளேன். மறக்க முடியாத அவர்களுள் இருவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர விரும்புகின்றேன்.   1980 ஆம் ஆண்டில் ஒருநாள்!…

அகிலத்தில் அமைதி காப்போம் ! – எம். செயராம(சர்மா), மெல்பேண்

  சமயத்தின் பெயரால் சண்டை  சாதியின் பெயரால் சண்டை குமைகின்ற உள்ளங் கொண்டார் குழப்பமே செய்வார் நாளும் அமைதியை எண்ணிப் பாரார் ஆரையும் மனதில் கொள்ளார் அழித்தலை மட்டும் நாடி அனைத்தையும் ஆற்ற வந்தார் வெறி தலை கொண்டதாலே நெறி தனை மறந்தேவிட்டார் அறி வெலாம் மங்கிப்போக அரக்கராய் மாறி விட்டார் தூய்மையாம் சமயம் தன்னை தூய்மையாய் பார்க்கா நின்று பேயென உருவம் கொண்டு பிணக்காடாய் மாற்று கின்றார் கடவுளின் பெயரைச் சொல்லி கருணையை வெட்டி வீழ்த்தி தெருவெலாம் குருதி ஓட செய்கிறார் நாளும்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 16 – பொறி.க.அருணபாரதி

   (புரட்டாசி 19, 2045 / 05 அக்தோபர் 2014 இன் தொடர்ச்சி) 16.  பொறாமைப்படத்தக்க இரு நிகழ்வுகள்   அன்றொரு ஞாயிற்றுக்கிழமை, சீன மக்கள் மீது ஆர்வமும் பொறாமையும் ஏற்படும் அளவிற்கு இரண்டு நிகழ்வுகள் கண்டேன்.   அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலையில் சற்றுக் காலத்தாழ்ச்சியாக எழுந்திருந்தேன். என் அறைக்கு ஒரு பெண், கையில் ஒரு பெட்டியுடன், நவநாகரிக உடையணிந்து கொண்டு வந்திருந்தார். பார்ப்பதற்கு, நான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகள் போல் இருந்தாள். என்னைப் பார்த்ததும், “நீ ஃகௌ” (NI HAO…

சிறந்த திறனாய்வர் விருது, 2014

பாளையங்கோட்டை மேலும் வெளியீட்டகத்தின்   விருது வழங்கலும் கலந்துரையாடலும்   26.09.2045 / 12.10.2014 ஞாயிறு மாலை  4.00 மணி இக்குசா மையம், சென்னை

புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது

புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது என்றுகல்வியமைச்சர் தியாகராசன் 19.9.2014இல் புருசோத்தமன் ச.ம.உ கேள்விக்குவிடையளிக்கும் போது சட்டமன்றத்தில் சொன்னார். அதைத் திரும்பப்பெற வேண்டும்என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கும் கோரிக்கை 32ஆண்டுக்கோரிக்கைஎன்றும் என்.ஆர். பேராயம் (என்.ஆர்.காங்)சட்டமன்றத்தேர்தலில் அளித்தஉறுதிமொழிகளில் ஒன்று தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும் என்பதாகும் என்பதையும் கல்வியமைச்சரிடம் தமிழமல்லன் எடுத்துக் காட்டி வலியுறுத்திச் சொன்னார். தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கும் உறுதிமொழியை முதல்அமைச்சர் அரங்கசாமி சட்டமன்றத்தில் 2007இல் அளித்துள்ளார் என்றும் எனவே மறுப்பை மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் 7.10.2014 அன்று கல்வி யமைச்சர் தியாகராசனிடம் நேரில் வேண்டுகோள் அளிக்கப்பட்டது….

தேவதானப்பட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி

  தேவதானப்பட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால்   உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.  தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில் தக்காளிப் பயிரிடல் நடைபெற்று வருகிறது.    இப்பகுதியில் விளையும் தக்காளிகள் சென்னை, பெங்களுர், வத்தலக்குண்டு, ஆண்டிப்பட்டி சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.   கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் நெல், கரும்பு, வாழை போன்ற பயிரிடலை விட்டு விட்டுக் குறுகிய காலப்பயிர்களான தக்காளி, கத்திரிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில்…

வாழ்வும் அறமும் – தமிழரசனின் நூல் வெளியீடு

26.09.2045 / 12.10.2014 ஞாயிறு பிற்பகல் 2.00 மணி வடபழனி, சென்னை கலைஇலக்கியத் தமிழ்த்தேசியத் தடம் நடத்தும் தோழர் தமிழரசனின் ‘வாழ்வும் அறமும்’ நூல் வெளியீடு   – கலகம்

தேனிப் பகுதியில் நீர்தெளிப்பான் பாசனத்திற்கு மாறிவரும் உழவர்கள்

  தேனிப் பகுதியில் நீர்தெளிப்பான் பாசனத்திற்கு உழவர்கள் மாறிவருகிறார்கள்.   தேனிப் பகுதியில் பல ஆண்டுகளாகப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வரும் உழவர்கள் பெரும்பாலும் சோளம்,கம்பு, மணிலா போன்ற பயிர்களைப் பயிரிட்டு வந்தனர். கடந்த சில வருடங்களாக உரிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் எல்லாம் வற்றிவிட்டன. அதனால் உழவர்கள் பயிர்த்தொழிலில் ஈடுபடுவது பெரும் அறைகூவலாக இருந்து வருகிறது.   தண்ணீர்த்தட்டுப்பாடும், வேலையாட்கள் தட்டுப்பாடும் உள்ள சூழ்நிலையில் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உழவர்கள் தங்கள் விளை நிலங்களைத் தரிசு நிலங்களாக மாற்றிவிட்டனர்….

26-ஆம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு நிகழ்வு

தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம், மாநிலக் குழு புது நூற்றாண்டுப் புத்தக இல்லம் (நியூ செஞ்சுரி புக் அவுசு) 26.09.2045 / 12.10.2014 ஞாயிறு மாலை  4.30 மணி திருச்சிராப்பள்ளி