பு தி ய  ஆ ட் சி த் த மி ழ் ச்  ச ட் ட ம்  தே வை! –  இலக்குவனார் திருவள்ளுவன்

(5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 6.  பு தி ய  ஆ ட் சி த் த மி ழ் ச்  ச ட் ட ம்  தே வை! தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பது கட்சி, சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பாராலும் பலமுறை வற்புறுத்தப்பட்டு வந்தது. தமிழறிஞர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், அரசியலாளர்கள் எனப் பலரும் கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றியும் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினர். இவற்றின் பயனாக, ஆட்சிமொழிச்சட்டம் 1956இல்…

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி:நூலாய்வுக் கட்டுரை – 2/4 – வெ.அரங்கராசன்

(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 1/4 தொடர்ச்சி) முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 2/4 மூன்றாம் பக்கம் முதல் எட்டாவது பக்கம்வரை நூலாசிரியரின் விரிவான — விளக்கமான முன்னுரை  பக்கம் 3 முதல் 8 வரை 6 பக்கங்களில் விளங்குகின்றது. அதில் கீழ்க் காணும் கருத்தாக்கங்கள் கூறப்பட்டுள்ளன. 1. அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்கள்   மாந்தர்க்கு  உயர்நெறி வழங்கத் திருவள்ளுவர்  எண்ணியமை 2. தலைவன், தலைவி பெறத்தக்க இன்பத்தை  மூன்றாம் பாலாக ஆக்கியமை…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 178- 196

(தமிழ்ச்சொல்லாக்கம் 169 – 177 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 178. பாரகாவியம் – பெருநூல் நூல்   :           திருவிளையாடற் புராண மூலமும் அரும்பதக் குறிப்புரையும் (1905) குறிப்புரை :           முத்தமிழ் இரத்னாகரம் ம. தி. பானுகவி வல்லி – ப. தெய்வநாயக முதலியார் சென்னை சிந்தாதிரிப் பேட்டை ஆங்கிலோ வருணகுலரி இசுகூல் தமிழ்ப் பண்டிதர் ★ 179. புலித்தோலாசனம் –        வேங்கையதள் 180. சோமவாரம்  –        மதிநாள் 181. சரசுவதி        –       வெள்ளைச் செழுமலர்ந்திரு 182. வியாக்கிரபாதன்   –         புலிக்காலோன்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 5

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 4 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 பழனி பராரியாகி, சோற்றுக்கே திண்டாடி, மனைவியால் வெறுக்கப்பட்டுத் தன் வீட்டு வாயிற்படிக்கு வந்து நின்று, “அப்பா ! புத்தியில்லாமல் ஏதோ செய்துவிட் டேன், பொறுத்துக் கொள்ளுங்கள் ‘ என்று கெஞ்ச வேண்டும், “சீ நீசா ! என் முகத்தில் விழிக்காதே! உன்னைக் கண்டாலே நரகம் சம்பவிக்கும்” என்று ஏச வேண்டும்; பழனி கதறவேண்டும்; பிறகு அவனை மன்னித்து உள்ளே சேர்த்துக்கொள்ள வேண்டும்; இதுவே செட்டியாரின் நித்தியப்பிரார்த்தனை. எந்தத் தெய்வத்திடம்…

இல்லையென்ற கவலைகளை ஓட்ட வேண்டும்!- பாவலர் மு. இராமச்சந்திரன்

இல்லையென்ற கவலைகளை ஓட்ட வேண்டும்! அரசென்றால்.. அது அப்படித் தான் இருக்க வேண்டும்! அடுப்படி விறகும் கூட எல்லார்க்கும் பங்கு வேண்டும்! உழைப்போர் பார்த்து உதவும் கரம் நீட்ட வேண்டும்! உதவாதார் கைகள் கட்டி திருத்தும் வழி கூறல் வேண்டும்! அகம்புறமும் ஒன்றாகப் பணியாற்றி நடக்க வேண்டும்! அடிபட்டோர் வாழ உதவிக்கரம் நீட்டிடல் வேண்டும்! தனக்கெனவே அலைவோரை தொலைவிலே நிறுத்த வேண்டும்! தக்கவரைப் பார்த்துத் தேடி முன்கொணர்ந்து நிறுத்த வேண்டும்! மண்மணமும் மாண்புகளும் தாளாது நடத்த வேண்டும்! மக்களெண்ணம் மகிழ்வதற்கே கேடுகளைக் கொய்ய வேண்டும்!…

5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

(4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக!– தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் 1956 நிறைவேற்றப் பட்டதிலிருந்து  இதுநாள் வரை தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்காகப் பல்வேறு அரசாணைகள், தொடர்பான சுற்றறிக்கைகள், மடல்கள், வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்வளர்ச்சித்துறை இணையத்தளத்தில் 02.08.1968 முதல் 02.11.2021 வரையிலான 120 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில முன்னர் வெளியிடப்பட்டவற்றையே வலியுறுத்திப் பின்னரும் வெளியிடப்பட்டனவாக இருக்கின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளமையே தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் எந்த அளவில்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  54

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  53 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்20 “ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப்பிறவனைத்தும் தானாகி நீயாய் நின்றாய்தானேதும் அறியாமே என்னுள் வந்துநல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்”      — தேவாரம் மேகங்கள் குவிந்து திரண்ட கருநீலவானின் கீழே அன்று அந்த அந்தி மாலைப்போது கோடைக்கானலுக்கே தனி அழகை அளித்தது. யூகலிப்புடசு மரங்களின் மருந்து மணத்தை அள்ளிக் கொண்டு வரும் காற்று, உடற்சூட்டுக்கு இதமான கிளர்ச்சி. கண்களுக்குப் பசுமையான காட்சிகள், பகலிலும் வெய்யில் தெரியாதது போல் நீலக்கருக்கிருட்டு, மந்தார நிலை. உலாவச்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 169 – 177

(தமிழ்ச்சொல்லாக்கம் 161 – 168 தொடர்ச்சி) யோகநித்திரை – அறிதுயில்அறிதுயில் எல்லாவற்றையு மறியா நின்றே துயிலல். இதில் அறிதலும் துயிறலும் ஒருங்கு நிகழ்தலான் இது துணைவினையெனப்படும். இதனை யோக நித்திரையென்பர் வடநூலார், நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904) பக்கம் : 55 ★ ஆசி – வாழ்த்துஆசி – ஆசிசு என்னும் வடசொல்லின் விகாரம். வாழ்த்து என்பது பொருள்.மேற்படி நூல் : பக்கம் -285உரையாசிரியர் : வித்துவான் – காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு★ (ட்)செரம் – மழித்தல்முகத்திடை நீண்டவுரோமம், நீண்ட முகரோமம்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16- 20

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15  தொடர்ச்சி)            16.    இல்லாமை வறுமையவர்க் கியலாமை தீச்செயலே                 சொல்லாமை பொய்குறளை சோராமை பிறர்பயனே                 செல்லாமை தீநெறியே தீண்டாமை பிறர்பொருளே                 கல்லாமை களவிவறே கருதாமை யறங்கடையே.            17.    பொன்மான மானாலும் பொருண்மான மானாலும்                 மன்மான நிலைதீர்ந்து மதிமான மானாலும்                 கன்மான வயலார்முன் கையேந்திப் பல்லிளியார்                 தன்மான மாறாத தகுமானத் தனித்தமிழர்.            18.    சிறந்தானும் பெருமையினிற் றீர்ந்தானு முரிமையெலாந்                 துறந்தானும் பொருவுநிலைத் துறைபோந்து முறைவாழ்ந்தார்                 இறந்தேனும் பொதுவாழ்வுக் கியன்றனசெய் குவதல்லான்                 மறந்தேனும் பிறன்கேடு சூழாத மணித்தமிழர்….

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி: நூலாய்வுக் கட்டுரை – 1/4 – வெ.அரங்கராசன்

முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 1/4 நுழைவாயில்:             1-8-1973 ஆண்டு முதல் 4-2004 வரை சென்னைப் பல்கலைக் கழக இலக்கியத் துறையில் திருக்குறள் ஆய்வுப் பகுதியில் தகுதிமிகு பேராசிரியராகப் பணியாற்றிய 31 ஆண்டுகளில் திருக்குறள் ஆய்வில் உலகச் சாதனைகள் பற்பல புரிந்த  உயர்சாதனையர் நூலாசிரியர் முனைவர் கு. மோகனராசு அவர்கள். இந்நூல் வெளியிட்டப்பட்ட 4.2004 வரை நூலாசிரியரது சாதனைகள் 17. அவற்றின் பட்டியல் நூலின் பின்னட்டையில் பதிவு பெற்றுள்ளது. அவற்றை இங்குக் காண்போம். திருக்குறள் நான்காவது எழுச்சிக்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 161 – 168

(தமிழ்ச்சொல்லாக்கம்  151-160  தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 161. ஆதாரம்          —        பற்றுக்கோடு 162. கர்வம்  —        பெருமிதம் 163. தாட்சண்ணியம்     —        கண்ணோட்டம் 164. அருத்த சாத்திரம்   —        பொருணூல் 165. தருமசாத்திரம்        —        அறநூல் 166. பத க    —        பெருங்கொடி 167. பகுதி    —        முதனிலை 168. பூரண விசுவாசம்   —        தலையளி நூல்   :           திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் : கோ. வடிவேலு செட்டியார் (சென்னை இந்து தியலாசிகல்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 4

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 3 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் – 4 அத்தியாயம் 1 தொடர்ச்சி இப்படிப்பட்ட கேள்விகள்; அவற்றுக்கு எவ்வளவு சாந்தமான முறையிலே பதில் கூறினாலும், கலவரம், கல்லடி, இவைதான் பழனி பெற்றுவந்த பரிசுகள். பல இலட்சத்தைக் கால் தூசுக்குச் சமானமாகக் கருதித் தன் கொள்கைக்காக, காதலுக்காக, தியாகம் செய்த அந்தத் தீரன், சீர்த்திருத்தப் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊரூராகச் சென்று, சொற்பொழிவு செய்வதை மேற்கொண்டான், ஒரு வேலைக்கும் போகாமல், அவனுக்கு “மகாசனங்கள்” தந்த பரிசுகள் இவை. காதலின் மேம்பாட்டை உணர் மறுத்துக்…