வான் புகழ் தமிழ் நாட்டின் புத்தாண்டு வாழ்த்துகள்! – உருத்திரா

  உழவன் என்றொரு உயர்ந்ததோர் தமிழன் கிழக்கில் உதித்த கதிரையும் ஒளி பாய்ச்சி நாற்று நட்டு வழி காட்டி நன்று வைத்தான். விசும்பின் துளி கண்டு பசும்பயிர் வளங்கள் கண்டான். இஞ்சியும் மஞ்சளும் கரும்பும் சங்கத்தமிழ்ச் சுவைகள் ஆகி தமிழ்ப் புத்தாண்டு  மலரும் இன்று. பொங்கல் பொலிக! பொங்கலோ பொங்கல்! வள்ளுவனை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் புத்தாண்டு இன்று. எல்லோருக்கும் என் இதயம் கனிந்த‌ இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்! உருத்திரா

தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே! : குடிஅரசு – தலையங்கம்

தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே!   உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்!! மழையென்றும் வெயில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும், பாம்புகளுக்கும் பச்சை இரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற் குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்போடு, ஆனந்த பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்?   இரட்டைப்…

நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலிட்டு வாழியவே! – மு.பொன்னவைக்கோ.

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்! பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலென பொங்கலிட்டு வாழியவே!  முனைவர் மு.பொன்னவைக்கோ

வளந்தரும் வாழ்த்து

வளந்தரும் வாழ்த்து சுண்ணச் சுவர்கள் மின்னலிட வண்ணக் கோலம் பலவகையாக மாவிலைத் தோரணம் காற்றாட மல்லிகைச் சரங்கள் மணந்தாட கொஞ்சும் புத்தாடை குதுகலமாக மஞ்சள் இஞ்சி மங்கலமாக பச்சரிசி பொங்கல் பளபளக்க கட்டிக் கரும்பு நாவினிக்க தந்தையும் தாயும் வாழ்த்திட சிந்தைசீர் மகன்மகள் வணங்கிட இல்ல மகளிர் யாவருமே விளக்கேற்றி வருகதிரைத் துதிக்க உற்றார் உறவினர் ஒன்றுகூடி பற்றுடன் பொங்கலோ பொங்கலென தமிழர் திருநாளில் குடும்பமுடன் தழைத்து வாழ்கநீர் பல்லாண்டே. . . . தமிழகத்தாய்க்குழு . . . பொன் தங்கவேலன்

ஏறுதழுவல் அன்றும் இன்றும் – சுப.வேல்முருகன்

ஏறுதழுவல் அன்றும் இன்றும்   பழந்தமிழர் வாழ்க்கை காதலையும் வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இக்கருத்திற்கேற்ப பழந்தமிழகத்தில் நடைபெற்ற வீர விளையாட்டுகளுள் ஏறுதழுவுதலும் ஒன்றாக அமைந்துள்ளது; இவ்விளையாட்டை மேற்கொள்ளும் ஆடவரின் வீரத்தையும், காதலையும் புலப்படுத்துகிறது.   கட்டின்றித் திரியும் வலிய காளையினை ஒரு வீரன் அடக்கும் செயல் ஏறு தழுவல் என்று கூறப்படுகிறது. வீறுமிக்க காளையினை வலியடக்கி அதனை அகப்படுத்துதல் என்னும் கருத்தில் இதனை ‘ஏறுகோடல்’ என்றும் குறிப்பிடுகின்றனர். ஏற்றினை அடக்கும் போது அதனால் ஏற்படும் இடர்களுக்கு அஞ்சாது அதன் மீது பாய்ந்தேறி அடக்குவதினால் இச்செயல்…

தொழூஉப்புகுதல்(சல்லிகட்டு) இலக்கியத்தில் சான்று – சான்றோர் மெய்ம்மறை

முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி நறையோடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல்வலி மரா அமும் முறையுளிப் பரா அய்ப் பாய்ந்தனர் தொழூஉ (முல்லைக்கலி 101:10-14) இரும் புலித் தொகுதியும் பெருங் களிற்று இனமும் மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர்! விட்டாங்கே மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழப் பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும்…

நம்வாழ்வு விடிந்திடட்டும் ! – எம்.செயராமன்

      வெள்ளம்  வடிந்தோட வேதனையும் விரைந்தோட உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும் நல்லவை நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும் ! இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல் முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று உயற்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம் ! நீர்பெருகி நின்றதனால் நீரருந்த முடியாமல் ஊர்மக்கள் யாவருமே உயிர்துடித்து நின்றார்கள் நீர்வற்றிப் போனாலும் நிம்மதியைத் தேடுமவர் சீர்பெற்று வாழ்வதற்கு இப்பொங்கல் உதவிடட்டும் ! மார்கழி மாதமது மனங்குளிர வைத்தாலும் மாமழையும் பேரழிவும் மனம்வருந்தச் செய்ததுவே…

தமிழ்ப்பொங்கல் – ப.கண்ணன்சேகர்

தமிழ்ப்பொங்கல் – ப.கண்ணன்சேகர் மண்ணில் பசுமை நிலவிட மணக்கும் தமிழால் குலவிட மாநிலம் மாறிட நல்லது! நல்லது நினைத்து வேண்டிட நாளைய உலகை தூண்டிட நன்மை செய்வாய் இக்கணம்! இக்கணம் எழுதும் வரிகளே இயம்பும் வாழ்வின் நெறிகளாய் இனிமைக் காணச் செய்திடும்! செய்திடும் ஒற்றுமை நட்பாக சேர்ந்தே வாழ்வீர் வளமாக செழித்தே ஓங்கும் வையகம்! வையகம் முழுமை தமிழாக வைத்திடு தாய்மொழி அமுதாக வந்திடும் தமிழ்தைப் பொங்கல்! பொங்கல் இல்லா நல்மனமே புழுங்கல் இல்லா ஒருகுணமே போற்றும் தமிழர் பன்பாடு! பன்பாடு காக்கும் நன்நாளே…

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! – பாவலர் கருமலைத்தமிழாழன்

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே ! சாதிமணி உலையிலிட்டுச் சதிவெறியாம் பாலையூற்றி மோதிபகை வளர்வெல்லம் மொத்தமுமாய் அதிலிட்டு வீதிகளில் குருதிவாடை வீசிடவே மனக்குடத்தில் ஆதிக்கம் பொங்வைத்தே ஆடுவதா பொங்கலிங்கே ! காடுகளில் உழைப்பவரை கழனிசேற்றில் புரள்பவரை ஆடுகளின் மந்தையாக அடித்தட்டில் தாழ்ந்தவராய் மாடுகளைப் போல்விரட்டி மனிதகுலம் தலைகுனிய கேடுகளை விளைவிக்கும் கேளிக்கையா காணும்பொங்கல் ! தெருவெல்லாம் அன்பென்னும் தோரணங்கள் கட்டிவைப்போம் கரும்புசுவை மனமேற்றிக்…

பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி

பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி இற்றைக்குப் பொங்கல்நாள் ஏற்றமிகு திருநாளே எழுந்தே வாநீ! கற்கின்ற வேற்றுமொழி கரிப்பானை அதன்கழுத்தில் கட்டி வைக்கும் சுற்றிமுடி நூல்சோம்பல் தோயுமில வயம்மஞ்சள் தூய பால்தான் எற்றைக்கும் இரண்டகத்தால் இனமிழக்கும் குருதியதை எடுத்துள் ஊற்று! ஏனலுறு அரிசியென ஏற்றிருக்கும் அடிமைநிலை இடுபா னைக்குள்! மானமெனும் விறகெரித்து மலிந்தகடை அரசுதரும் மதுக்கு டித்தே கூனலுற மயக்கத்தே கூவிடுவாய் தமிழ்மகனே குரைநா யாக வானத்துங் கேட்டிடவே வல்லொலியில் ‘பொங்கலோ பொங்கல்’ என்றே!  – தமிழ நம்பி