மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 53
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 52 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்19 தொடர்ச்சி திருவேடகநாதரை வணங்கி வரவும், நிலங்கரைகளைப் பார்த்து வரவும் வாரத்துக்கு இரண்டு முறையாவது ஊருக்குப் போய் விட்டு வருவார் மீனாட்சிசுந்தரம். இன்னொரு பழக்கமும் அவரிடம் இருந்தது. தடங்கல்களும் சந்தேகமும் ஏற்படுகிற எந்தக் காரியமானாலும் திருவேடகநாதர் கோவிலில் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வதென்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். இதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அரவிந்தனைத் தேர்தல் விசயமாகப் பூரணியைக் கலந்து கொண்டு வர கோடைக்கானலுக்கு அனுப்புவதற்கு முன் தினம் அதிகாலை…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 151 – 160
(தமிழ்ச்சொல்லாக்கம் 141-150 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 151. தரித்திரன் — வறியன் 152. நிந்தை — வசை 153. சுரோத்திரம் — செவி 154. சட்சு — கண் 155. சிங்குவை — நாக்கு 156. புருசார்த்தங்களைக் கூறும் சாத்திரங்கள் — உறுதி நூல்கள் 157. அவமானம் — இளிவரவு 158. விரோதம் — மாறுபாடு 159. பராக்கிரமம் — ஆண்மை 160. முனிவர் — அறவோர் நூல் : திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும்…
வேற்றுமையின் வித்தே சனாதனம்!- இலக்குவனார் திருவள்ளுவன்
வேற்றுமையின் வித்தே சனாதனம்! “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதனத் தருமமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதனத் தருமம் வழி முறையாக இருக்கும்” என உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெரியர் ஒருவர் முத்து உதிர்த்துள்ளார். அறிந்தே சொல்லப்படும் பொய் என்பதால் அவருக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற பொய்களை நம்பும் அப்பாவிகள் உள்ளனர். அவர்களை வைத்துத்தான் பொய்களை…
தமிழ்க்காப்புக்கழகம்- ஆளுமையர் உரை 4,5 & 6 : இணைய அரங்கம்
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 4,5 & 6 : இணைய அரங்கம் ஆனி 02 , 2053 ஞாயிறு சூன் 19, 2022, காலை 10.00 ஆளுமையர் உரைகள் : தமிழும் நானும் மு.முத்துராமன் தலைவர், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம். பொதுச்செயலாளர், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப்பேரவை இதழாளர் மும்பை குமணராசன் நிறுவனத்தலைவர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை தில்லி முகுந்தன் செயல் தலைவர், அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட…
உள்ளம் முழுதும் பூத்த வெள்ளைச் சிரிப்பு- சொற்கீரன்
உள்ளம் முழுதும் பூத்த வெள்ளைச் சிரிப்பு குளித்து மணற்கொண்ட கல்லா இளமை புன்னை பொறி இணர் தூங்குமரம் வாங்கி சுழித்த பொருனையின் செழித்த வாய்க்கால் தோய்ந்த நாட்களின் நினைவுகள் மூசும் பண்டு பெரிய காலம் தடங்கள் காட்டும். திணிமணற் பாவை உருகெழு கையின் தேன்படு சிதரினும் பலவே பலவே. சிறுவளை முரல சில்பூ அவிழ்ந்தன்ன பிஞ்சுவயதின் பூஞ்சினைக் கையள் குண்டுநீர் துழாஅய் யான் காட்டிய வெள்ளைச்சிறு கல்லினும் வெள்ளிய நகைத்து என்னுள் பூத்தாள் கலித்தே . – சொற்கீரன் [ வாய்க்காலில் குளிக்கும் போது ஆழமாய் முக்குளி…
11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சார்சா, சூலை 2023
உலகத்தமிழராய்ச்சி மன்றம்(IATR) இலிங்கன் தொழில் மேலாண்மைப் பல்கலைக்கழகம் சார்சா, ஐக்கிய அரபு அமீரகம் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆய்வுச் சுருக்கம் சேர வேண்டிய நாள்: புரட்டாசி 13, 2053 / 30.09.2022 ஆய்வுக் கட்டுரை மின்னஞ்சல்வழிச் சேர வேண்டிய நாள்: பங்குனி 17, 2054 / 31.03.2023 மின்வரி: abstract2023@gmail.com தொடர்பு முகவரி : 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை 600 017 பேசி 28340488, 96770 37474, 98422 81957, 96000 07819 www.iatrinternational.org / 11worldtamilconf@gmail.com ஆன்றோர்(தான்சிரீ)…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10 தொடர்ச்சி) 11. தன்னலமென் னும்பொருளைத் தான்காணா ராய்ச்செய்யும் இன்னலமே யந்நலமா யெந்நலமும் பொதுநலமா நன்னலஞ்செய் தெண்ணியவை நண்ணிநல மன்னினரால் பன்னலமும் பொருந்தியதன் பயன்றுய்க்கும் பழந்தமிழர். 12. முட்டாற்றுப் படவெவரு முயலாமை யெனுங்குறையை விட்டோட்டித் தாளாண்மை வேளாண்மைப் படவாழ்ந்தார் நட்டாற்றுக் கிடைப்படினு நலியாது தமிழ்வளர்க்குங் கொட்டாட்டுப் பாட்டுடைய குலமோங்குங் குணநாடர். 13. அவ்வவர்தம் பிறப்புரிமை யவரெய்தி யவ்வவருக் கவ்வவரே யரசர்களா யவரரசுக் கவரரசாய் அவ்வவர்தம் முதற்கடமை யவ்வவர்செய் தேவாழ்ந்தார் எவ்வளவு மிறைமுறையி னியனெறிமா றாத்தமிழர். …
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 141 – 150
(தமிழ்ச்சொல்லாக்கம் 138 – 140 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 141. ஆசாரம் — ஒழுக்கம் 142. வியவகாரம் — வழக்கு 143. பிராயச்சித்தம் — கழுவாய் 144. பிரத்தியட்சம் — கண்கூடு 145. வானப்பிரசுத்தநிலை — புறத்தாறு 146. சுதந்தரம் — உரிமை 147. அவயவம் — உறுப்பு 148. அமிர்தம் — சாவா மருந்து 149 நீதி — நடுவு 150. முத்தி பெறுதல் — வீடுபேறு நூல் : திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும்…
பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 4
(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 2 இன் தொடர்ச்சி) பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் அத்தியாயம் 1 தொடர்ச்சி “என்னைச் சித்திரவதை செய்வது, அதற்குப் பெயர், காதல் – ஏண்டா தம்பீ! காதல் தானே! பெற்றெடுத்த தகப்பனைக்கூட எதிர்க்கச் சொல்கிறதடா அந்தக் காதல்! ஊரிலே, உலகத்திலே, எவனுக்கும் ஏற்பட்டதில்லை காதல் ; உனக்குத்தானே முதலிலே உதித்தது அந்தக் காதல், என் உயிருக்கு உலைவைக்க.” “நான் தங்கள் வார்த்தையை எப்போதாவது மீறி நடந்ததுண்டா ?” “மீறி நடப்பவன் மகனாவானா?” “இது எனக்கு உயிர்ப்பிரச்சனையப்பா!” “படித்ததை உளறுகிறாயா? இல்லை அந்தக்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 138 – 140
(தமிழ்ச்சொல்லாக்கம் 133 – 137 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 138. Great world’s Fair – உலகத்துப் பெருஞ்சந்தை இந்துமதத்தையும் இந்துக்களின் தத்துவ ஞானத்தையும் பிற தேசங்களிலுள்ளவர்ளுக்குக் கற்பிக்க வேண்டுமென்ற அவா இவருக்கு மிக விருந்தது. இவ்வெண்ண மேற்கொண்டு 1893 ஆம் வருடத்தில் இந்தியாவினின்றுங் கிளம்பி அமெரிக்கா கண்டத்தை நோக்கிச் சென்றார். சிக்காகோ என்னும் நகரத்தையடைந்து ஆங்கு நடந்த ‘உலகத்துப் பெருஞ்சந்தை’ (Great World’s Fair)க்குச் சென்றனர். உலகத்திலுள்ள மதங்கட்கான சபையில் இவரை இந்து மதத்திற்கும் வேதாந்த நிலைமைக்கும் பிரதிநிதியாக அங்குள்ளர்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 52
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 51 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்19 சிறிது நேரம் அவருக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் சும்மா இருந்தான் அரவிந்தன். அவனிடமிருந்து என்ன பதில் வரப்போகிறதென்று அவனையே இமையாத கண்களால் கவனித்துக் கொண்டு அவரும் நின்றார். அந்தச் சமயத்தில் இடையிடையே பூக்கள் உதிர்ந்து நார் தெரியும் ஒரு உரோசாப் பூமாலையைக் கையில் ஏந்திக் கொண்டு முருகானந்தம் வந்து சேர்ந்தான். “இப்போதுதானப்பா கூட்டம் முடிந்தது. ஒன்றரை மணி நேரப் பேச்சு. தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி வெளுத்துக் கட்டி விட்டேன். தொண்டை வறண்டு…
4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(3. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக! அலுவலகங்களில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது குறித்து ஆணைகள், சுற்றறிக்கைகள், அறிக்கைகள் எனப் பலவும் வேண்டிய மட்டும் வந்துள்ளன; வந்து கொண்டுள்ளன. இருப்பினும் முழுப்பயனில்லை. உண்மையிலேயே ஆட்சிமொழிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஒரே ஓர் ஆணை மட்டும் பிறப்பித்தால் போதும். அந்த ஆணை, தமிழில் உள்ள செயல்முறை ஆணைகள், அலுவலக ஆணைகள், நிதி ஆணைகள், பட்டியல்கள், படிவங்கள், ஒப்பந்தங்கள்,…
