மகளிர் கூட்டம் – மதுவை ஒழிக்கும் மாநாட்டில் பங்கேற்பீர்!

மதுவை ஒழிக்கும் மாநாட்டில் பங்கேற்பீர் மகளிர் கூட்டம்- மாசி 02, 2017/14.2.2016 கோ.க.மணி வேண்டுகோள்! ஆய்வுக் கருத்து தமிழ்நாட்டின் மொத்தக் கைம்பெண்கள் 22 , 33,000பேர். இதில் 90% மது குடிகாரர் இறந்ததால் விதவை. தமிழ்நாட்டில் சாராயம், பீர், பிராந்தி போன்ற மதுவின் கொடுமை சொல்லி மாளாது. மதுவினால் 60 வகையான நோய்கள் வருகின்றன. மது உடல் நலத்தைக் கெடுக்கும். உயிரைப் பறிக்கும். குடும்பத்தை வீணாக்கும் . குடும்பப் பொருளாதாரதைப் பாழாக்கும். மது நாட்டுக்கு கேடு, வீட்டுக்கு கேடு, உயிருக்கு கேடு. மருத்துவர்  அன்புமணி…

புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “திருக்குறள் 2016 விருது”

திருக்குறள் அறிஞர் புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “திருக்குறள் 2016 விருது”   புரோபசு சங்கம் (PROBUS CLUB OF CHENNAI) கொண்டாடிய பொங்கல் விழா   சுழற் சங்கத்தின் (ROTARY CLUB) ஆதரவில் இயங்கும் புரோபசு சங்கம் அரசுப் பணியினின்றும் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள், மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் (IAS OFFICERS) முதலான 350-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களைத் தன்பால் கொண்ட ஒரு மாபெரும் சங்கம். 1992-இல் தொடங்கப்பெற்ற இச்சங்கம் உலகளாவிய நிலையில் பாங்கான பல தொண்டுகளை ஆற்றி வருகின்றது. ஆதரவற்ற…

திருவள்ளுவர் சீர்திருத்தப் பெரியார் – சி.இலக்குவனார்

திருவள்ளுவர் சீர்திருத்தப் பெரியார்  “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்றார் பாரதியார். வள்ளுவர் தோன்றியதால் நம் தமிழ்நாட்டின் பெருமை உயர்ந்தது. உலகப் பெரும்புலவராம் திருவள்ளுவர் தோன்றிய நாடு என உலகோர் நம் தமிழ்நாட்டைப் போற்றுகின்றனர்.   வள்ளுவர் சங்கக் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் தலைசிறந்தவர். இவர் ஏனைய புலவர்கள் சென்ற வழியில் செல்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்களின்று மாறுபட்டும் சென்றுள்ளார். ஏனைய புலவர்கள் உலக வாழ்க்கையை உள்ளதை உள்ளவாறு சொல்லோவியப்படுத்தினர். வள்ளுவர் அவ்வாழ்க்கையைத் திருத்தியமைக்க முயன்றுள்ளார். மற்றைப் புலவர்கள் கள்ளுண்டலையும்,…

தேவாரம் ஒப்பித்தல் போட்டி: வென்றவர்களுக்குப் பாராட்டு விழா

தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  பள்ளியில் தேவாரம் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   தேவாரம் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களில்  6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள  பிரிவில்  8 ஆம் வகுப்பு  மாணவி  இராசேசுவரி    முதல்  பரிசையும், 7 ஆம் வகுப்பு மாணவி  தனலெட்சுமி,  6 ஆம் வகுப்பு   மாணவர் இரஞ்சித்து  ஆகிய…

அபுதாபியில் சேலம் மேனாள் மாணவர்களின் ஆண்டு விழா -2016

சேலம்  அரசு பொறியியல் கல்லூரி மேனாள் மாணவர்களின்  ஆண்டு விழா -2016   சேலம்  அரசு பொறியியல் கல்லூரி மேனாள் மாணவர்களின்  ஆண்டு விழா அபு தாபி பூட்லண்ட்சு  உணவகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை சபீர் வரவேற்றார்.  நிபல் சலீமின் குரான் குறிப்போடும்  இளைய பழமலையின்  முழக்கத்துடனும் நிகழ்ச்சி தொடங்கியது . குழுமத்தின் தலைவர் பாசுகர்  கடந்த ஆண்டு நிகழ்வுகளையும் வருங்காலத் திட்டங்களையும் விவரித்தார். குழந்தைகளின் நடனம், பாடல்கள் அனைவரையும் மனம் குளிர்வித்தது. சிறுவன் துகிலன் மோகன்  எவ்வாறு நவீன விளையாட்டுக்கருவிகள் அவர்களின் குழத்தைப்…

சிறுவர்கள் செய்தார்கள்! வென்றார்கள்!

செய்தார்கள்! வென்றார்கள்!  சுட்டி விகடன்  கவின்கலைச் சான்றிதழ்களைப் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வழங்கிப் பாராட்டுதல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் சார்பாக 2015- திசம்பர்   மாதம் நடைபெற்ற  கவின்கலை(FA) செயல் திட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சுட்டி விகடனின் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் நடத்திய…

வைரத்தமிழர் க.தமிழமல்லன் வாழியவே!

  உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாடு புதுச்சேரியில்தி.பி.2047, தைத்திங்கள்(சுறவத்திங்கள்) 2, 3 (16,17.01.2016)ஆகிய நாள்களில் வேல்.சொக்கநாதன் திருமணநிலையத்தில் நடைபெற்றது.   அதில் முனைவர் க.தமிழமல்லனுக்கு வைரத்தமிழர்  என்னும் விருது வழங்கப்பெற்றது.    படத்தில் அவ்விருதை புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி  முனைவர் க.தமிழமல்லனுக்கு  வழங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.   படத்தில் பாரிவேந்தர், இராதாகிருட்டிணன் நா.ம.உ,சேனாதிராசா, நா.ம.உ (இலங்கை)ஆகியோரும் இருக்கின்றனர்.

தேசிய இளைஞர் நாள் விழா, தேவகோட்டை

தேசிய இளைஞர் நாள் விழா பாவை விழா ஒப்பித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்குப் பாராட்டு.   தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு அரசு உதவி பெறும் பள்ளியின் முதல் வகுப்பு மாணவி மாவட்ட அளவில் முதலிடம்  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் நாள் விழா நடைபெற்றது. இதனில் பாவை விழா ஒப்பித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற முதல் வகுப்பு மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.    விழாவிற்கு வந்தவர்களை மாணவி சுமித்ரா…

மக்கள்கல்வி பறைசாற்றம்

  மக்கள்கல்வி பறைசாற்றம் பிப்பிரவரி கடைசி வாரத்தில் சென்னையில் ஊடகவியலாளர் மன்றத்தில் வெளியிடப்பட உள்ளது. இதில் முன்வைக்கவேண்டிய கல்விக் கோரிக்கைகளை பிப்பிரவரி 10 ஆம் நாளுக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு அனைவரையும் கோருகிறோம். தொடர்புக்கு: 9965128135, 9487995084 மின்னஞ்சல்: kalvimk@gmail.com , moorthy.teach@gmail.com கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு

ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது! – பெரியார்

ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது!   ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவையாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும். –தந்தை பெரியார் ஈ. வே. இராமசாமி