கலித்தொகை போன்ற ‘களித்தொகை’ – உருத்திரா

வேம்பு நனை ஈர்ங்கண்     வேம்பு நனை ஈர்ங்கண் அலவன் ஆர்ப்ப தூம்பு கொள் நறவின் மணிச்சிறைத்  தும்பி அயல் சினை சேக்கும் அரிமணற் சேர்ப்ப! ஓங்கு பூ வேழத்து உளை அலரி செறித்த விரி இமைப் பூமயிர் அவள் உண்கண் வீழ்ந்து மல்லல் களிற்று மருப்பு மாய்ந்தன்ன புண்பட்டனை என்னை.அறிகுவை இஃது அவள் பால் பட்ட காதல் மாத்திறம் . அறிகுவை!அறிகுவை! மற்று எற்றுக்கு நின் வெண்முத்துக்குடையும் ஆனை நிரையும்? அவள் விழிநாடு வெல்லுதல் இயலுமோ வளை நரல் பௌவம் கலன்…

கியூபெக்கு மாகாணத் தாய்மொழிப்பற்று வெல்க!

 பிரெஞ்சு மொழிப் பயன்பாட்டை  மிகுவிக்க ஆங்கில அறிவிப்புப் பலகைகளை நீக்கச் சொன்ன கனடா அரசு ஒட்டாவா : கனடா நாட்டின், கியூபெக்கு மாகாண மருத்துவமனைகளில் உள்ள ஆங்கில அறிவிப்பு பலகைகளை நீக்குமாறு  அண்மையில் இந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கியூபெக்கு மாகாணத்தின்  ஆட்சி மொழி பிரெஞ்சு.  ஆங்கிலமும் அதிகார முறை மொழியாக உள்ளது.  எனினும்   பிரெஞ்சை பரப்பும் விதமாக இப்பகுதியிலுள்ள காசுபே நகரில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை நீக்க உத்தரவிட்டுள்ளது. ஐம்பது  விழுக்காட்டிற்கும் மிகுதியாக ஆங்கிலம் பேசுவோர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே பிரெஞ்சு மொழிப்…

மறைமலையம் – மறைமலை அடிகள் நூல்கள் முன்பதிவுத் திட்டம்

மறைமலை அடிகள் நூல்கள் தொகுப்பு : முதுமுனைவர் இரா.இளங்குமரன் பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம்

திருக்குறள் அறுசொல் உரை – 086. இகல்: வெ. அரங்கராசன்

(அதிகாரம்  085. புல்அறிவு ஆண்மை தொடர்ச்சி) 02. பொருள் பால்     12. துன்ப இயல் அதிகாரம்   086. இகல் வெறுப்பு, பகைமை, பேரிழப்பு துயரம்எனப் பெருக்கும் மனமாறுபாடு. இகல்என்ப .எல்லா உயிர்க்கும், பகல்என்னும்      பண்(பு)இன்மை பாரிக்கும் நோய்.       பிரிவுஎனும் தீப்பண்பை வளர்க்கும்        கொடிய நோய்தான் மனமாறுபாடு.   பகல்கருதிப் பற்றா செயினும், இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.      பிளவால் விரும்பாதன செய்வார்க்கும்,        மாறுபாட்டால், தீங்கு செய்யாதே.     இகல்என்னும் எவ்வநோய் நீக்கின், தவல்இல்லாத்…

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 2/3

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு  2/3   தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் மலையாள நாடு, தெலுங்கு நாடு எனப் பிறவாகப் பறிபோனமைபோல் கன்னடநாடாகப்பறிபோனதையும் அகநானூற்றுப் பாடல் 115 இல் வரும் எருமை குடநாடு என்பது குறித்த பின்வரும் விளக்கத்தின் மூலம் உணர்த்துகிறார். எருமை: ‘எருமை குடநாடு’ என்பதனால், குடநாட்டை ஆண்ட ஒருவன் எருமை என்ற பெயரைக் கொண்டுள்ளதாக அறிகின்றோம். இன்று யாரேனும் ஒருவரை இகழ்ச்சியாகக் கூற விரும்பின் ‘எருமை’ என்று கூறுகின்றோம். ஆதலால் ஒருவர்க்கு ‘எருமை’ என்ற பெயர் இடப்பட்டிருந்தது என்றால் வியப்பாகத்தான் இருக்கும்….

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 06: ம. இராமச்சந்திரன்

     (அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6   1959ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிய வருமாறு அழைப்புக் கிடைத்தவுடன் மதுரை சென்றார். கலைத்தந்தை தியாகராசச் செட்டியாரின் அரவணைப்பில் 1965 தொடக்கம் வரை மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தார். புலவர் விழா நடத்தி, மாணவர்களிடம் தமிழ் உணர்வையும் தமிழ்ப்பற்றையும் வளர்த்தார். தொல்காப்பிய ஆராய்ச்சி’16 என்னும் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலையும் பழந்தமிழ்’17 என்னும் நூலையும் எழுதினார்.   மேலும் ‘குறள்நெறி’ என்னும் பெயரில்…

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2   ‘‘தமிழ் என்பது தூய தமிழ்ச் சொல்லே. 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மொழிக்கு ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழியால் பெயர் இடப்பட்டது எனச் சொல்வது ஏற்கத்தக்கதா’’ என வினவுகிறார். ஐந்தெழுத்தால் ஒரு பாடையாகுமா என்று சொல்வோருக்கு ‘‘8 எழுத்தால் சமசுகிருதததை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா? 2 எழுத்தால் ஆங்கிலத்தை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா’’ என விளக்கித் தமிழ், தனித்தியங்கும் மூல மொழி எனத் தெளிவுபடுத்துகிறார். சிலர் தமிழ்…

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே பழந்தமிழர் பண்பாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

      ‘கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு’ என்று பாரதி வந்துதான்  கற்புநிலையை இருவருக்கும் பொதுவாக வைத்தார் என்று தவறாகக் கூறுபவர்கள் பலர் உள்ளனர். பிறன்மனை விழையாமையை நம் தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன என்றால் ஆடவர் தன் வாழ்க்கைத் துணையன்றி வேறு பெண்ணை விரும்பக் கூடாது என்று ஆடவர் கற்பை வலியுறுத்தியுள்ளார்கள் என்றுதானே பொருள். போர் இறப்புகளால் ஆண்கள் எண்ணிக்கை குறைந்தபொழுது சில வீரர்கள் இருமணம் புரிந்திருக்கலாம். ஆட்சிப் பரப்பைப் பெருக்குவதற்காகச் சில மன்னர்கள் அயல்நாட்டு அரசன் மகளை மணம் புரிந்திருக்கலாம். இலக்கிய மரபிலே…

தமிழ்மொ ழியால் ஓதி நீ தொண்டு செய்! – நாமக்கல் கவிஞர்

3,4 / 6 இளந்தமிழனுக்கு அன்பி னோடும் அறிவு சேர்ந்த ஆண்மை வேண்டும் நாட்டிலே; அச்ச மற்ற தூய வாழ்வின் ஆற்றல் வேண்டும் வீட்டிலே. இன்ப மான வார்த்தை பேசி ஏழை மக்கள் யாவரும் எம்மு டன்பிறந்த பேர்கள் என்ற எண்ணம் வேண்டும். துன்ப மான கோடி கோடி சூழ்ந்து விட்ட போதிலும் சோறு தின்ன மானம் விற்கும் துச்ச வாழ்வு தொட்டிடோம்! என்ப தான நீதி யாவும் இந்த நாட்டில் எங்கணும் இளந்த மிழா! என்றும் நின்றே ஏடெ டுத்துப் பாடுவாய்!       3  …

இனிதே இலக்கியம் – 10: முதல் நாவை யசைத்த மொழி – அ.வரத நஞ்சையப்பர்

 10 தமிழன்னையை வாழ்த்துவோம்! நண்ணுமிளமைப் பருவத்தி லேமுதல் நாவை யசைத்த மொழி- எங்கள் கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக் கருத்தோ டிசைந்த மொழி- எந்தம் எண்ணத்தைக் கூறற்கு நானென்று முன்வந் திருந்து திருந்து மொழி- வேற்று வண்ணப் பிறமொழி கற்க வுதவிய வண்மைபொ ருந்தும் மொழி- அதனால் எங்கள் தமிழன்னை வாழிய வாழிய வென்றடி வாழ்த்துவமே! தாராமங்கலம் புலவர் அ. வரதநஞ்சைய(பிள்ளை) அவர்கள் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ நூலில்   வரும் தமிழ் வாழ்த்துப் பாடல்.    “மழலைப்பருவத்தில் முதல் முதலில் நாவை அசைத்துப் பிறந்த…

தகவலாற்றுப்படை : தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்”

தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின்) தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்”   என்னும் தலைப்பில்   எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் உரையாற்றுகிறார்.   நாள்   : ஐப்பசி 27, 2046 / 13.11.2015, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.30 மணி இடம் : கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம்     திரு. கரு.ஆறுமுகத்தமிழன்  ‘திருமூலரின் மெய்யியலும் சமயமும்-ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னைப் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; எழுத்தாளர்;…