கவிச்சிங்கம் கண்மதியன் 4 நூல்கள் வெளியீடு
அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் ஆனந்த சேவா சங்கம் இணைந்து நடத்தும் கவிச்சிங்கம் கண்மதியன் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா அகவை எண்பது நிறைவு விழா கல்வி வள்ளல் கலசலிங்கம் விருதாளர் – பொறிஞர் மா.பிரியதர்சினி ஆனி 02, 2053 16,06,2022 வியாழன் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை
‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 4/4 – வெ.அரங்கராசன்
(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 3/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ நூல் திறனாய்வுக் கட்டுரை 4/4 13.1.0.0.அவ்ஆய்வு முடிவுகள் – 6: இவை நூலாசிரியன் ஆய்வு முடிவுகள்: 13.1.1.0.பழமையில் பெரும்பற்றுக் கொண்ட கன்பூசியசின் நோக்கிலிருந்து, வள்ளுவர் பெரிதும் வேறுபடுகிறார். [பக்.27]. 13.1.1.1. பழையன என்பதாலேயே அவற்றைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் – போற்ற வேண்டும் என்னும் உணர்வோ புதியன என்பதாலேயே அவற்றை ஏற்கக் கூடாது என் னும் உணர்வோ வள்ளுவரிடம் சிறிதும் இல்லை. பழையன வாயினும்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 133 – 137
(தமிழ்ச்சொல்லாக்கம் 129-132 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 133. பட்சி பட்சி – பட்சமுடையது (பட்சம் – இறகு) நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904) நூலாசிரியர் : வித்துவான் – காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு ★ 134. ஆறு பகை காமம் – ஒரு பொருளின் மீது செல்லும் விருப்பம், குரோதம் – அப்பொருள் கிடையாத போதுண்டாகும் கோபம், உலோபம் – தானும் அநுபவிக்காமல் பிறர் கொடாமலிருக்கும் குணம், மோகம் – மாதர் மீதுண்டாகுமிச்சை, மதம் – செருக்கு,…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.1-5 தொடர்ச்சி) 6. இன்னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாதே யெவ்வுயிரும் பொன்னேபோ லருள்பூத்துப் புறந்தந்து புகழ்பூத்தார் கொன்னாளுங் கலஞ்செலுத்திக் குடயவனப் பெருவணிகர் பொன்னாடிப் பொருணாடிப் புகலாகும் புகழ்நாடர். 7. நலக்குறையே வலக்குறையா நற்குணநற் செய்கைதமக் கிலக்கியமாய் வழிவருவோர்க் கிலக்கணமா யெனைத்தொன்றும் சொலக்குறையா மனைவாழ்க்கைத் துறைநின்று முறைவாழ்ந்தார் இலைக்குறையென் றெனைவளமு மினிதமைந்த வியனாடர். 8. பொருவிலே மெனப்போந்த பொருளிலரை யெள்ளுதலும் திருவிலே மெனக்குறைவு சிந்தையிடைக் கொள்ளுதலும் வெருவிலே யகன்றோட வேற்றுமையற் றேவாழ்ந்தார் கருவிலே திருவுடைய கவல்காணாக் கலைநாடார். …
ஐவருக்குச் செம்மொழி வேள் விருது – பாராட்டு விழா 2022, சென்னை
மும்பை இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு ஆகியன சார்பில் “செம்மொழி வேள்” விருது – பாராட்டு விழா 2022 தலைமை : முனைவர் மு.ஆறுமுகம் அமெரிக்காவின் ஆர்வர்டுபல்கலைக் கழகத் தமிழ்இருக்கை ஆட்சிக்குழு உறுப்பினர் வரவேற்புரை : மும்பை சு.குமணராசன் மும்பை இலெமுரியாஅறக்கட்டளை நிறுவனத்தலைவர் நிகழ்விடம் : சென்னை இராசாஅண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை இராசரத்தினம் கலையரங்கம் நாள் : வைகாசி 29, 2053 /12.6.2022 ஞாயிறு மாலை 5.30 மணி செம்மொழிவேள் விருது, பாராட்டுவிழா – 2022, நிகழ்ச்சிக்கு நிகழ்த்துகிறார். முதன்மை விருந்தினர்…
பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 2
(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 1 இன் தொடர்ச்சி) பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் அத்தியாயம் 1 தொடர்ச்சி தாழையூர் சத் சங்கத்தின் விசேடக் கூட்டம் அன்று விமரிசையாக நடைபெற்றது. உள்ளூர் வெளியூர்ப் பிராமணத் தலைவர்களும், சனாதனிகளான மற்ற வகுப்புப் பெரியவர்களும், இலட்சாதிகாரியும் வைதிகப் பிரியருமான சீரீமான் குழந்தைவேல் செட்டியாரைப் பாராட்டக் கூடினர். செட்டியார் மீது சத்சங்கத்தின் ஆசீர்வாதம் விழுந்ததற்குக் காரணம், அவர் சனாதனக் கோட்பாட்டைச் செயல் முறையிலே நிலை நாட்டத் தம் ஒரே மகனை வீட்டை விட்டு வெளியேற்றியது தான். மகன் பரமசாது, ஆனால்…
‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 3/4 – வெ.அரங்கராசன்
(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 2/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ நூலாய்வு 3/4 8.0.0.0.ஆய்வுப் போக்கு: ஓர் ஆய்வு / ஒப்பாய்வு நூலின் உள்ளடக்க ஆய்வுத் தலைப் புகள், உட்தலைப்புகள், இவ்விரண்டிற்கும் எண்ணிடல், பத்திகள் பிரிப்பு போன்றவை சிறப்புற அமைதல் வேண்டும். இவற்றிற்கு எல்லாம் ஒப்பாய்வுச் சான்று நூலாக இந்நூல் இலங்குகிறது. 8.2.0.0.உள்ளிருக்கும் ஒவ்வோர் ஆய்வுக் கட்டுரைக்கும் வரிசை எண் வழங்கல், 8.2.0.0.ஆய்வுக் கட்டுரைகளைக் கருத்து நிறைவுக்குத் தக்கபடி உட்தலைப்புகள் அமைத்தல், அவற்றிற்கு எண்ணிடல்,…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 51
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 50 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 19 குண்டலந் திகழ் தரு காதுடைக் குழகனைவண்டலம்பும் மலர்க் கொன்றைவான் மதியணிசெண்டலம்பும் விடைச் சேடனூர் ஏடகம்கண்டுகை தொழுதலும் கவலை நோய் அகலுமே. — திருஞானசம்பந்தர் “நீ மனம் வைத்தால் நிச்சயமாக இந்தக் காரியத்தைச் சாதிக்க முடியும் அரவிந்தன். அதற்கு இதுதான் சரியான சமயம். துணிந்து தான் இதில் இறங்க நினைக்கிறேன்…” இதற்கு அரவிந்தன் ஒரு பதிலும் சொல்லாமல் தமது முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருப்பதைக் கண்டதும் மீனாட்சிசுந்தரம் பேச்சை நிறுத்தினார். எழுந்திருந்து கைகளைப்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 129-132
(தமிழ்ச்சொல்லாக்கம் 124-128 தொடர்ச்சி) (சொல்மொழிமாற்றம்பெற்றசுவடுகளைஅடையாளங்காட்டும்சுரதாவின்அரியதொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம்பார்வையில் பட்டவற்றை) தேடித்தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 129. இரசாயன நூல் – பொருட்டிரிவு நூல் யாம் மதநூலைக் குறித்துச் சொல்லிய நியாயமே யிவற்றிற்கெல்லாம் பொருந்தும். நூலென்னும் பெயர்க்குச் சில வுளவே யன்றி முறை வழுவாது எளிதிற்றெளிவாக விளங்கும்படி யெழுதிய நூல்கள் அரிதினுமரிதா யிருக்கின்றனவே. தற்காலத்தாசிரியர் ஒருவர், இரசாயன நூல் என்பதனைப் பொருட்டிரிவு நூலெனப் புதுப்பெயரிட்டழைத்தனர். (ஞானபோதினி – Sept. 1902) இதழ் : யதார்த்த பாசுகரன்…
3. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 3. உறங்குகின்ற தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை (திருவள்ளுவர், திருக்குறள் 672) உரிய காலத்தில் செய்ய வேண்டியவற்றைக் காலந்தாழ்த்திச் செய்ய முற்படுவது, தனக்குரிய பணிகளைச் செய்யாமல் தட்டிக் கழிப்பது ஆகியவற்றிற்கு விருது தர வேண்டும் என்றால் தமிழ் வளர்ச்சித் துறைக்குத்தான் தர வேண்டும். எனவே, சிறப்பாகத் தமிழ்வளர்ச்சித்துறையைக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் முனைப்பிலுள்ள இத்துறையின்…
‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 2/4 – வெ.அரங்கராசன்
(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 1/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ – நூலாய்வு 2/4 4.3.0.0.கன்பூசியசின் (இ)லூன்யூவும் திருவள்ளுவரது திருக்குறளும்: 4.3.1.0. கன்பூசியசின் (இ)லூன்–யூ: சீனாவின் மறை நூலகிய (இ)லூன் யூ, உரை நடையில் அமைந்த நூல். இதில் 20 இயல்கள், 499 முதுமொழிகள் உள்ளன. இவற்றுள் 424 முதுமொழிகள் கன்பூசியசு உரைத்தவை; 32 முதுமொழிகள் கன்பூசியசு பற்றியவை; 43 முதுமொழிகள் பிறர் உரைத்தவை. 4.3.2.0.திருவள்ளுவரது திருக்குறள்: [பரிமேலழகர் வைப்பு முறை] 3…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1713-1719 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1712 இன் தொடர்ச்சி) 713. வானகத் தொல்லியல் Astroarcheaology 1714. வானக Astro – வான், விண், அசுரோ, சோதிடம், உடு எனக் கூறப்படுகின்றன. அசுரோ என்பது ஒலிபெயர்ப்புச் சொல். சோதிடம் தமிழ்ச்சொல்லல்ல. உடு என்பதற்கு விண்மீன் என்பது பொருள். எனவே, இந்த இடத்தில் உடு என்பது பயன்படுத்தப்பட வேண்டா. வானின் அகத்தே உள்ள பொருள்கள் என்னும் பொருளில் வானகம் எனலாம். முன்னொட்டுச் சொல்லிற்கு வானக – Astro என்று குறிக்கலாம். Astro 1715….
