தமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை
மார்கழி 13, 2049 / 28.12.2018 வெள்ளி மாலை 6.00 பண்டிதர் சவகர்லால் நேரு சாலை மும்பை 400 080 தலைமை: சு.குமணராசன் படத்திறப்பு: முனைவர் மு.கலைவேந்தன் இலெமூரியா அறக்கட்டளை தானே, மும்பை 400 606
அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை – இலக்குவனார் திருவள்ளுவன்
அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை கட்சியினரைக் குழப்புவதற்காகவோ அப்படிப்பட்ட எண்ணத்தை விதைக்கவோ அமமுகவும் அதிமுகவும் இணைய இருப்பதாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் அமமுக இணைந்தால் அதிலுள்ளவர்கள் கரைந்து காணாமல் போவார்கள். அமமுகவில் அதிமுக இணைவது என்பது தாய்க்கழகத்திற்கு இழுக்கு. இணைந்தாலும் விரும்பா மற்றோர் அணி உருவாகலாம். ஆனால் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். சசிகலாவையே பொதுச்செயலராக ஏற்பதாக இருந்தால் ஒரே கட்சி என்ற பெயர் கிட்டும். பாசகவின் அதிமுக அழிப்பு முயற்சிகள் தோல்வியுற்றதாலும் பொதுத்தேர்தல்களில் மண்ணைக் கெளவி வருவதாலும் தன் அதிகார…
விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம்
மார்கழி 12, 2049 / 27.12.2018 வியாழன் மாலை 5.45 கிளை நூலகம், 7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து அசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு) விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை :- முனைவர் வ வே சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய
அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!
அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்! தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றி வந்த மேனாள் மனோன்மணியப்பல்கலைக்கழத் துண்வேந்தர் முனைவர் க.ப.அறவாணன், இன்று(மார்கழி 08, 2049 / 23.12.2018) காலை இயற்கை எய்தினார். நீரிழிவு நோயால் இடக்கால் பாதிப்புற்று நடக்க இயலாமல் இருந்தவர் நலம் பெற்று, 21 நாளில் நநன்றாக நடப்பார் என மருத்துவர் தந்த நம்பிக்கையில் குடும்பத்தினருக்கு உற்சாகம் தந்திருந்தார். ஆனால், நேற்று மாலை எதிர்பாராமல் மாரடைப்பு நேர்ந்து மருத்துமனையில் சேர்த்து இன்று வைகறைப்பொழுதில் 5.15 மணிக்கு அன்பர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் மரணமுற்றார்….
14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா
மார்கழி 10, 2049 / திசம்பர்25, 2018 முதல் மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018 வரை எசுஆர்எம் பல்கலைக்கழகக் கலையரங்கம்அ( 3ஆவது தளம் 1, சவகர்லால் நேரு சாலை, 100 அடி சாலை, வடபழனி, சென்னை 26 14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா இசைக்கடல் விருது பெறுநர்:திரு ஏ.கே.சி.நடராசன் சிறப்பு நிகழ்ச்சி மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018 மாலை 5.00 முதல் 7.00 வரை எசுஆர்எம் பொதுப்பள்ளி, கூடுவாஞ்சேரி இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை…
குவிகம் இல்லம்: அளவளாவல்: கிரிசா இராகவன்
மார்கழி 08, 2049 / திசம்பர் 23, 2018 பிற்பகல் 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல் கிரிசா இராகவன் தொடர்பிற்கு: 9791069435. 8939604745
பிரபஞ்சன் காலமானார்
எழுத்தாளரும் திறனாய்வாளரும் விருதாளருமான பிரபஞ்சன் இன்று(மார்கழி 08, 2049 / திசம்பர் 21, 2018) காலமானார். எழுத்தாளர் பிரபஞ்சன் சித்திரை 15, 1976 / ஏப்பிரல் 27, 1945 ஆம் நாளன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தைக் கல்லூரியில் தமிழ் வித்துவான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் இதழுலகில் நுழைந்தார். குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவரது ‘என்ன உலகமடா’ என்னும் முதல் சிறுகதை…
பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்
பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை தமிழ் நாட்டின் கடேலார மாவட்டங்களில் கசா(கஜா) புயல் கடுமையாக வீசி மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது. சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பாதிப்பைக் குறைத்துள்ளதாகவும் முழு வீச்சில் மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு கூறி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓரளவு பாராட்டினாலும், உரிய மறுவாழ்வுப் பணிகள் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. பேரிடர்கள் என்பது இன்று நேற்று வருவன அல்ல. காலந்தோறும் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள்தான். இடர்கள் வரும்பொழுது எவ்வெவ்வாறு தடுக்க வேண்டும், அவற்றிலிருந்து எவ்வாறு…
சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! – அமைதி ஆனந்தம் மடல்
சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! வல்லுநர் குழு அமைக்க வேண்டுகோள். ஆ. இரா.அமைதி ஆனந்தம் ஆவணிப்பூர் இராமசாமி <aa384485@gmail.com பெறுநர் இந்தியத் தலைமை அமைச்சர், இந்திய அரசு. படி : இந்தியக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு. இந்திய அமைச்சர், மனித வள மேம்பாடு, இந்திய அரசு. இந்திய அமைச்சர், அறிவியல், தொழில்நுட்பம், இந்திய அரசு. இந்திய அமைச்சர், தகவல் தொழில்நுட்பம், இந்திய அரசு. முதலமைச்சர்கள், இந்தியா. ஐயா, உளறல் அல்ல; உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை;…
இனமானப் பேராசிரியர் வாழியவே!
இனமானப் பேராசிரியர் வாழியவே! பெரியார் நெறியில் பிறழாப் பெற்றியர் அண்ணா வழியில் அயரா உழைப்பினர் கலைஞர் போற்றிய புலமைச் சிறப்பினர் திராவிடர் இயக்கத் திலகமாய் விளங்கி அராவிடம் அனைய ஆரியம் கடிவோர் உலைவிலா உழைப்பால் ஊக்க ஊற்று மலையினும் திண்ணிய நிலையினர் துலைநாப் போன்ற நடுநிலை நெஞ்சினர் வாய்மை வகுத்த வள்ளுவம் போற்றித் தூய்மை துணிவு நேர்மை துலங்கித் தமிழினம் தழைத்திடத் தளரா(து) உழைத்திடும் பேராசிரியப் பெருந்தகை வாழ்க! உறவெலாம் சிறக்க கிளைஞர் தழைக்க குடிவழி ஓங்குக உயர்வுடன் பொலிக நலமிகு வாழ்வும்…
அகநானூற்றில் ஊர்கள் :7/7 – தி. இராதா
(அகநானூற்றில் ஊர்கள் 6/7 இன் தொடர்ச்சி அகநானூற்றில் ஊர்கள் -7/7 வல்லம் மழைபோல் செரியும் அம்பனையும், மேகம் போன்ற தோற்கிடுகினையும் உடைய சோழரது அரண் கொண்டது வல்லம் எனும் ஊராகும். “……………..சோழர் வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புரமிளை” (அகநானூறு 336) “நெடுங்கதி நெல்லின் வல்லம்” (அகநானூறு 356) நெல்வளம் மிக்க ஊர் வல்லம் என்பதை மேற்கண்ட அடிகள் விளக்குகின்றன. வாகை வாகை மரம் நிற்றலால் வாகைப் பெருந்துறை எனப்பட்டது. வாகைப்போர்…
முன்னோர்கள்: இலக்குவனார், தமிழன் தொலைக்காட்சி
பேரா.சி.இலக்குவனார் குறித்த இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி தமிழன் தொலைக்காட்சி முன்னோர்கள் வரிசையில் நாள் கார்த்திகை 26, 2049 / 12.12.2018
