தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்

கொட்டு முரசே! எல்லார்க்கும் நல்லின்பம் எல்லார்க்கும் செல்வங்கள் எட்டும் விளைந்ததென்று கொட்டுமுரசே – வாழ்வில் கட்டுத் தொலைந்ததென்று கொட்டு முரசே! இல்லாமை என்னும்பிணி இல்லாமல் கல்விநலம் எல்லார்க்கும் என்றுசொல்லி கொட்டுமுரசே – வாழ்வில் பொல்லாங்கு தீர்ந்ததென்று கொட்டு முரசே! சான்றாண்மை இவ்வுலகில் தேன்றத் துளிர்த்த தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டுமுரசே – வாழ்வில் ஊன்றிய புகழ்சொல்லிக் கொட்டு முரசே! ஈன்று புறந்தருதல் தாயின்கடன்! உழைத்தல் எல்லார்க்கும் கடனென்று கொட்டுமுரசே! – வாழ்வில் தேன்மழை பெய்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்

கலைச்சொல் தெளிவோம்! 146 பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia; 147 புதுமை வெருளி-Neophobia

பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia   faeces-மலம் எனச் சூழறிவியல், மீனியல், மனைஅறிவியல், மருந்தியல், கால்நடை அறிவியல் ஆகியவற்றில் பயன்படுத்தி வருகின்றனர். மலம் என்பதை இடக்கர் அடக்கலாகப் பவ்வீ (பகரத்தில் வரும் ஈகாரம்-ப்+ஈ) என்பது தமிழ் மரபு. மலத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia புதுமை வெருளி-Neophobia   புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுநர் (புறநானூறு : 174.16) இது தவிர, புதிது(14), புது(109), புதுவ(4), புதுவதின்(1), புதுவது(19), புதுவர்(1), புதுவன(1), புதுவிர்(2), புதுவை(1), புதுவோர்(5), புதுவோர்த்து(1), எனப் புது…

தமிழ் எங்கணும் பல்குக! பல்குக!- பாவேந்தர் பாரதிதாசன்

நன்று தமிழ் வளர்க! – தமிழ் நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக! என்றும் தமிழ் வளர்க! – கலை யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக! இன்பம் எனப்படுதல் – தமிழ் இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! – பாவேந்தர் பாரதிதாசன்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 20– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)   காட்சி – 20 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :(நாடகக் காட்சி முடிவுபெற “காணோமே எனது பெண்ணைத்தான்” கேட்டது மகளிர் பகுதியிலே அழுகுரல் புலம்பலுமாகவே) காவலர் நிலைமையை சீர்செய்ய அமைதி அமைந்தது ஆங்கே பாவலர்சிறிதும் இவற்றையயெல்லாம் பார்க்காது! ஏதோ! நினைத்திருந்தார் அன்ப   :  மொழிவீர்! என்ன சிந்தனை? மொழியாதிருத்தல் நன்றில்லையே? கவி     :  விழி நீர் சொட்டக் கண்டதனை விளக்கமாய் எடுத்தே உரைக்கின்றேன்!…

கலைச்சொல் தெளிவோம்! 144 பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia; 145 பயிர் வெருளி-Botanophobia

பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia   13 ஆம் எண் குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia 145 பயிர் வெருளி-Botanophobia பயிர்(22) சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. பயிர் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் பயிர் வெருளி-Botanophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்மேல் ஆணை! – பாவேந்தர் பாரதிதாசன்

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை! தமிழகமேல் ஆணை! துாயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன்; நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டும், ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன் தாய்தடுத் தாலும் விடேன்! எமைநத்து வாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன்! தமக்கொரு தீமை. என்று நற்றமிழர் எனைஅழைத்திடில் தாவி இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான் இனிதாம் என் ஆவி! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த என் மற…

கலைச்சொல் தெளிவோம்! 143 படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia

படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia   படி(14), படிக்கால்(1), படிநிலை(2), என்பன போன்று பல்வேறு சொற்கள் சங்கப்பாடல்களில் வருகின்றன. எனினும் இவை பெரும்பாலும் படிதல் முதலான பொருள்களையே குறிக்கின்றன. படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப (கலித்தொகை : 35 2) இதற்கு உரை எழுதியுள்ள புலவர் மாணிக்கனார் படி என்பதாவது ஒருவரது மேன்மை கருதி மனமுவந்து ஏற்பாடு செய்யும் உணவுத்திட்டம் முதலியன என்கிறார். இன்றைக்குப் பணியாளர்களுக்குத் தரப்படும் படி(allowance) என்பதற்கு இது முற்றிலும் பொருந்துகின்றது. எனினும் மாடி அல்லது ஏணி…

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 6 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 6 (புத்தக வெளியீட்டு முயற்சி-1)      2009-இலிருந்து புத்தக வெளியீட்டிற்கான என் தனி முயற்சி  மும்முரமாகத் தொடங்கியது. இயேன் அம்மையாருடன் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அவர் இருந்தும் இல்லாத நிலை. எனவே, பல இடங்களில் விளக்கம் தருவதற்காக அடிக்குறிப்புகளை நானே சேர்க்கவேண்டியிருந்தது. ஒரு வழியாகக் கருத்துக் கோவையை முடித்தேன். பிறகு புத்தக வடிவை உருவாக்கத் தொடங்கினேன்.    சிக்கல் − 1   பாதிரியாரின் 16-ஆம்…

ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்! – பாவேந்தர் பாரதிதாசன்

எந்நாள்? அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? அந்த வாழ்வுதான் இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார் இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்; ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்! புலி, வில், கயல் கொடி மூன்றினால் புது வானமெங்கும் எழில் மேவிடும் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை, பிற மாந்தர்க்கும் உயி ரானதே பெறலான பேறு சிறி தல்லவே! அந்த வாழ்வுதான் எந்தநாள்…

அருந்தமிழ் நுகர்ந்து மகிழ்வோமே! – கவிமணி

வள்ளுவர் தந்த திருமறையைத் – தமிழ்      மாதின் இனிய உயிர் நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும்      உத்தம ராகி ஒழுகுவமே. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன்      பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின்      நன்னயம் முற்றுந் தெளிகுவமே, தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை      தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்      ஓதி யுணர்ந்தின் புறுவோமே. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 2

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி) காட்சி இரண்டு வால்மீகி ஆசிரமத்தில் சீதை அடைக்கலம்  [இடம்: கங்கை யாற்றின் தென்கரை ஓரம்.  நேரம்: பகல்.பங்கு கொள்வோர்: சீதை, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்]  [அரங்க அமைப்பு: தேரில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை யாற்றைக் கடந்து இலட்சுமணன், சீதை ஆகியோர் கரையோரத் தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதையின் ஆடை,   ஒப்பனை, அணிகலன் பேழைகளைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின்…

புகழ்ச்செல்வி 100ஆவது இதழ் வெளியீட்டு விழா

சித்திரை 22, 2046 / மே05, 2015   பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தொப்புள்கொடி உறவுகளுக்கு வணக்கமும் வாழ்த்தும். நமது புகழ்ச்செல்வி இதழின் 100 ஆவது வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சித்திரை 22, 2046 – 5.5.2015 இல் நடக்க இருக்கின்றது. அந்நிகழ்வுக்கு உங்களை நேரில் பார்த்து அழைக்க விருப்பம் இருந்தாலும் காலமும் பொருள்நிலை சூழலும் இடம் கொடுக்க வில்லை ஆகையால் உங்கள் அகத்திற்கே வந்து தருவதாய் எண்ணி வருகை தாருங்கள் நம் இதழ் விழா என்றே இப்படிக்கு உங்கள் உறவான — பரணிப்பாவலன்