தமிழ்நாடு ஒருமையுடன் உழைத்தால் பெருமையடையும்! – இரா.பி.சேதுப்பிள்ளை

விழுமிய வீரம் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்றார் திருவள்ளுவர். அவ்வுரையின் வழிநின்று வீரப்புகழ் பெற்றது பழந் தமிழ்நாடு. பாரில் உயர்ந்த பனிவரை மேல் நின்றது பழந்தமிழர் வீரம். கங்கை நாட்டில் கதித்தெழுந்த பகைவரை அறுத்தது தமிழர் வீரம். கடல் கடந்து மாற்றாரைக் கலக்கியது தமிழர் வீரம். இது சென்ற காலத்தின் சிறப்பு. மறவர் நிலை அன்று நாற்றிசையும் போற்ற ஏற்றமுற்று வாழ்ந்த தமிழ்நாடு இன்று ஊக்கம் இழந்து உறங்குகின்றது. மன்னரும் மதிக்க வாழ்ந்த மறக்குலம் இடைக்காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டது. அக்குல வீரரது முறுக்கு மீசை…

அல்லல் அறுப்பானை வாழ்த்துக! – மாணிக்கவாசகர்

அல்லல் அறுப்பானை வாழ்த்துக! சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறர் உருவம் யான்எனதென் உரைமாய்த்துக் கோதில்அமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே!  – மாணிக்கவாசகர்

இசை நாட்டியத்துடன் திருக்குறள் கற்பிப்பு

பள்ளி மாணவர்களுக்கு நடனமாடி இசையோடு திருக்குறளைக் கற்றுக் கொடுப்போம்!  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உறுதி   சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர்(சேர்மன்) மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லிக் கொடுக்கும் செயல் வழி கற்பித்தல் பயிற்சி முத்தமிழ் குறள் நிகழ்வாக நடைபெற்றது.   பயிற்சிக்கு வந்திருந்தோரை மாணவி பரமேசுவரி வரவேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் இலெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை   கலை-அறிவியல்   கல்லுரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கிப் பேசுகையில், என் அன்னை தொடக்கப்பள்ளி…

எண்ணியதை முடிக்க அருள்க! – நாலடியார்

வான் இடு வில்லின் வரவு அறியா, வன்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை, யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும் “எம் உள்ளத்து முன்னியலை முடிக!” என்று – நாலடியார், கடவுள் வாழ்த்து

ஐம்பெரும் விழாக்கள், உடுமலைப்பேட்டை

தமிழமுது பருக…. தவறாது வருக….! அனைவருக்கும் வணக்கம் ! வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு 2047, சுறவம் ( தை ) : 2 அன்று திருவள்ளுவர் நாள் விழா முதலான ஐம்பெரும் விழாக்கள் உடுமலைப்பேட்டை, திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன. உணர்வாளர்கள் – நண்பர்கள் – தோழர்கள் – மாணாக்கர்கள் – குழந்தைகள் – தாய்மார்கள் – பொதுமக்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டு, விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்! அன்புடன் உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம், உடுமலைப்பேட்டை – 642 126….

மே பதினேழு இயக்கம் : பேரழிவை உருவாக்கியது யார்? – கருத்தரங்கம்

  சென்னை – கடலூர் பேரழிவை உருவாக்கியது யார்? இனிவரக்கூடிய பேரழிவினைத் தடுப்பது எப்படி? – கருத்தரங்கம்    மார்கழி 24, 2046 / 09.01. 2016, சனிக்கிழமை மாலை 4 மணி, செ.தெ.நாயகம் பள்ளி, தியாகராயநகர், சென்னை. மே பதினேழு இயக்கம்

சிராங்கூன் : பொங்கல் கொண்டாட்டங்கள்

ஒளியூட்டு விழா : மார்கழி 23, 2046 / சனவரி 08, 2016 பொங்கல் கொண்டாட்டங்கள்: மார்கழி 24, 2046 / சனவரி 09, 2016  முதல் தை 03, 2047 / சனவரி 17, 2016 முடிய