ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 18 : 11. தமிழ் நாடகத்திற்காகத் தான் உழைத்தது

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 17 : நான் எந்த கட்சியையும் சேராதது – தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ அத்தியாயம் 11. தமிழ் நாடகத்திற்காகத்தான் உழைத்தது 1891 முதல் 1936 வரையில் நான் தமிழ் நாடகங்களை எழுதி அவற்றில் நடித்து உழைத்து வந்த சரிதையை “நாடகமேடை நினைவுகள்” என்னும் புத்தகத்தில் மிகவும் விவரமாக எழுதி அச்சிட்டுள்ளேன். ஆகவே அவற்றைப் பற்றி மறுபடியும் இங்கு எழுதுவேனாயின் கூறியது கூறல் என்னும் குற்றத்திற்கு உள்ளாவேன் என்று அஞ்சி இங்கு எழுதாது விடுத்தேன். அவறறைப் பற்றி பல விசயங்களை…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 56 : என்ன புண்ணியம் செய்தேனோ!

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 55 : தளிரால் கிடைத்த தயை – தொடர்ச்சி) என் சரித்திரம் திருக்குடந்தைத்திரிபந்தாதியை இரண்டே தினங்களில் நான் பாடங்கேட்டு முடித்தேன். அப்போது என் ஆசிரியர் ஏடுவாரிச் சுவடி சேர்த்துக் கொடுத்தார்; ஒரு வாரெழுத்தாணியையும் அளித்து அந்நூலைப் பிரதி செய்துகொள்ளும்படி சொன்னார்; அச்சுப் புத்தகங்கள் மிக அருமையாக அகப்படும் அக்காலத்தில் நான் பாடங்கேட்ட புத்தகங்களிற் பெரும்பாலானவற்றை ஏட்டிலே எழுதிப் படித்தேன். இப்பழக்கத்தால் ஏட்டில் விரைவாகவும் தெளிவாகவும் எழுதும் வழக்கம் எனக்கு உண்டாயிற்று. நான் பாடங்கேட்டபோது சவேரிநாத பிள்ளையும், கனகசபை ஐயரென்னும் வீரசைவரும்,…

தோழர் தியாகு எழுதுகிறார் 234 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 10

(தோழர் தியாகு எழுதுகிறார் 233 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 8 & 9 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 10 என் பெயர் சிங்கனிமோய் சூ. குக்கி இனம், அகவை 25. என் கணவர் தங்கூலால் மணிப்பூரில் கடந்த இரு மாதக் காலமாக நடந்து வரும் வன்முறையில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கானோரில் ஒருவர். எனக்குத் தெரிந்தவரை நடந்ததைச் சொல்கிறேன். என் கணவர் பாசக சட்டமன்ற உறுப்பினர் உங்சாகின் வால்து என்பவரின் வண்டி ஓட்டுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்….

தோழர் தியாகு எழுதுகிறார் 233 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 8 & 9

(தோழர் தியாகு எழுதுகிறார் 232 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 7 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 8 என் பெயர் (உ)ரோசி கிப்புகென். குக்கி இனம். அகவை 70. என் மகள் மேரி மெய்த்தி இனத்தவரான சேக்கப்பு சிங்கு என்பவரை மணந்து கொண்டாள். மெய்த்திகளுக்கும் குக்கிகளுக்குமான இன மோதலின் மையப் புள்ளியாக விளங்கிய சூரசந்த்துபூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் குடிசை வீட்டில் தனியாக இருக்கிறேன். குடும்பத்தில் மற்றவர்கள் உயிருக்கஞ்சி வெளியேறிப் போய் முகாம்களில் இருக்கின்றனர். யார் எங்கே…

ஊரும் பேரும் 51 : இரா.பி.சேது(ப்பிள்ளை): தேவீச்சுரம்

(ஊரும் பேரும் 50 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அகத்தீச்சுரம் தொடர்ச்சி) ஊரும் பேரும் தேவீச்சுரம்      தேவீச்சுரம் என்னும் திருக்கோயில் தென்னாட்டில் உள்ளதென்பது “திரிபுராந்தகம் தென்னார் தேவீச்சுரம்” என்ற திரு வாக்கால் விளங்கும். தென்னாடாகிய நாஞ்சில் நாட்டில் கன்னியாகுமரிக்கு அணித்தாகத் தேவி ஈசனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம் ஒன்றுண்டு. தேவீஸ்வரர் என்பது அங்குள்ள ஈசன் திரு நாமமாக இன்றும் வழங்கி வருகின்றது. அழகிய நாயகி என்று பெயர் பெற்றுள்ள வடிவுடையம்மையின் பெருமையால் முன்னாளில் தேவீச்சுரம் என்று அழைக்கப்பெற்ற திருக்கோயில் இந்நாளில் வடிவீச்சுரம் என வழங்குகின்ற…

திருக்குறள் ஆய்வரங்கம் 1028 : சனாதன எதிர்ப்பு : கு. மோகனராசு

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1028 திருக்குறள் உலக நூல் அன்று அது சனாதன தரும நூல் என்னும் பரப்புரையை மறுத்து, திருக்குறள் உலக நூல்- சனாதன எதிர்ப்பு நூல் என்பதை நிலைநாட்டும் புள்ளிவிவர அடிப்படையிலான நுட்பமான தொடர் ஆய்வுப் பொழிவுகள் 🕢 காலம் : தி. ஆ. 2054, புரட்டாசி 20 07-10-2023  சனிக்கிழமை  காலை 10-00 மணி 🌲 இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்,…

தமிழ் வளர்த்த நகரங்கள் 9 – அ. க. நவநீத கிருட்டிணன்: நாயக்கர் அணிசெய்த மதுரை

(தமிழ் வளர்த்த நகரங்கள் 8 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கிய மதுரை 2/2-தொடர்ச்சி) தமிழ் வளர்த்த நகரங்கள் 9 கடைச்சங்கக் காலத்தில் பாண்டிய மன்னர்களால் கவின்பெற்று விளங்கிய மதுரைமாநகரம் பின்னைய நூற்றாண்டுகளில் அயல்மன்னர் பலருடைய படை யெடுப்புக்களால் அல்லற்பட்டது. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் பாண்டியநாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் பாண்டியநாடு கடுங்கோனால் மீட்கப் பெற்றுத் தன்னாட்சி பெற்றது. திரும்பவும் பத்தாம் நூற்றாண்டில் அது சோழர் ஆட்சியின் கீழ் அடிமை யுற்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சடாவர்மன் குலசேகரன் என்னும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 232 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 7

(தோழர் தியாகு எழுதுகிறார் 231 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 6 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 7 என் பெயர் (இ)ரெய்னா ஃகாவுகிப்பு. குக்கி இனப் பெண். அகவை 18. நாட்டைக் குலுக்கிய அந்த மே 4 காணொளி 75 நாளுக்குப் பின் வெளிவந்து, உச்சநீதிமன்றத்தை அதிர்ச்சி தெரிவிக்கச் செய்து, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதியைப் பேச வைத்தது அல்லவா? அதன் பிறகு அதே போன்ற பல வன்கொடுமைச் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. அந்த வன்கொடுமைகைளில் சிக்கிச்…

தமிழ்ப்பாரதம் – இந்தியாவா? பாரதமா? – 1 தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்

(இந்தியாவா? பாரதமா? – 1 தொடர்ச்சி ) தமிழ்ப்பாரதம் முந்தைய கட்டுரையில் பரதம் அல்லது பாரதம் என்பது தமிழ்ச்சொல் எனக் கூறியிருந்தோம். இதற்கான தமிழிலக்கிய மேற்கோள்களையும் காட்டியிருந்தோம்.  இன்று வரையுள்ள அனைத்து மேற்கோள்களையும் காட்டினால் பக்கங்கள் பெருகும். “பாரத நாடு பழம் பெரும் நாடு,  பாரதப் பூமி பழம்பெரும் பூமி, பாரத நாடு பார்க்கெலாம் திலகம், பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?, பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர், வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியை, பாரத தேசமென்று பெயர் சொல்லுவார், வாழிய பாரத மணித்திரு நாடு,…

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. அ. வள்ளலாரும் சீர்திருத்தமும்

(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 2. மாணவரும் தமிழும் – தொடர்ச்சி) 3. வள்ளலாரும் சீர்திருத்தமும் [இராமலிங்க சுவாமிகள் சமாச சார்பில் நிகழ்ந்த வள்ள லார் பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரை. திருவொற்றியூர்] சகோதரிகளே! சகோதரர்களே!!   யான் இப்பொழுது பல அழைப்புகளை மறுத்து வருகிறேன். ஆனால் இந்த இராமலிங்க சுவாமிகள் சமாசத்தார் அழைப்புக்கு மட்டும் இணங்கினேன். இச் சமாசம் காலஞ்சென்ற தலைவர் கா. இரா. நமச்சிவாய முதலியாரின் உடன் பிறந்தார் திரு. கா. இரா. மாணிக்க முதலியார் தலைமையில் நடைபெறுவது. இத்தலைமை…

தோழர் தியாகு எழுதுகிறார் 231 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 6

(தோழர் தியாகு எழுதுகிறார் 230 : மணிப்பூர்க் கோப்புகள் – 4-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை (6) என் பெயர் சோசுவா ஃகான்சிங்கு. மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்தவன். என் மனைவி மீனா ஃகான்சிங்கு (அகவை 45) மெய்த்தி இனத்தைச் சேர்ந்த கிறித்தவப் பெண். எங்கள் ஏழு வயது மகன் தொன்சிங்கு ஃகான்சிங்கு. எங்கள் உறவினரான லிடியா (இ)லூரம்பம் (அகவை 37). அவரும் மெய்த்தி கிறித்தவர். நாங்கள் அனைவரும் இம்பாலில் இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்தோம். எங்களுக்கு ஆபத்து…

தோழர் தியாகு எழுதுகிறார் 230 : மணிப்பூர்க் கோப்புகள் – 4

(தோழர் தியாகு எழுதுகிறார் 229 : மணிப்பூர்க் கோப்புகள் – 3 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை (5) என் பெயர் தியன்ன வைப்பே சௌண்டாக்கு. மணிப்பூர் மாநிலம் பெய்டாச்சிங்கு சிற்றூரில் கிறித்துவ சமயக் குரு. மே 7ஆம் நாள் பெரிய வெறிக்கும்பல் ஒன்று எங்கள் ஊரைத் தாக்கியது. மறுநாள் இரு குழந்தைகளின் தாயான 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் பாதி எரிந்து கருகிய நிலையில் கிடக்கக் கண்டேன். உடலில் ஆடையில்லை. இம்பாலில் உள்ள…