தோழர் தியாகு எழுதுகிறார் 225 : வழக்கறிஞர் மகாதேவன் உரை

(தோழர் தியாகு எழுதுகிறார் 224 : வல்லியத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல் – தொடர்ச்சி) வழக்கறிஞர் மகாதேவன் உரை இனிய அன்பர்களே! “வல்லிய(பாசிச)ச் சட்டங்கள் – த.எ.த. (ஊபா), என்ஐஏ” என்ற தலைப்பில் 2023 சூலை 6ஆம் நாள் வல்லிய(பாசிச) எதிர்ப்பு மக்கள் முன்னணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் சேல் முருகன் தலைமையில், தோழர் அரி பரந்தாமன், ப.பா. மோகன், நெல்லை முபாரக்கு ஆகியோருடன் நானும் பேசினேன். நேரில் வர முடியாத நிலையில் ஐதராபாத்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மகாதேவன் அனுப்பி வைத்த ஆங்கில…

இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா, சென்னை

சிவகங்கை வழக்குரைஞர் மானமிகு இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா புரட்டாசி 12, 2054 — 29.09.2023 வெள்ளி மாலை 6.00 இடம் : நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 தலைமை : ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை: தோழர் இரா.நல்லக்கண்ணு பிறர் : அழைப்பிதழ் காண்க. இவண்: பெரியார் தன்மதிப்புப் பரப்புரை (சுயமரியாதைப் பிரச்சார) மையம்

தோழர் தியாகு எழுதுகிறார் 224 : வல்லியத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள் – தொடர்ச்சி) வல்லியத்தின்(பாசிசத்தின்) பாலியல் வன்கொடுமை அரசியல் இனிய அன்பர்களே! மணிப்பூர் மாநிலத்தில் சென்ற மே 4ஆம் நாள் நடந்த கொடுமை இந்திய நாடு முழுவதையும், எல்லைகளுக்கு அப்பாலும் கூட, அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு ஒன்று அம்மணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்ச்சியின் காணொளி இப்போதுதான் குமுக ஊடகங்கள் வழியாக வெளிவந்துள்ளது.அந்தக் காட்சியைக் காட்ட வேண்டா…

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 2. மாணவரும் தமிழும்

(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் , 1. தமிழ்க்கலை – தொடர்ச்சி) 2. மாணவரும் தமிழும் (15-10-51 அன்று பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு) தமிழ்த் தோழர்களே! இன்று இங்கே தமிழ் மன்றத்துவக்க விழாவுக்குத் தலைமை வகிக்கும்படி நீங்கள் கட்டளை இட்டிருக்கிறீர்கள். என்னுடைய உடல் எந்த நிலையிலே இருக்கின்றது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். முனைவர். மு. வரதராசனார் அவர்கள் என்னைப்பற்றிச் சிறப்புரை பகர்ந்தார். யான் அச் சிறப்புரைகளுக்கு அருகன் அல்லன். என்னுடைய கண்கள் படலத்தால் மறைக்கப் பட்டிருக்கின்றன….

தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 222 : காமராசர் பிறந்த நாள்-தொடர்ச்சி) கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள் இனிய அன்பர்களே! இளைஞர் அரண் கல்வியுரிமைப் பேரணி – மாநாடு, குடந்தை – 20232023 சூலை 16மாநாட்டுத் தீர்மானங்கள் (வரைவு) 1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன கொடுமைக்கு முழுமையாக நீதி வழங்க வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. ஒவ்வோராண்டும் சூலை 16ஆம் நாளைத் தமிழக…

பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை

(பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்- தொடர்ச்சி) பூங்கொடி உலுத்தர் தொல்லை கடைத்தெரு வழியே காரிகை தனியாய் ஏகின் சிற்றினம் எதம் விளைக்கும் ;    50 நாகிளம் பருவ நல்லியல் மாதர் உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின் நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர் மக்கட் பண்பு மங்குதல் கண்டோம்           55 தெக்கணம் இப்படித் தேய்வது நன்றாே ? அல்லியின் வரலாறு வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய் களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ் மயில்நகர்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  851-864

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 831-850– தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 851-864 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 851. வர்ச(ஷ)ம் –           ஆண்டு 852. கசா(ஷா)யம்         –           பொருட்களை ஊறக்கொண்டது 853. கனகம், சு(ஸ்)வர்ணம்        –           பொன்…

தோழர் தியாகு எழுதுகிறார் 222 : காமராசர் பிறந்த நாள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 221 : அவலமான கல்விச் சூழல் 2/2-தொடர்ச்சி) காமராசர் பிறந்த நாள் இனிய அன்பர்களே! இன்று (சூலை 15ஆம் நாள்) இளைஞர் அரண் – கல்வி உரிமை மாநாட்டுக்காகக் குடந்தையில் இருக்கிறேன். ஐயா சுப்பிரமணியம் அவர்களின் வீட்டில் தனியாக உட்கார்ந்து கணினியைத் தட்டிக் கொண்டிருந்தேன். ஐயாவின் மூத்த மகன் பாபு ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து “ஃகாசா” என்று அறிமுகம் செய்து வைத்தார். “உட்காருங்கள், எனக்குப் பேச நேரமில்லை” என்றேன். ஃகாசா சொன்னார்: “இன்று காமராசர் பிறந்த நாள். நீங்கள்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம் – தொடர்ச்சி) 9. நான் கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது எனக்கு ஞாபக சக்தி உ.தித்த காலமுதல், சாதாரணமாக என் விளையாட்டெல்லாம் பெரும்பாலும் பிள்ளையார், மீனாட்சி அம்மன், வெங்கடேசப் பெருமாள் இவர்களுடைய செப்பு அல்லது மர விக்குரகங்களை வைத்து அவற்றுக்கு அலங்காரம் செய்து, உற்சவம் செய்வதேயாம். சனிக்கிழமை வந்தால், முன்னாள் வெள்ளிக்கிழமை என் தாயார் விசேட பூசை செய்த பூக்களை வைத்துக்கொண்டு நான் என் நேர் மூத்தவராகிய ஆறுமுகத்துடன் சாமி தூக்கி…

தோழர் தியாகு எழுதுகிறார் 221 : அவலமான கல்விச் சூழல் 2/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 220 : அவலமான கல்விச் சூழல் 1/2 – தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் அவலமான கல்விச் சூழல் 2/2 வருங்காலங்களில் அரசுக் கல்லூரிகள் புதிய பாடத்திட்டங்களுடன் தமிழ்நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும். தனியார் தன்நிதிக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி நிறுத்தப்பட வேண்டும். பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் போதிய உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கூடவே உயர் கல்வித்துறையில் நடக்கும் இலஞ்ச–ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதோடு, அவற்றைத்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 54 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 53 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 1/2 – தொடர்ச்சி) அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2 அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த சங்கீத வித்துவான்கள் பாரதியாரை அடிக்கடி பார்க்க வருவார்கள். மாயூரத்தில் சாத்தனூர்ப் பஞ்சுவையர், கோட்டு வாத்தியம் கிருட்டிணையர், திருத்துறைப்பூண்டி பாகவதர், பெரிய இராமசாமி ஐயர் முதலிய சங்கீத வித்துவான்கள் இருந்தனர். வேதநாயகம் பிள்ளை முன்சீபாக இருந்தமையால் அவரிடம் உத்தியோகம் பார்த்த குமாசுத்தாக்களும் வக்கீல்களும் அவருடைய பிரியத்தைப் பெறும்பொருட்டு அவர் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடுவார்கள். அதற்காகச்…