பூங்கொடி 17 – கவிஞர் முடியரசன்: வெருகன் நய வஞ்சகம்
(பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை – தொடர்ச்சி) பூங்கொடி பூங்கா புக்க காதை வெருகன் நய வஞ்சகம் நீறுறு நெற்றியன் நிகரிலாச் செல்வன் ஏறெனப் பொலிவுறும் இளைஞன் அழகன் காண்போர் மயங்கும் காட்சியன் உலகில்அவ் 70 ஆண்போல் ஒருவனைக் காணுதல் அரிது பிறர்மனங் கவரப் பேசும் வன்மையன் அறமுறு செயலே ஆற்றுவான் போல எண்ணும் வகையில் இருப்பவன் வெருகன் நண்ணி என்னை நயவஞ் சகமாக் கடத்திச் சென்றான் கதறியும் பயனிலை விடலை தமியளை விழ்ந்திடச் செய்தனன்; அவன்மொழி நம்பி அவன்வழிப்…
ஆளுமையர் உரை 67,68 & 69 : இணைய அரங்கம்: 08.10.2023
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை (திருவள்ளுவர், திருக்குறள் 411) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 67, 68 & 69 : இணைய அரங்கம் புரட்டாசி 21, 2054 ஞாயிறு 08.10.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும் நானும்”…
தோழர் தியாகு எழுதுகிறார் 229 : மணிப்பூர்க் கோப்புகள் – 3
(தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) – 3 காதை 3 நான் குக்கி இனப் பெண். பெயர் வேண்டா. அகவை 29. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். இனி அங்கு திரும்பிச் சென்று படிப்பைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை இல்லை. என்ன நடந்தது? சொல்கிறேன். மே 3 இரவு, விடிந்தால் 4 – இம்பாலில் மணிப்பூர் பல்கலை வளாக…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 865-880
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்: 851-864 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 865-880 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) நூல் : மோசூர் ஆலடிப் பிள்ளையார் புகழ்ப் பத்து – (1940) மூலமும் உரையும் நூலாசிரியர் : மோசூர் கந்தசாமி முதலியார், பி.ஏ., எம்.ஆர். ஏ.செ.. பச்சையப்பன் கல்லூரி (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 17 : நான் எந்தக் கட்சியையும் சேராதது
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தா வேலை – தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ அத்தியாயம் 10. நான் எந்தக் கட்சியையும் சேராதது சென்னையில் பல கட்சிகள் உண்டு என்பது எல்லாரும் அறிந்த விசயமே. முக்கியமாக காங்கிரசுக் கட்சி, நீதிக் கட்சி என்று இரண்டு பெரிய கட்சிகளைப் பற்றி அறியாதோர். கிடையாதல்லவா? இவைபற்றிய என் விருத்தாந்தங்களை இங்கு எழுத விரும்புகிறேன்.. நான் கல்லூியில் படித்தபோது காங்கிரசுக் கூட்டம் சென்னையில் கூடிய போது ஒரு தொண்டராக இருந்தேன். இது நேர்ந்தது 1894-ஆம் வருசம்….
தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2
(தோழர் தியாகு எழுதுகிறார் 227 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) – தொடர்ச்சி) மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) இனிய அன்பர்களே! காதை (2) நான் அங்குலால்முவன் வைப்பே, சூரசந்துபூர் கல்லூரியில் புவியியல் பட்டப் படிப்பு மாணவன். அகவை 21. சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவன். முகநூலில் இடுகை இடுவேன். பிடித்தமான பிறர் இடுகைகைகளைப் பகிர்வேன். ஏப்பிரல் 27க்குப் பின் சூரசந்த்பூர் மாவட்டமே பதறியது. குக்கி-சோ குழுக்கள் முதலமைச்சர் பிரேன் சிங்கை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தன. அவர் தொடங்கி வைப்பதாக இருந்த உடற்பயிற்சிக் கூடம்…
இந்தியாவா? – பாரதமா? : இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தியாவா? – பாரதமா? 1 நாடுகள், நகரங்கள், அமைப்புகள் பெயர்கள் மாற்றப்படுவது இயற்கைதான். அந்த வகையில் இந்தியா என்பதைப் பாரத்>பாரதம் என மாற்றுவதையும் இயற்கையாகக் கருதலாம். ஒரு செயல் நன்றாக இருந்தாலும் அதைச் செய்வது யார், அதன் நோக்கம் என்பதைப் பொருத்தே, அது குறித்து முடிவு எடுக்க முடியும். அப்படித்தான் பாசகவின் இந்தியப் பெயர் மாற்றம் குறித்தும் கருதப்படுகிறது. வடக்கே இந்தியா என்னும் சொல்லாட்சி ஏற்பட்டாலும் பன்னெடுங்காலமாக இந்நிலப்பகுதி பரதம் என்றே அழைக்கப்பட்டுள்ளதை நோக்குவோம். தமிழ் மக்கள் நிலத்தை இயற்கையோடியைந்து குறிஞ்சி, முல்லை, மருதம்,…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 55 : தளிரால் கிடைத்த தயை
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 54 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2 – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 30. தளிரால் கிடைத்த தயை சவேரிநாத பிள்ளையிடம் நைடதம் பாடங்கேட்டு வரும்போது இடையிடையே நான் அவரைக் கேள்விகேட்பதை என் ஆசிரியர் சில சமயம் கவனிப்பதுண்டு. என் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் அவர் சும்மா இருக்கும்போது பிள்ளையவர்கள், “என்ன சவேரிநாது, இந்த விசயங்களை எல்லாம் நீ தெரிந்துகொள்ள வேண்டாமா? அவர் தாமே படித்து விசயத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறாரே” என்று சொல்லுவார். அப்போது எனக்கு ஒரு…
தோழர் தியாகு எழுதுகிறார் 227 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)
(தோழர் தியாகு எழுதுகிறார் 226 : அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு-தொடர்ச்சி) மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) இனிய அன்பர்களே! காதை (1) எனக்கு வயது 18, மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண். கிழக்கு இம்பாலில் இது நடந்தது: ஆயுதமேந்திய மெய்த்திப் பெண்கள் குழு ஒன்று, அதன் பெயர் மீரா பைபிசு, பெண் சுடரேந்திகள் என்று பொருள். மற்றொரு பெயர் “மணிப்பூர் அன்னையர்” என்பதாகும். இந்தக் குழுவினர் என்னைப் பிடித்து கறுப்பு உடையணிந்த நான்கு இளைஞர்கள் கொண்ட ஒரு மெய்த்திக்…
தோழர் தியாகு எழுதுகிறார் 226 : அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு
(தோழர் தியாகு எழுதுகிறார் 225 : வழக்கறிஞர் மகாதேவன் உரை-தொடர்ச்சி) அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு 2008-09 காலத்தில் ஈழம் தந்த கவலையும் அதிர்ச்சியும் போல் இன்றைய மணிப்பூர் செய்திகள் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கின்றன. இலங்கையில் நடந்தது தமிழினவழிப்பு என்றால் மணிப்பூரில் நடப்பது குக்கி இனவழிப்பு. தமிழினவழிப்புக்கு சிங்களப் பேரினவாத மனநிலை துணை நின்றது போல், குக்கி இனவழிப்புக்கு மெய்த்தி பேரினவாத மனநிலை துணை நிற்கிறது. தமிழினவழிப்பை நிகழ்த்திய முதல் குற்றவாளி சிங்கள அரசே! குக்கி இனவழிப்பை நிகழ்த்தி வரும் முதல் குற்றவாளி…
ஊரும் பேரும் 50 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அகத்தீச்சுரம்
( ஊரும் பேரும் 49 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஈச்சுரம் -தொடர்ச்சி) ஊரும் பேரும் அகத்தீச்சுரம் நாஞ்சில் நாட்டில் கன்னியா குமரிக்கு அண்மையில் அகத்தீச்சுரம் என்னும் ஊர் காணப்படுகின்றது. ஆலயத்தின் பெயரே ஊர்ப் பெயராயிற்றென்பது தேற்றம். அக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீசுவரமுடைய மாதேவன் என வரும் தொடரால்குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும், அகத்தீசுரம் என்பது ஆலயத்தின் பெயராகவும் கொள்ளலாகும். குலோத்துங்க சோழன் அகத்தீச்சுரமுடைய ஈசனார்க்கு வழங்கிய நிவந்தம் அச்சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.12 அயனீச்சுரம் வட ஆர்க்காட்டு நாட்டிலே வழுவூர்…
தமிழ் வளர்த்த நகரங்கள் 8 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கிய மதுரை 2/2
(தமிழ் வளர்த்த நகரங்கள் 7 – அ. க. நவநீத கிருட்டிணன் : இலக்கிய மதுரை 1/2 தொடர்ச்சி) அத்தியாயம் 4. இலக்கிய மதுரை தொடர்ச்சி புதுப்புனல் விழா நடைபெறும் நன்னாளில் இத் துறைக்கண் குழலும் யாழும் முழவும் ஆகிய பல்வகை இன்னியங்கள் முழங்கும். அரசனால் தலைக்கோல் அரிவையென விருதுபெற்ற ஆடல் மகளிரும் பாடல் பாணரும் அத்துறையைச் சார்ந்த பொழிலிடத்தே ஆடல் நிகழ்த்துவர். நாடக மகளிரின் ஆடல் ஒலியும், இன்னியங்களின் பேரொலியும் கரையில் வந்து மோதும் வெள்ளத்தின் அலையொலியுடன் சேர்ந்து இடிமுழக்கம் போல் ஒலிக்கும்….
