ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) –  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) 3.ஒருமைப்பாட்டு உணர்வு – தொடர்ச்சி   அடிமையில் மோகமும், அடிமைத்தனமும் ஒழிக்கப் படவேண்டும். அதற்கு மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றாக வேண்டும். கொடுமைகள் நீக்கிக் கொள்கைகள் காத்து பெரிய முன்னேற்றம் ஆக்கி, விந்தைகள் நிலைக்கச் செய்து, வெற்றி மேல் வெற்றி சேர்த்து, தந்தையர் நாட்டை ஏற்றம்தனில் நிலை நாட்டி வைப்போம் என்று முழக்கமிடுகிறார் பெருங்கவிக்கோ. பாரினில் பாரதம் மேன்மை பெற்று விளங்க நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும்;…

தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம், மதுரை

  ஐப்பசி 17, 2048 /வெள்ளி/ நவம்பர் 03, 2017 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியற்புலம் தமிழ் ஆய்வாளர் மன்றம் தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம்   கட்டுரைகள் அனுப்புதற்குரிய கடைசி நாள் : புரட்டாசி 13, 2048 வெள்ளி செட்டம்பர் 29,2017 அனுப்பவேண்டிய மின்வரி : tamilrsamku@gmail.com      செ.மனோகரம்மாள், செயலர் பேசி 9600733053, 9626832556  

உயர்நீதிமன்றத்தில் தமிழ் – காலவரையற்ற பட்டினிப் போராட்டம்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் – காலவரையற்ற பட்டினிப் போராட்டம்   வணக்கம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.    இந்தியா விடுதலையடைந்து ஒன்றரை ஆண்டுகளில் இராசசுதான் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது. தொடர்ந்து உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது.    2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு 2015இல் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு…

பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி நீக்கம் – குலக்கல்விக்கே வழி வகுக்கும்! – இராமதாசு கண்டனம்

பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி  நீக்கம் – குலக்கல்விக்கே வழி வகுக்கும்! இராமதாசு கண்டனம்   சென்னை: பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை  நீக்குவதால் அது குலக்கல்வி முறைக்கே வழிவகுக்கும் என்று பாமக நிறுவனர்  மரு.இராமதாசு கண்டனம் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதிலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன்  நீக்கப் போவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாசு சவடேகர்…

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு   ஆடி 13, 2048    சனிக்கிழமை     29-07-2017     மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) , அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை சென்னை 600018        ‘கவிக்கோ அப்துல் இரகுமான்‘ உரையாற்றுபவர்:  நேசமணி திரு. புதுவை இராமசாமி                  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு   ‘தமிழில் விஞ்ஞான எழுத்துகள்‘ – உரையாற்றுபவர் :        திரு ச கண்ணன்      நிறைவாக   குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 – கருமலைத்தமிழாழன்

யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 தலைவர் வணக்கம் நூலகராய்த்   தம்வாழ்வைத்   துவக்கி   நல்ல நூலாக   வாழ்பவர்தாம்   மோகன   ரங்கம் காலத்தை    வெல்கின்ற   கவிதை  நெய்து கவின்வனப்பைத்   தமிழுக்குச்   சேர்க்கும்   பாவோன் கோலத்தில்   எளிமையொடு   அரவ   ணைப்பில் கோப்பெருமான்   பிசிராந்தை   நட்பின்   பண்போன் மூலத்தொல்   காப்பியத்து   நூற்பா   போன்று முத்தமிழைக்   காப்பவர்தாம்   ஆலந்   தூரார் !   கவிதையொடு   நாடகங்கள்   புதினம்   என்று கருத்தான   படைப்புகளை   நாளும்   படைப்போன் நவிலுமாறு   சிறுகதைகள்   குறும்பா   என்று நாட்டோர்கள்   புகழுமாறு   படைத்த  ளிபோன் கவிதையிலே   நாடகத்தைச்   சிறுவர்க்  …

மறக்க முடியுமா? – ஔவை துரைசாமி – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி   கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை சு.துரைசாமி(பிள்ளை) அவர்கள். கவிஞர் சுந்தரம்(பிள்ளை), சந்திரமதி அம்மையாரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் இவர். பிறந்த ஆண்டு  : ஆவணி 21, 1933 / 1902 செட்டம்பர் 5. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் ஔவையார் குப்பம்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) பேராசிரியர் இலக்குவனாரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும், தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும்  இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர் எம்போன்றோரை எள்ளியே தள்ளினர் எனப் பேராசிரியர் இலக்குவனார் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப்…

பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு!     ஆடி 01, 2048 /சூலை 17, 2017  அன்று இந்தியாவின் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின்போக்கை மாற்றச் செய்வதற்குத் தன்மான உணர்வு உள்ள அதிமுக மக்கள்சார்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!  இந்தியாவின் 14 ஆவது குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாகக் களத்தில் இரு்பபவர்கள், பா.ச.க. அணியின், இராம்நாத்து கோவிந்து(Ramnath Kovind) எதிர்க்கட்சிகள் அணியின்  மீரா குமார்(Meira Kumar) ஆகிய இருவர் மட்டுமே! கட்சி வாக்குகள் அடிப்படையில் பா.ச.க.வின் வெற்றி வாய்ப்பு என்பது எழுதப்பட்டதாகத் தெரிகிறது….