ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

புரட்டாசி 10, 2046 / செப்.27, 2015 காலை 11.00   இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இந்திய அலுவலகம் முற்றுகைப்போராட்டம்! இனப்படுகொலைகுற்றவாளி இந்திய அரசாங்கமே! தமிழர்களுக்கு இனியும் துரோகம் செய்தே! கலப்பு விசாரணை என்பது கயமைத்தனம்! பத்துக்கோடித் தமிழர்களின் ஒரே கோரிக்கை இனப்படுகொலாக்கான தன்னுரிமையுடைய பன்னாட்டு உசவாலும் பொதுவாக்கெடுப்புமே! தமிழ்இளைஞர்கள் – மாணவர்கள் கூட்டமைப்பு

‘மறுவாசிப்பில் சாவி’

இலக்கியவீதி  & பாரதிய வித்யாபவன் சிறப்புரை : திருவாட்டி சிவசங்கரி அன்புடையீர் வணக்கம்… நலனே விளைய வேண்டுகிறேன். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்  –   இந்த மாதம், ‘மறுவாசிப்பில் சாவி’.   புரட்டாசி 09, 2046/ 26.09.2015 – சனிக்கிழமை  மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் சந்திப்போம்…    என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை – த.தே.வி.இ.கருத்தரங்கம்

திலீபன் 28ஆவது நினைவுநாள் கருத்தரங்கம்   இருபத்தெட்டு ஆண்டு காலம் முன்பு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் இந்தியத் தலையீட்டால் நெருக்கடிக்கு உள்ளான போது சொட்டு நீரும் அருந்தாத பட்டினிப் போராட்டத்தில் உயிர் தந்து தடை நீக்கிய ஈகச்சுடர் திலீபன் நினைவு நாளில் …. இன்று சிங்கள-அமெரிக்க-இந்தியக் கூட்டுச் சதியால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? என்ற வினாவிற்கு விடைதேடும் கருத்தரங்கினை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடத்துகின்றோம். திலீபன் நினைவை நெஞ்சில் சுமந்து……

ஈழத்தீர்மானம் : முதல்வருக்கும் சட்டமன்றத்தினருக்கும் பாராட்டு!

ஈழத்தீர்மான விளக்கப் பரப்புரை மேற்கொள்க!   வரலாற்றில் இடம் பெறக்கூடிய, தமிழகச் சட்டமன்றத்தின் குறிப்பிடத்தக்க நாளாக ஆவணி 30, 2046 / செப்.16, 2015 அமைந்துள்ளது. அன்றுதான் முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதா, ஈழத்தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நம்பிக்கையும் ஆறுதலும் தரும் வகையில் தனியாள் தீர்மானம் ஒன்றைக் கொணர்ந்து நிறைவேற்றினார். தமிழ் ஈழ மக்கள் எண்ணற்ற சாலியன்வாலாபாக்(கு) படுகொலைக்கும் மேலான இனப்படுகொலைச் சதியால் மாண்டு போயினர். ஆனால், இதனை இனப்படுகொலை என்று சொல்லக்கூட உலக நாடுகள் அஞ்சுகின்றன. நடுநிலை என்று சொல்லிக் கொள்வோரும் போர்க்குற்றம் என்று…

கரும்பும் தூய வேளாண்மையும் – வைகை அனிசு

குல தெய்வக்கோயில்களுக்கு விற்பனை ஆகும் கரும்புகள்   தேவதானப்பட்டிப் பகுதியில் குலதெய்வக்கோயில்களுக்கு கொண்டு செல்வதற்குக் கரும்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, காமாட்சியம்மன்கோயில் பகுதிகளில் கரும்பு வேளாண்மை நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் விளையும் கரும்புகளைக் காட்டிலும் இக்கரும்பு அதிகமான சுவையுடன் இருக்கும். மேலும் கோயில் அமைந்துள்ள பகுதி என்பதாலும் முதல் கரும்பைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதை இப்பகுதி உழவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தெய்வ பக்தியுடன், இறைச்சிக்கழிவுகள், பன்றிச்சாணம் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதில்லை. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டம்,…

சிலம்புச்செல்வர் ம.பொ.சி. 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மூன்றாமாண்டு சிலப்பதிகார விழா புரட்டாசி 16, 2046 /அக். 03, 2015 மாலை 4.00   அழைக்குநர்  : ம.பொ.சி.மாதவி பாசுகரன்

களம்நின்று போராடும் காலம்வரை கண்ணுறங்கு ! – பாவலர் வையவன்

  தகப்பன் தாலாட்டு கண்ணுறங்கு கண்ணுறங்கு காவியமே கண்ணுறங்கு! களம்நின்று போராடும் காலம்வரை கண்ணுறங்கு ! முன்னிருந்த தமிழர்நலம் மூத்தகுடி மொழியின்வளம் மண்ணுரிமை யாகஇங்கு மாறும்வரை கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) முப்பாட்டன் கடல்தாண்டி ஒர்குடையில் உலகாண்டான் இப்போது நமக்கென்று ஒர்நாடு இல்லையடி திக்கெட்டும் ஆண்டமொழி திக்கற்றுப் போனதடி இக்கட்டைப் போக்கணும்நீ இப்போது கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) தன்னலத்தில் தனையிழந்து தாய்மொழியின் புகழ்மறந்து பொன்னான தாய்நாட்டைப் போற்றிடவும் மறந்துவிட்டு இங்கிருக்கும் தமிழரெல்லாம் மையிருட்டில் வாழுகின்றார் ஈழமண்ணின் புதுவெளிச்சம் இங்குவரும் கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) ஆண்பிள்ளை வேண்டுமென்று…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 056. கொடுங்கோன்மை

(அதிகாரம் 055. செங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 056. கொடுங்கோன்மை   மக்களை அலைக்கழிக்கும், தீமையான, முறைஇல்லாக் கொடுமையான வல்ஆட்சி.   கொலைமேற்கொண் டாரின் கொடிதே, அலைமேற்கொண்(டு),      அல்லவை செய்(து)ஒழுகும், வேந்து.   மக்களை வருத்தி, அலைக்கழிக்கும், ஆட்சி, கொலையினும் கொடிது.   வேலொடு நின்றான்,”இடு”என்றது போலும்,       கோலொடு நின்றான் இரவு.   வன்முறையால் வரிகேட்டல், வேல்காட்டிக் கொள்ளை அடித்தலுக்குச், சமம்.   நாடொறும் நாடி, முறைசெய்யா மன்னவன்,       நாடொறும் நாடு கெடும்.   நாள்தோறும்…