ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (19) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18)  தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (19) 5. குருபக்தியும் ஐயப்பன் அருளும் காலம் கடந்த கனி அருள் நிலமே ஞாலம் கடந்த நடைதரும் அறமே நீல விண்ணின் நிலைகளின் திறமே சாலப் பண்பார் தவமே குருவே இப்படிப் பாடல்கள் தமிழ் இனிமையை உணர்த்துவதாகவும் ஒலிக்கின்றன. மணியின் ஒசை வாழ்த்தும் ஒளியே அணியின் எழிலே ஆர்வ மொழியே பணியின் செயலே பார்வை வழியே வணங்கும் நுதலே வாழிய குருவே! என்று போற்றிப்பரவும் பாடல்களைக் கவிதை ஒட்டத்துக்காகவும் செஞ்சொல்…

காவேரி இலக்கியக் கூடல், திருச்சிராப்பள்ளி

  புரட்டாசி 01, 2048 ஞாயிறு 17.09.2017 காவேரி இலக்கியக் கூடல், திருச்சிராப்பள்ளி முந்நூலாய்வு இனிய நந்தவனம் பதிப்பகம்  பேசி 94432 84823

திருலோகம் என்றொரு கவி ஆளுமை – ஆவணப்படம் வெளியிடல், சென்னை

  ஆவணி 30, 2047 / வெள்ளி / 15.09.2017 / பிற்பகல் 2.00 சென்னைப் பல்கலைக்கழகம் திருலோகம் என்றொரு கவி ஆளுமை – ஆவணப்படம் வெளியிடல்,  சென்னை அறிமுக உரை இயக்குநர் : இரவி சுப்பிரமணியன்

அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இலலிதா குமாரமங்கலத்திற்குக் கடுங்கண்டனம்!

  மாணவி அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இந்திய மகளிர் ஆணையத் தலைவர் இலலிதா குமாரமங்கலத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!   மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் அருணா கண்டன அறிக்கை!     மாணவி அனிதா மரணம் என்பது அவரது தலையெழுத்து என்றும், ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவர் மொழிகளை வலியுறுத்தினால் ‘தேசம்’ என்னாவது என்றும் கூறி அனிதாவின் மரணத்தைச் சிறுமைப்படுத்திய தேசிய மகளிர் உரிமை ஆணையத் தலைவர் இலலிதா குமாரமங்கலம் கூற்றை மகளிர் ஆயம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.    பத்திரிக்கையாளரும் சமூக செயல்பாட்டாளருமான…

கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்!

  கவிஞர் அ.வெண்ணிலா  தமிழக அரசின் நல்லாசிரியர் விருது  பெற்றார்!     வந்தவாசி. செப்.05. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலாவுக்கு, தமிழக அரசின்  நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.         தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பாகக் கல்விப்பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு  அறிஞர்  இராதாகிருட்டிணன் விருதினை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்தாண்டு செய்யாறு கல்வி மாவட்டத்தில் சிறப்பாகக் கல்விப்பணி ஆற்றிய ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருது, வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவரும் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.     …

குறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன – கவி மு.முருகேசு

குறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன   – கவி மு.முருகேசு நூற்றாண்டு கண்ட குறும்பாக்கள்(ஐ.கூ கவிதைகள்) புதிய பார்வையைத் தமிழிலக்கியத்திற்குத் தந்துள்ளன                    – நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேசு           வாலாசாபேட்டை.செப்.10. வாலாசாபேட்டை  அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற  குறும்பாக்கள் நூல் வெளியீட்டு விழாவில், தமிழில் அறிமுகமாகி  நூற்றாண்டைத் தொட்டிருக்கும் சப்பானிய  ஐக்கூ கவிதைகள், இன்றைக்குத் தமிழிலக்கியத்திற்குப் புதிய பார்வையையும் செறிவையும் தந்துள்ளன என்று வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர்…

சிந்துவெளி எழுத்து வாசிப்பு : பயிற்சி வகுப்புகள்

ஆவணி 31, 2048  / 16.09.2017  முதல் ஐப்பசி 11, 2048 / 28.10.2017 வரை சனிக்கிழமைதோறும்  ஏழு வாரங்களுக்கு காலை 10 முதல் பகல் 1 மணி வரை பேராசிரியர் இரா மதிவாணனால் சிந்துவெளி எழுத்து வாசிப்பு : பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. ஆர்வம் உள்ள தமிழறிந்த அன்பர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு எழுத்தறிவு பெறலாம்.   இடம்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, (சென்னைக் கடற்கரை வள்ளுவர் சிலை எதிர்ப் புறம்) திருவல்லிக்கேணி.   தொடர்பு: பேரா. இரா.மதிவாணன் பேசி:…

பெரியார் விழா, சென்னைப் பல்கலைக்கழகம்

திருத்தி யனுப்பப்பட்ட அழைப்பிதழ் சென்னைப் பல்கலைக்கழகம்  தமிழ்மொழித் துறை  பெரியார் விழா புரட்டாசி 02, 2048 / 18-09-2017  பிற்பகல் 2.00 மணி சிறப்புரை – வழக்குரைஞர் அ. அருள்மொழி அனைவரையும் அழைக்கிறோம்! நன்றி.

பொது(நீட்)தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமை – இராமதாசு

பொது(நீட்)தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமை பணம் இருந்தால்தான் மருத்துவக்கல்வியா? – இராமதாசு கேள்வி பணம் இருந்தால் மட்டும்தான் மருத்துவக் கல்வியைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை உருவாகி வருவது மன்பதைக்கு நல்லதல்ல என்று பாமக நிறுவனர்  இராமதாசு தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு (நீட்) அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதல்ல. சிற்றூர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதுதான் என்பதை  மெய்ப்பிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகி வருகின்றன. பணம் இருந்தால் மட்டும்தான் மருத்துவக் கல்வியைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியும்…

கல்வி கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்) – பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் வகுப்பு)

கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்)   முன்னுரை      நம் நாடான மலேசியா, கல்வித்துறையில் அறைகூவல்களை எதிர்கொள்ள நாட்டின் கல்வித்துறையில்  புது உத்தி(வியூகங்)களை மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின்  உயிர்நாடி 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் அணுகுமுறையாகும். இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாணவனும் தொழில் நுட்பக் கற்றலில் பீடு நடை போடுவது இன்றியமையாததாகும்.. ஆகவே இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சிநிலையில் தமிழ்ப்பள்ளியும் அடங்கும் என்பது காலத்தின் விதியாகும். கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பக் கூறுகள்   பள்ளி ஒளிபரப்பு…

வெள்ளிசை(Karoeke) முறையில் தமிழ் இலக்கணம் கற்றல் கற்பித்தல் – புவனேசுவரி கணேசன்

வெள்ளிசை (Karoeke)  தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தித் தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தல் ஆய்வுச் சுருக்கம் இந்த ஆய்வானது, தொடக்கக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் தமிழ்மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலுக்கு உதவி புரியும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக மொழிப் பாடத்தில் இடம்பெறும் இலக்கணம் எனப்படுவது மனனம், புரிதல், எடுத்துக்காட்டு என்ற மூன்று கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைச் சென்றடைய வேண்டும். இக்கூறுகளை ஒருங்கிணைத்துக் கற்பிக்கப்படும் இலக்கண விதிகளே மாணவர்களின் சிந்தையில் பதியும் என்பதே என் கருத்து. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தல் முறையோடு இதனை…