நீலத்திமிங்கிலம் என்னும் இணையக் கொலைக்களம் – தெ.சு.கவுதமன்

  நீலத்திமிங்கிலம் என்னும்  இணையக்  கொலைக்களம் கூகுள் தேடுபொறியில் நீலத்திமிங்கிலம் (Blue Whale) என்று போட்டாலே நீலத்திமிங்கிலம் என்னும்  இணைநிலை விளையாட்டு குறித்த விக்கிபீடியா தளத்தைத் தான் காட்டுகிறது. அந்த அளவிற்கு, தற்போது ஒட்டுமொத்த உலகையும் அச்சத்திற்கு உள்ளாக்கி வருகிறது.  இரசியாவில் உருவாக்கப்பட்ட இந்த நீலத்திமிங்கில விளையாட்டு, கிலியூட்ட வேண்டும் என்பதற்காக மிகவும் கொடூரமான முறையில் வடிவமைத்து உள்ளார்கள். இந்த விளையாட்டு இணையவழி மட்டுமே விளையாடக்கூடியது. பெருந்தலை போல இதிலும் ஒரு செயலாண்மையர்(நிருவாகி) இருப்பார். இந்த விளையாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அவர் அன்றாடம் ஒரு…

ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி)   3/3   இங்கு நாம் குறித்துள்ள நோக்கு முதலானசொற்கள் வேறு என்னென்ன பொருட்களை உணர்த்தப் பயன்படுகின்றன என்று காணுதல் வேண்டும். இவ்வாறு காணும்பொழுது நாம் காணும் சொற்கள் தொடர்பாக வேறு சொல்லாக்கம் இருப்பின் அவற்றையும் கண்டறிய வேண்டும். இஃது ஒரு சங்கிலித்தொடர்போல் அமைய  வேண்டும். எடுத்துக்காட்டாக 90 ஆவது பக்கத்தில்  ஆய்வு என்ற  பொருளை, aspect, attention, inspection, reference, vision, sight முதலான சொற்கள் குறிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்….

இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 3/3 . இலக்குவனார் திருவள்ளுவன்

(இன்றைய தேவை குறுஞ்சொற்களே! – 2/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 3/3   நெடுமையும் குறுமையும் துறைதோறும் கலைச்சொல், சொல்லாக அமையாமல், பொருள்விளக்கத் தொடராக இருப்பதற்குச் சில எடுத்துக்காட்டு காண்போம். ? centrifuge வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருட்களைச் சுழற்சியினால் பிரிக்கும்  இயந்திரம் இங்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பொருள்விளக்கத்தை அப்படியே தமிழில் தந்துள்ளார்களே தவிர, உரிய கலைச்சொல்லை உருவாக்கவில்லை. பொறியின் செயல்பாடு , தோற்ற அடிப்படையில் சுழற்சல்லறைப்பொறி எனலாம். எனினும் இன்னும் சுருக்கமாகப் பிரிவை எனலாம். அல்லது பிரிவை எனக் குறிப்பிட்டு, பிரிவை –…

தமிழகத்திற்காகப் பாடுபட்டவர்களை மறந்து விடக்கூடாது – கவிஞர் மு.முருகேசு

தமிழக வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்களை           மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது            வந்தவாசி. ஆக.26. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், சிரீகிருட்டிணா  பயிற்சி மையம் இணைந்து நடத்திய நூலகர் நாள் விழா, முன்னாள் தமிழக முதல்வர் எம்ஞ்சியாரின் நூற்றாண்டு விழா, போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முனேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது என்று நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் மு.முருகேசு  கூறினார்.          இவ்விழாவில்…

இதழாளர் மகாதேவா நினைவுச் சிறுகதைப்போட்டி – பரிசளிப்பு விழா

  ஆவணி 25, 2048 / ஞாயிறு / 10.09.2017 மாலை 5.30 இதழாளர் மகாதேவா ஐயா நினைவுப் பன்னாட்டுச் சிறுகதைப்போட்டி : பரிசளிப்பு விழா, திருச்சிராப்பள்ளி    

அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? – இலக்குவனார் திருவள்ளுவன்

அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது?  ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது! நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது! மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது! மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும்  உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர்.  அரியலூர் மாவட்டம் செந்துறை  அருகே  உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா? அதற்காகத் தளராமல்படித்தது தவறா? …

மூலிகை பேசுகிறது : செம்பருத்தி – ப.கண்ணன்சேகர்

மூலிகை பேசுகிறது : செம்பருத்தி   கிழக்காசிய நாடுகளில் தழைத்திடும் தாவரம் கிடைத்தோர்க்கு நலமெனக் கொடுத்திடும் ஓர்வரம் அழகெனப் பூத்திடும் அருமருந்து செம்பருத்தி ஆரோக்கியம் தந்திடும் அன்றாடம் நிலைநிறுத்தி அழகான கூந்தலுக்கு அற்புத மருந்தாகும் அன்புடன் உபசரிக்கும் ஆதிவாசி விருந்தாகும் விழாக்கால வேள்வியிலும் வைத்திடும் பூவாகும் விடியாத நோய்களுக்கும் வெளிச்சமென தீர்வாகும்   விதையில்லாப் பதியத்தால் விளைந்திடும் செடியாகும் வேர்இலை பூக்களால் வரும்நோயும் பொடியாகும் சிதையாமல் பூவிதழை சுடும்பாலில் நனைத்திடு சிவந்திடும் பாலினை  அன்றாடம் அருந்திடு பதைத்திடும் பதற்றத்தைப் பக்குவமாய்க் குறைத்திடும் பலமூட்டி  இரத்தத்தை  …

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17)  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18) 5.குருபக்தியும் ஐயப்பன் அருளும்   “பெருங்கவிக்கோவின் உள்ளம் எதிர் மறைகட்கும் இடமளிப்பது. பக்தியில் பதியும்; பகுத்தறிவை வரவேற்கும்; பழமையின் சீர்மை போற்றும்; புதுமையின் பயனை வாழ்த்தும்;தேசியம் பரவும்; செந்தமிழர் தனி உரிமையும் செப்பும்; உத்தமர் காந்தியையும் போற்றும்; சமதர்ம மாவீரன் இலெனினையும் பாராட்டும்.  ஒரு வகை யில் அது ஒரு தமிழ்க்கடல் எனலாம்.”  இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் பேராசிரியர் க. அன்பழகனார். இக்கூற்றின் உண்மையைப் பெருங் கவிக்கோவின் கவிதைப் படையல்கள்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌ை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ)  தெ.பொ.மீ. மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானதும் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்னும் பாடத்தை நீக்கி விட்டு ‘இக்கால இலக்கியம்’ என்பதைக் கொணர்ந்தார். இக்கால இலக்கியம் என்னும் போர்வையில் கொச்சைத் தமிழ்நடைகள் உடைய படைப்புகள் கோலோச்சுகின்றன. இதனால் தமிழுக்கு மேலும் கேடுகள்தாம் விளைகின்றன. எழுத்து மொழியை வலியுறுத்திய பேராசிரியர் இலக்குவனாரின் கருத்துகளில் ஒன்றைக் காண்போம். “இன்று நம்மில் சிலர், ‘ மொழியின் உயிர் வழக்கு மொழியில்தான் உள்ளது. வழக்கு மொழியேதான் எழுத்து மொழியாகவும் கொள்ளப்படல் வேண்டும்…

கி.இரா.வின் 95-ஆவது பிறந்த நாள் விழா, புதுச்சேரி

அன்புடையீர், வணக்கம் எழுத்தாளர் கி.இரா.வின் 95-ஆவது பிறந்த நாள் விழா ஆவணி 31, 2048 / 16 செட்டம்பர் 2017, சனிக்கிழமை அன்று காலை 9 முதல் இரவு 9 வரை புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவுள்ளது.   அனைவரும் வருகை  தருமாறு கேட்டுகொள்கிறோம். அன்புடன் பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், சு.ஆ.வெங்கட சுப்புராய(நாயக)ர்.