தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 208-212
(தமிழ்ச்சொல்லாக்கம் 203-207தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 208. புருசார்த்தம் – தக்க நலம் 209. பரிசுத்த (இசு)தானம் – தூய நிலம் 210. துர்கதி – பொல்லா நெறி நூல் : பகவத்(து) கீதை வெண்பா (1906) நூலாசிரியர் வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர் ★ 211. Cultivators : பயிரிடுகிறவர்கள் 212. Sea Custom கடல்வரி இதழ் : விவகாரி (1906), புத்தகம் இலக்கம் 1 இதழாசிரியர் ஏ. நடேசபிள்ளை, வக்கீல், மாயவரம் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்
கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 : புலவர் பழ.தமிழாளன்
கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 தில்லைமரம் நிறைந்ததினால் தில்லை யென்ற பெயரோங்கும் இடமும் ஆகிச் செந்தமிழர் போற்றுகின்ற சிவனாகும் நடராசர் கோவி லுக்குத் தொல்தமிழ இனம்வந்த முதற்பராந்த கமன்னென்பார் பொன்னும் வேய்ந்தார் / புதுக்கோட்டை மாமன்னர் சேதுபதி மரகதக்கல் ஈந்து மகிழ்ந்தார் // கொல்லைப்புற வழியாக உட்புகுந்த தீச்சிதரும் உரிமை கோரல் / கருநாகம் கரையான்புற் றுரிமை தனைக் கோருகின்ற நிலையே ஒக்கும் // வல்லடியாய் வழக்காடு தீச்சிதரை …
பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!
ஏ, தாழ்ந்த தமிழகமே! 1/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] புரட்சியின் சிகரம் தலைவர் அவர்களே! அருமைத் தோழர்களே!! மிக உற்சாகத்துடன் ஒரு கவிக்கும் (பாரதிதாசன்) ஒரு பேராசிரியருக்கும் (பேராசிரியர் கா. சு. பிள்ளை) சிறந்த முறையிலே பாராட்டுதல் நடத்துகிற இந்த உங்கள் சம்பவத்திலே, நான் கலந்துகொண்டு பேசுவதற்கும், இதில் பங்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கும் எனது…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 56
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 55 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 20 தொடர்ச்சி அவள் துன்பப்பட்டிருக்கிறாள்! பொறுப்புகளைச் சமாளித்திருக்கிறாள். வாழ்க்கை வீணையின் நரம்புகளில் எல்லாவிதமான துன்ப நாதங்களையும் கேட்டிருக்கிறாள். ஆனால் அவற்றால் மூப்புக் கொண்டு அழிந்து விடவில்லை. தன்னுடைய உடம்பைப் பேண நேரமின்றி, பேணும் நோக்கமும் இன்றித் தன்னையே மறந்துவிட்டிருந்தாள் அவள். ஆனால் உடம்பு அவளை மறந்துவிடவில்லை. கண்ணாடியில் உடம்பைக் கண்டு கொண்டே மனத்தில் சிந்தனைகளைக் காண்பது சுகமாக இருந்தது. சமையற்கார அம்மாள் வந்து ‘மருந்து சாப்பிட வேண்டிய நேரம்’ என்று நினைவுபடுத்திய போது தான்…
திருவள்ளுவர் அகப்பொருள் நெறி : நூலாய்வுக் கட்டுரை – 3/4 – வெ.அரங்கராசன்
(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 2/4 தொடர்ச்சி) முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 3/4 இம்முப்பொருள்களும் கீழ்க்காணும் 2 வகைப்பாடுகளில் வழங்கப்பட்டுள்ளன. முதல் பொருளும் கருப்பொருளும் 13 வகைகளில் வழங்கப் பட்டுள்ளன. அவை 1 முதல் 13 தலைப்புகளில் அமைந்துள்ளன. அவை: 1.அறிமுகம் 2. காமம் 3.பாடல் வடிவம் 4.திணைப் பகுப்பு 5.நாடக வழக்கு 6.அகப்பொருள் தலைமக்கள் 7.பெயர் வரும் முறைமை 8.கூற்று முறைமை 9.நிலம் 10.பொழுது 11.பிரிவு [பொது] 12.களவு …
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 203-207
(தமிழ்ச்சொல்லாக்கம் 197-202 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 203. மத்தியசுதன் – நடுவோன் 204. (இ)லாபம் – பேறு 205. துர்கதி – பொல்லா நெறி 206. கர்மபந்தம் – வினைக்கட்டு 207. (இ)லாப நட்டம் – பேறு இழவு நூல் : பகவத்(து) கீதை வெண்பா (1906) நூலாசிரியர் வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர் பதிப்பாளர் சே. கே. பாலசுப்பிரமணியம் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்
கரையானின் புற்றிற்குள் கருநாகப் படையெடுப்பா ! ? – புலவர் பழ.தமிழாளன்
கரையானின் புற்றிற்குள் கருநாகப் படையெடுப்பா ! ? இறையுறையும் கோவில்கட்ட இயன்ற வரை பொருளீந்தோர் தமிழ ரன்றோ ? எழிலார்க்கும் கோபுரமும் இறையமரும் கருவறையும் புறமும் உள்ளும் முறையாகப் பணிபுரிந்தோர் முத்தமிழ்த் தாய் ஈன்றெடுத்த சேய்க ளன்றோ ? முடிவுற்ற கோயிலினுள் முத்தாய்ப்பாய் எப்பணியும் செய்யா நின்ற கறையுள்ளத் தீச்சிதர்கள் உட்புகுந்தே தில்லையிலே போடும் கொட்டம் காணக்கண் கூசுகின்ற காட்சியதைக் காணுங்கால் கரையான் தன்வாய் // உறைவதற்கே உழைத்தெடுத்த புற்றி …
பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 6
(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 5 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி “ஏண்டி ! என்னமோ காணாததைக் கண்டவங்க மாதிரி முழிச்சிட்டு இருக்கறிங்க.” “ஒண்ணுமில்லையே, அக்கா.” ” அக்காவா நானு? இவ கொழந்தை ! வயசு பதினாறு.” இவ்விதம் வேடிக்கையாகப் பேசுவாள் மற்றப் பெண்களிடம், சிறுகல், தலையில் கட்டிய பாகை, வெத்திலைப்பை, இவை அடிக்கடி மீனா மீது தான் விழும். மேசுதிரி இவற்றை அடிக்கடி வீசுவார், அவள் ஏச மாட்டாள். அவளுக்கு அவன் கொடுத்து வந்த எட்டணா கூலி, இந்த…
அடிப்பாய் நீச்சல் உன்கையாலே! – பாவலர் மு இராமச்சந்திரன்
அடிப்பாய் நீச்சல் உன்கையாலே! வந்தது போகும் வருவதும் போகும் வாழ்நாள் முழுவதும் வருவதும் போகும் துன்பங்கள் போகும் துயரங்கள் போகும் துய்க்க மறந்தன பலவும் போகும் ஏழ்மையும் போகும் இன்பங்கள் போகும் இருந்து களித்த சுகங்களும் போகும் போகும் போகும் புகுந்தன போகும் புதிதாய் வந்தன பழையதாய்ப் போகும் இளமை போகும் இருந்து உழைத்த உறுதியும் போகும் இல்லாதிருந்த மாற்றங்கள் வாழும்! படைத்தன போகும் பகைகளும் போகும் பழியென சுமந்த காலமும் போகும் அப்படி அப்படி ஆட்சியில் உலகம் அதனுள் இருந்து பழகிடு உவந்தும்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 197-202
(தமிழ்ச்சொல்லாக்கம் 178- 196 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 197. அசுதமயம் – ஞாயிறுபடுதல் 198. அற்பம் – சிற்றளவை 199. அநுராகம் – தொடர் விருப்பு 200. கவி – புலவன் 201. கல்யாணம் – மணவினை 202. விபரீதம் – மாறுபாடு நூல் : சேந்தன் செந்தமிழ் (1906) நூலாசிரியர் பாம்பன் குமர குருதாச சுவாமிகள் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்
தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும்! – புலவர் பழ.தமிழாளன்
தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும்! இதழ்களுக்கு வேண்டும் ! 1.நாடாம்நம் மொழியினமே போற்றல் வேண்டும் !நற்றமிழர் பண்பாடு காத்தல் வேண்டும் !வாடாமல் உணவுண்டே மக்கள் வாழவழிவகைகள் ஆசான்போல் கூறல் வேண்டும் !நாடாளும் மன்னனிடம் குறையே கண்டால்நக்கீரன் போலுறுதி கூறல் வேண்டும் !ஏடாள்வோன் என்றென்றும் நெருப்பைக் கக்கும்எரிமலையாய்த் தீமைதனை எரித்தல் வேண்டும் ! 2.மனமொன்றித் தமிழினத்து மக்கள் எல்லாம்மாற்றமின்றித் தமிழறத்தைப் போற்றல் வேண்டும் !இனம்நாடு மொழிவாழ்ந்து சிறப்புற் றோங்கஎந்நாளும் ஏற்றபணி செய்தல் வேண்டும் !தனதுநல வாழ்வதனைப் புறத்தே தள்ளித்தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும் !இனப்பகையாம் ஆரியத்தை…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 55
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 54 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 20 தொடர்ச்சி ‘உன் விருப்பம் தெரிந்து இந்தக் கடிதங்களுக்கு நான் மறுமொழி எழுத வேண்டும். அல்லது நீயே அவர்களுக்குத் தனித்தனியே பதில் கடிதம் எழுதி விடலாம். எங்கள் எல்லோருடைய அபிப்பிராயமும் நீ இவற்றுக்கு ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதுதான். உடல்நிலைப் பற்றிக் கவலைப்படாதே! இவற்றில் கலந்து கொண்டு அடைகிற உற்சாகமும் கலகலப்புமே உன் உடம்பைத் தேற்றிவிடும் என்பது எங்கள் கருத்து. மேலும் அவை எல்லாவற்றுக்கும் நீ ஒப்புக் கொண்டாலும் முழுமையாக இன்னும் இரண்டு மாத கால…
