துலுக்கப்பயலே! 4 -வைகை அனிசு

(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015 தொடர்ச்சி) 4 தமிழகத்தில் முசுலிம்களும் பிரிவுகளும்   கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தென்னகத்திற்கு வந்த இசுலாமிய மார்க்க ஞானி நத்தகர் காலத்தில் இருந்த கல்வெட்டுகள், நூல்கள் போன்றவற்றில் அஞ்சுவண்ணத்தார், சோனகன், முகமதியர் எனப் பலபெயர்களில் இசுலாமியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.   தமிழக அரசு ஆணையின்படி (இ)லெப்பை, தக்கினி, மரைக்காயர், இராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, காக்கா, சேட்டு, சையது, சேக்கு, பீர், தாவூது, அன்சார், நவாபபு என முசுலிம்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் ஏற்கெனவே உள்னர்.(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்…

கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு   எத்துறையாயினும் அத்துறையறிவு தாய்மொழியில் வெளிப்படுத்தப் பட்டால்தான் அம்மொழியினருக்கு முழுப் பயன்பாடு கிட்டும்; அத்துறையும் சிறப்பான வளர்ச்சியை எட்டும். அந்த வகையில் கணிணியியலில் முழுமையும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டால்தான் கணிணியியல் முழு வளர்ச்சியடைந்ததாகும்.. இப்பொழுது அந்நிலை இன்மையால், அதனை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். கட்டுரையாளர்களும் நூலாளர்களும் இதழாளர்களும் தமிழில் கணிணியியலை விளக்குவதில் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால், அவ்வாறு விளக்குவதில் உள்ள ஆர்வம் தமிழைப் பயன்படுத்துவதில் இல்லை. கணிணிக் கலைச்சொற்களாக நல்ல தமிழ்ச் சொற்கள் இருப்பினும் அதைப் பயன்படுத்தாதவர்களும் உளர்; தமிழ்க்…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 10 இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 9 தொடர்ச்சி)   10 புறநானூறு: முகப்பு அட்டவணையிலோ பாடல் பக்கங்களிலோ தேடுதல் பகுதி இல்லை(பட உரு 59)   உ.வே.சா. உரைப்பக்க முகப்பு மேற்புறத் தேடுதலைச் சொடுக்கினால், ‘பக்கம் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன (பட உரு 60). உ.வே.சா. உரைப்பகுதியில் உரைப் பக்கங்களில் ‘பக்க எண் தேடல்’ உள்ளது (பட உரு 61). உரைவேந்தர் ஔவை உரைப்பக்க முகப்புத் தேடலைச் சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’, ‘பாடல் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன(படவுருக்கள் 62 & 63)…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 9 இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 8 தொடர்ச்சி)   9 கலித்தொகை: முகப்பிலும் பாடல் பகுதியிலும் தேடுதல் இல்லை. பாடலுடன் கூடிய உரைப்பக்கங்க ளிலும் தேடுதல் பொறியும் இல்லை (பட உரு 51). ஆனால், நேரடியாக உரைக்குச் சென்றால், உரைப்பக்கங்களில் ‘பக்க எண்’ தேடல் வருகிறது (பட உரு 52). உரைப்பக்க அட்டவணை மேற்புறத்தில் உள்ள தேடுதலைச் சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன(படவுருக்கள் 53 & 54) இவ்வாறு, உரைப்பக்கத்தை அணுகும் முறைக்கேற்ப, தேடலின்மை, பக்க எண் தேடல், பக்கமும் சொல்லும்…

குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல்   நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்ற(மாபியா)க் கும்பலைக் கைது செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.   நாகப்பட்டினம் மாவட்டம் தற்பொழுது ஆள்கடத்தல், சிறார் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், மணல் கடத்தல் போன்றவற்றையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவிற்குப் புகழ்பெற்று விளங்குகிறது இணையத்தளத்தைப்பயன்படுத்தி, மிரட்டுவதன் மூலம் மூலம் குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்து வருகிறது குற்றக்கும்பல். 4 அல்லது 5 பேர் இணைந்து இந்தத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதலீடு கணிணியும் அதில்…

வாழ்கின்றவரை வாழ்த்திடுவோம்! மடிந்தவரை மறந்திடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்கின்றவரை வாழ்த்திடுவோம்! மடிந்தவரை மறந்திடுவோம்!   “அதிகாரியின் நாய் இறந்தால் ஊரே திரண்டு உடன் வரும். அதிகாரி இறந்தாலோ அந்த நாய் மட்டும்தான் உடன் வரும்” என்பார்கள். இவ்வாறு ஆதாயத்திற்காக இருப்பவரைப் போற்றுவதும் ஆதாயம் இல்லை என்பதற்காக இறந்தவரைப் புறக்கணிப்பதும் இழிவான செயலாயிற்றே! ஆனால், தலைப்பு வேறுவகையாக உள்ளதே என எண்ணுகின்றீர்களா? அதற்கு விளக்கம் காணும் முன்பு ஆன்றோர்கள் சொன்ன செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.   உலகில் மனித இனம்தோன்றிய பகுதி தமிழ்நாடு. அவ்வாறு தோன்றிய பொழுது தமிழ்நாட்டின் நிலப்பரப்பு மிக அகன்று இருந்தது….

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 6 தொடர்ச்சி)   7 ஙி.) மொழிக்கொலைக்குத் துணை நிற்கக்கூடாது :   தமிழ் இணையக்கல்விக்கழகம் அரசு சார் நிறுவனம். எனவே, அரசின் கொள்கைக்குமாறான செயல்களில் ஈடுபடவோ அரசின் கொள்கைக்கு மாறான கருத்துகளைப் பரப்பவோ இடம் தரக்கூடாது. தமிழக அரசு, சீர்திருத்தம் என்ற பெயரிலான எழுத்துச்சிதைவிற்கு எதிரானது. ஆனால், இதன் தளத்தில் முந்தைய தலைவர் வரிவடிவச்சிதைவில் ஈடுபாடுள்ளவர் என்பதால் அதற்குரிய விளக்கத்தைக் காணொளி வாயிலாகப் பரப்பிவந்தனர்.   அதனை அகற்றுமாறு வேண்டியும் அகற்றவில்லை. அதற்கு மாறான உண்மைக் கருத்தை…

காவிரி உரிமை மீட்புப் போராட்டம் – பனங்குடி

புரட்டாசி 11, 2046 – செப்டம்பர் 28, 2015 அன்பான தோழர்களுக்கு வணக்கம்!   தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் பயன்பட்டுத், தமிழர்களின் தேசிய ஆறாக விளங்குவது காவிரி ஆறாகும்.   அதன் உரிமையை மீட்பதற்கான போராட்டத்தில், சென்னை முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். ஏனெனில், வீராணம் ஏரியில் நிரப்பப்படும் காவிரி நீரே, சென்னைக்கு மிகப்பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது என்பதை நாம் மறந்துவிடலாகாது! காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் புரட்டாசி 11, 2046…

திலீபனைப் படம் பிடித்த கவி கத்தூரி

நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை ! அழகென்றால் என்ன ?  உடல் அழகு, கல்வியழகு, கவிதையழகு என்று எத்தனையோ விதமாக அழகுகள் பேசப்படுகின்றன. எல்லா அழகுகளுக்கும் மனிதன் தன் வசதிக்கேற்ப வரைவிலக்கணம் வகுத்திருக்கிறான். அழியும் அழகை நம்பி ஆகா இதுவல்லவோ அழகென்று ஓடி ஏமாறுவோர் உலகில் பலர் உண்டு.   ஆனால் அழியா அழகென்று ஒன்றிருக்கிறது. அதுதான் மனிதனை என்றும் உற்சாகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அழகை அடையாளம் காணும் உணர்வை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறான். மற்றவரின் கருத்துப் பாதிப்பிற்கு…

“களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்

புரட்டாசி 10, 2046/ செப்.27, 2015  மாலை 5.30 மேற்குத் தாம்பரம் “களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்   இன்று தொடர்ச்சியாகச் சுரண்டப்பட்டு வரும் இயற்கை வளங்கள் குறித்து நாம் அறிந்தும் கவனம் செலுத்தாமலே இருக்கின்றோம். நாம், நமது அருகில் அன்றாடம் மணல் கொள்ளையால் சுரண்டப்பட்டும், வன்கவர்வுகளால்,   கொட்டப்படும் கழிவுகளால் மாசுபட்டும் வருகின்ற நீர் நிலைகளைப்பற்றிக் கவனத்தில் கொள்ள மறுக்கின்றோம். பணம் இருந்தால்தான் தண்ணீர்!, அதுவும் தூய்மையான நீரைப் பெற இயலாத நிலை! தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டு வரும்…