தோழர் தியாகு எழுதுகிறார் 249 : தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி 

(தோழர் தியாகு எழுதுகிறார் 248 : உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தாழி (277) மடலில் வெளியிட்ட UPR IN TAMILNADU – THE REFUGEE CRISIS IN TAMILNADU அறிக்கையின் தமிழாக்கம் இதோ – தமிழ்நாட்டில் உலகளாவிய காலவட்ட மீளாய்வு – தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி  1.    தமிழ்நாடு ஓர் இந்திய மாநிலம். தமிழ்நாட்டின் ஏதிலியர் நெருக்கடி என்பது இந்தியாவின் எதிலியர் நெருக்கடியில் ஒரு பகுதியாகும். ஆனால் இந்தியாவின் ஏதிலி நிலவரையில் தமிழ்நாட்டுக்குரிய தனியிடத்தை மறுப்பதற்கில்லை. 2.    தமிழ்நாடு அரசு இலங்கைத் தமிழ் அகதிகள் பற்றி 01. 06. 2021இல் …

5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ, கட்டுரைத் தலைப்புகள்

சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்ஆசியவியல் நிறுவனம், சென்னைஉலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா இணைந்து நடத்தும்5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு ஏப்பிரல் 5-7, 2024 கட்டுரைச் சுருக்கம் வந்து சேர வேண்டிய இறுதி நாள் கார்த்திகை 14, 2054 / 30.11.2023 முழுக் கட்டுரை வந்து சேர வேண்டிய இறுதிநாள் தை 17, 2055 / 31.01.2024 மின்வரி, தளம், கட்டுரைத் தலைப்புகளை அறிக்கையிதழில் காண்க.

உ.வே.சா.வின் என் சரித்திரம் 58 : புலமையும் வறுமையும்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 57 : அன்பு மயம் – தொடர்ச்சி) என் சரித்திரம் சூரியமூலையிலிருந்து என் பெற்றோர்களிடமும் மாதாமகரிடமும் அம்மான் முதலியவர்களிடமும் விடைபெற்று நான் மாயூரம் வந்து சேர்ந்தேன். வந்தபோது நான் பிரிந்திருந்த பத்து நாட்களில் ஒரு பெரிய இலாபத்தை நான் இழந்துவிட்டதாக அறிந்தேன். நான் ஊருக்குப் போயிருந்த காலத்தில் பிள்ளையவர்கள் சிலருக்குப் பெரியபுராணத்தை ஆரம்பித்துப் பாடஞ் சொல்லி வந்தார். பெரிய புராணப்பாடம் தஞ்சை சில்லாவில் சில முக்கியமான தேவத்தானங்களின் விசாரணை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உண்டு. மாயூரத்தில் சிரீ மாயூரநாதர் கோயிலும் சிரீ…

தோழர் தியாகு எழுதுகிறார் 248 : உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 247 : குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்! 2023 ஆகத்து 5 காரிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் உயிரற்ற உடல்களாகத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிமீறிய காதலர்கள் மகாலட்சுமி – மாரிமுத்து… இருவரில் ஒருவரின் உடல் சடலக் கூறாய்வு முடித்து அவசரமாக எரியூட்டப்பட்டு விட்டது. அந்த எரிமேடையில் மகாலட்சிமியின் காதலோடும் உடலோடும் சேர்ந்து எத்தனை…

ஊரும் பேரும் 53 : இரா.பி.சேது(ப்பிள்ளை): திருமேனியும் தலமும்

(ஊரும் பேரும் 52 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அரசரும் ஈச்சுரமும் – தொடர்ச்சி) திருமேனியும் தலமும் திருவிற்கோலம் ஈசன் கோயில் திரிபுராந்தகம் எனப்படும். திரிபுரங்களில் இருந்துதீங்கிழைத்த அவுணரை அழிக்கத் திருவுளங் கொண்ட இறைவன்வில்லெடுத்த கோலம் அங்கு விளங்குதலால் விற்கோலம் என்ற பெயர்அதற்கு அமைந்ததென்பர். “திரிதருபுரம் எரிசெய்த சேவகன் உறைவிடம்திருவிற்கோலமே” என்று தேவாரமும் இச்செய்தியைத் தெரிவிக்கின்றது.எனவே, ஈசனது திருமேனியின் கோலத்தைக் குறித்த சொல், நாளடைவில்அவர் உறையும் கோயிலுக்கும் பெயராயிற் றென்பது விளங்கும். இத் தகையவிற்கோலம் கூகம் என்ற ஊரிலே காட்சியளித்தது. என்று திருஞான சம்பந்தர் பாடுதலால், கூகம்…

தோழர் தியாகு எழுதுகிறார் 247 : குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 246 : கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, ஒரு கேள்விக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது: குடியுரிமைச் சட்டத்தில் குறையில்லை, திருத்தம்தான் மோசமா? மோதியரசு கொண்டுவந்த திருத்தம் மட்டுமல்ல, அதன் நோக்கமும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளும் மோசமானவை எனபதில் ஐயமில்லை. எனவே நாமும் அந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டோம். அதே போது இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உட்பட…

தமிழ் வளர்த்த நகரங்கள் 11. – அ. க. நவநீத கிருட்டிணன்:குமரகுருபரர், பரஞ்சோதியார் வளர்த்த தமிழ்

(தமிழ் வளர்த்த நகரங்கள் 10. – அ. க. நவநீத கிருட்டிணன்: மதுரை கடைச்சங்கம்- தொடர்ச்சி) குமரகுருபரர், பரஞ்சோதியார் வளர்த்த தமிழ், நான்காம் தமிழ்ச்சங்கம் திருமலை நாயக்கர் குமரகுருபரரைத் தமது மாளிகையில் சிலநாட்கள் தங்கியருளுமாறு அன்புடன் வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கிய முனிவர் சின்னாள் மதுரையில் தங்கினார். அரசியல் அலுவல்களில் ஈடுபட்ட நாயக்க மன்னர் நாள் தோறும் காலந்தாழ்த்து உணவு கொள்வதைக் கண்ட குமரகுருபரர், ஒருநாள் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது,“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது”என்ற திருக்குறளை நினைவூட்டினர். ‘அரசே! நீவிர் எத்துணைச்…

தோழர் தியாகு எழுதுகிறார் 246 : கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி

(தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா? – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி >>> சென்ற சூலை 26ஆம் நாள் இளைஞர் அரண் சார்பில் குடந்தையில் நடைபெற்ற கல்வியுரிமைப் பேரணி கல்வியுரிமை மாநாட்டில் நாம் எழுப்பிய முழக்கங்களையும் இயற்றிய தீர்மானங்களையும் நினைவிற்கொள்ளுங்கள். நம் கோரிக்கைகள் தெளிவானவை:1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன கொடுமைக்கு முழுமையாக…

ஆளுமையர் உரை 70,71 & 72  : இணைய அரங்கம்: 22.10.2023

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை (திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழே விழி!                                                      தமிழா விழி!                                            தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 70,71 & 72  : இணைய அரங்கம்: 22.10.2023 ஐப்பசி 05, 2054 ஞாயிறு 22.10.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும் நானும்”…

தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா? பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திடுக! 2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள். அந்த இளைஞர் மாரிமுத்து, இளம்பெண்…

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 4. வள்ளலார் திருவுள்ளம்

(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. ஆ. இராமலிங்கர் ஒரு பெரும் புரட்சிக்காரர். – தொடர்ச்சி) (சென்னை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் 125-ஆவது பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரை) சகோதரிகளே! சகோதரர்களே!! யான் “வள்ளலார் திருவுள்ளம்” என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. மேலுலக இன்பத்திற்குப் பயன்படுவதா வாழ்க்கை? தற்கால உலகவாழ்க்கைக்குப் பயன்படுவதுதான் உண்மையான வாழ்க்கையாகும். அரிசிப் பஞ்சம் தற்சமயம் தாண்டவமாடுகிறது. ஒரு பணக்காரர் தன் வீட்டில் ஆயிரம் அரிசி மூட்டைகளைப் பதுக்கி…

பூங்கொடி 19 – கவிஞர் முடியரசன்: படிப்பகம் புக்க காதை

(பூங்கொடி 18 – கவிஞர் முடியரசன்: இருவகைப் பூங்கா – தொடர்ச்சி) பூங்கொடி 4. படிப்பகம் புக்க காதை இயற்கைக் காட்சிகள் நங்கையும் தோழியும் களிமலர்ச் சோலையுள் தங்கிய எழில்எலாம் தனித்தனி கண்டனர்; தாமரைக் காட்சி செங்கதிர்ச் செல்வன் வெங்கதிர் புகுதாப் பொங்கிய நிழல்செறி பூம்பொழிற் கயத்துள் அடுத்தஓர் இரவலன் அகக்குறிப் புணர்ந்து    5 கொடுத்தலால் மகிழ்ச்சி கூர்முகம் நோக்கி மகிழ்வால் விரியும் வள்ளல் மனம்போல் அகவிதழ் முறுக்கவிழ்ந் தலர்ந்த தாமரை இலைசூழ் மலர்கள் எழிலினைப் பாராய்! ஊடல் கொண்ட ஒண்டொடி முகம்போல்     10…