சரசையூர் ம.கங்காதரம் நூல் அறிமுகவிழா

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் உப அதிபர் சரசையூர் ம.கங்காதரம் அவர்களின் நூல் அறிமுகவிழா 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் இடம்பெறவுள்ளது. . கணிதத் துறைப் பட்டதாரியாகிய இவர் கைவரி வல்லுநராகவும் விளங்குகின்றார். சரசாலை சரசுவதி வித்தியாலயம் மற்றும் மட்டுவில் கமலாசனி வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவரான இவர் தமிழ்மேற் கொண்ட தீராக் காதலினால்  பயன்பாட்டுக்கணக்கையும் தூய தமிழிலேயே கற்பித்தார். . ஏ, பி, சி ஒரு முக்கோணம் என்பதற்கு மாற்றாக அ, ஆ, இ ஒரு முக்கோணம் என கணக்குக் கற்பித்தார். அவர்…

பகுபடைத்தலைவர் பால்ராசின் ‘சமர்க்கள நாயகன்’ நூல் அறிமுக விழா

  தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பகுபடைத்தலைவர் பால்ராசு  27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர். தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாகச் செயற்பட்டவர். இவரது நினைவுகளைச் சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீட்டுப்  பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியீடப்பட்ட நூல் …

ஈழமும் பன்னாட்டுச் சதிகளும் – ஈரோட்டிலும் கோபியிலும் கருத்தரங்கம்

கோபியில் சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் காலை10 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். ஈரோட்டில்  சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் மாலை 5 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். மே17 இயக்கம் தவறாமல் வருக!

கலைச்சொல் தெளிவோம்! 135 நீர் வெருளி-Aquaphobia

கலைச்சொல்  135 நீர் வெருளி-Aquaphobia தண்ணீர்(3), நீர்(699) ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன. தண்ணீரைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சத்தின் பெயர், நீர் வெருளி-Aquaphobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 137 நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia

 நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன (மதுரைக் காஞ்சி : 682) தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து, (நெடுநல்வாடை : 55) நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய், (மலைபடுகடாம் : 149) நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் (நற்றிணை : 154.9) நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் (குறுந்தொகை : 160.1) நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் (ஐங்குறுநூறு : 388.1) நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு (கலித்தொகை :…

கலைச்சொல் தெளிவோம்! 136 நூல் வெருளி/ புத்தக வெருளி-Bibliophobia

 நூல் வெருளி/ புத்தக வெருளி-Bibliophobia   நூல் நெறி மரபின், பண்ணி, ஆனாது (சிறுபாண் ஆற்றுப்படை : 230) செறிந்த          நூல் வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி         ஊர் காப்பாளர், (மதுரைக் காஞ்சி : 645-647) நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு (நெடுநல்வாடை : 76) திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது, (கலித்தொகை : 99.3) நூலோர் புகழ்ந்த மாட்சிய (பெரும்பாண் ஆற்றுப்படை :487) என்பன போல் நூல்பற்றிய சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் உள்ளன….

சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!

ஆந்திரரின் அளப்பரிய கொடுமை! வெங்கையாவிற்குக் கடும் கண்டனம்! சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!   கொடுங்கோல் கொலையாளி இராசபக்சேவை அழைத்து அழைத்து ஆந்திரர்களும் அவனின் மறு பதிப்பாக ஆகிவிட்டனர் போலும்! கூலி வேலைக்கு அழைத்து வந்த தமிழர்களைத் திட்டமிட்டுத் துன்புறுத்தி, உடலுறுப்புகளை வெட்டி, எரியூட்டி, குண்டுகளால் துளைத்துக் கொன்ற செய்தி ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனால், அப்பாவி மக்களைக் கொன்றோமே என்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லை. எப்படி இரக்க உணர்வு வரும்? திட்டமிட்ட படுகொலை என்னும் பொழுது அதைத்தானே சரி என்பார்கள்….

படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும் – இலக்குவனார் திருவள்ளுவன்

படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும் – இலக்குவனார் திருவள்ளுவன்   30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள். தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சப்பானிய நண்பர் இரோசி யமசித்தா தமிழ்ச்சிறுகதை, புதின ஆசிரியர்கள் குறித்துக் கேட்டார். மு.வ., மணிவண்ணன்(தீபம் நா.பார்த்தசாரதி) முதலானவர்பற்றிக் கூறினேன். கல்லூரி மாணவனாக இருந்தபொழுது நூலகத்தில் இருந்த அனைத்து மு.வ. நூல்களையும் தமிழ்வாணன் நூல்களையும் படித்ததையும் அறிஞர் அண்ணா முதலான திராவிடப் படைப்பாளர்கள் இளந்தலைமுறையினரின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதையும் குறிப்பிட்டேன். இக்கால எழுத்தாளர்கள் பற்றிக் கேட்டார். முதுகலையில் செயகாந்தன் படைப்புகள் சிலவற்றையும் கி.இராசநாராயணன்…

விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்

விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் சித்திரை 1, 2946, ஏப்பிரல் 14, 2015 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி – 12.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் விண் தொலைக்காட்சியின் நீதிக்காக நிகழ்ச்சியில் பண்பாடு குறித்துக் கருத்து தெரிவிக்கின்றேன். மறு ஒளிபரப்பு இரவு 8.00 மணி – 9.00    http://wintvindia.com இணையவரியில் இணையத்திலும் உடன் காணலாம்.  வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 1

நாடகப் பாத்திரங்கள்: சீதை, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிட்டர், விசுவாமித்திரர், அனுமான், பத்து அல்லது பன்னிரண்டு அகவைச் சிறார் இலவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்…. [தொடக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதையை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்] முதலாம் காட்சி சீதை நாடு கடத்தப்படல்   இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை, நேரம்: பகல் வேளை. பங்கு…

1 3 4 5 9