அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது: செயலலிதா

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது: தமிழ்நாட்டு முதல்வர் செ.செயலலிதா   “தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) அன்று ஒருமனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க நடுவண் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துரைக்கிறது.   ஒட்டுமொத்தத் தமிழினத்தின் குறிக்கோளுக்கும், இலங்கை வடக்கு மாகாண அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், இலங்கை வாழ்தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டுப் போர்…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13 : இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12 தொடர்ச்சி) 13 அட்டவணை – 01 [+ குறியீடு மட்டும் இருப்பின் சொல் தேடல் இருப்பதைக் குறிக்கும். பக்க எண் +என்றால் பக்க எண் தேடல் இருப்பதையும் பாடல் + அல்லது பா+ என்றால் பாடல் எண் தேடல் இருப்பதையும் அதிகாரம் + என்றால் அதிகார எண் தேடலையும் குறிக்கும். பா எண் என்பது பாடல் அல்லது நூற்பா எண்ணைக் குறிக்கும். அட்டவணைப் பத்தி எண் 2 இல் குறிப்பிடப்படும் சொல் என்பது முகப்புப்பக்க அட்டவணையில் அமையும்…

ஐ.நா.வில் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கத் தீர்மான நிறைவேற்றத்தால் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ   “இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்களப் பேரினச்சார்பு அரசை அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு, அநீதிக்கு மகுடம் சூட்டப்பட்டு விட்டது. ஐ.நா-வின் வரலாற்றிலேயே ௨௦௧௫ (2015) அக்டோபர் ௧ (1) ஆம் நாள் களங்கத்தைச் சுமக்கும் கருப்பு நாளாகிவிட்டது.   ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டில் கொலைகாரச் சிங்கள…

பிரிக்கும் ‘நான்’, பிணைக்கும் ‘நாம்’ – இரா.ந.செயராமன் ஆனந்தி

நான்   நான் என்ற சொல் நாவினில் விதைக்காதீர் ! நாம் என்ற சொல் நாவினில் விதையுங்கள் ! நான் என்ற பாரம் தலைக்கு ஏற்றினால் வீழ்வது நாம் இல்லை ‘நீ’ என்பதை உலகம் இன்னும் உணரவில்லை ! நான் என்ற சொல் உதட்டைப் பிரிக்கும் பகைக்காரன் ! நாம் என்ற சொல் உதட்டை இணைக்கும் ஒற்றுமைக்காரன் ! நான் என்றால் மனிதர்களின் ஆங்காரம்! நாம் என்றால் மனிதன் அறிவின் அலங்காரம் நான் என்றால் உள்ளத்தின் அடையாளம் ! நாம்  என்றால் ஒற்றுமையின் சின்னம்…

வள்ளலடி வணங்குவோம்! – பாம்பாட்டிச் சித்தர்

வள்ளலடி வணங்குவோம்! பொன்னி லொளிபோல வெங்கும் பூரணமதாய்ப் பூவின் மணம்போலத் தங்கும் பொற்புடையதாய் மன்னும் பலவுயிர்களில் மன்னி பொருந்தும் வள்ளலடி வணங்கி நின் றாடு பாம்பே. (3) நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம் நடுவன் வரும்பொழுது நாடிவருமோ கூடுபோனபின் பலவற்றாற் கொள்பய னென்னோ கூத்தன் பதங்குறித்துநின் றாடாய்பாம்பே. (40) மாடகூட மாளிகைகள் வண்ணமண்டபம் மதிழ் சூழ்ந்த வரண்மனை மற்றும் உள்ளவை கூடவரா தென்றவந்தக் கொள்கையறிந்தோர் குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே. (43)  – பாம்பாட்டிச் சித்தர்

வள்ளலார் நூல்கள் பதிவிறக்கங்களுக்குக் கட்டணமில்லா இணைப்புகள்

  வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் நூல்கள், அவர் பதிப்பித்த நூல்கள், அவர் நூல்களுக்கான பிறர் உரைகள், அவர் தொடர்பான நூல்களை இணைய வழியில் படிப்பதற்குப் பின்வரும் இணைப்புகளில் காண்க   சீவகாருண்ய ஒழுக்கம் சீவகாருண்ய ஒழுக்கம் – 1 சீவகாருண்ய ஒழுக்கம் – 2 சீவகாருண்ய ஒழுக்கம் – 3 உரைநடை திருவருண் மெய்ம்மொழி அருள்நெறி பேருபதேசம் நித்திய கரும விதி உபதேசக் குறிப்புகள் மனு முறைகண்ட வாசகம் தொண்டமண்டல சதகம் வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை “உலகெலாம்” என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் புத்தகங்கள்…

வலைமச் சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  2 வலைமம் – Network வலைமச் சொற்களில் சில வருமாறு : – தே.வா.வா.ப.வலைமம் நாசா என்பது  National Aeronautics and Space Administration  என்பதன் ஆங்கிலத்தலைப்பெழுத்துச் சொல்லாகும். தமிழில் தேசிய வானூர்தி– வான்வெளி பணியாட்சி  எனலாம். சுருக்கமாகத் தே.வா.வா.ப. எனலாம். ஆதலின்தே.வா.வா.ப.வலைமம். NASA communications network (nascom) முனைப்பு மின் வலைமம் Active electric network அகப்பரப்பு வலைமம்  / அ.ப.வ Local Area Network / LAN அகல்பரப்பு வலைமம் / அக.ப.வ Wide Area Network / WAN அகலக்கற்றைவலைமம்…

எல்லாம் தமிழ்நிலமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

எல்லாம் தமிழ்நிலமே! குறுஞ்செய்திகள் சில.   புறநானூற்று 6ஆம் 17ஆம் பாடல்களில் தமிழகத்தின் எல்லை வடக்கே பனிமலையாம் இமயமலை என்றும் தெற்கே குமரி என்றும் குறிப்பிடுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் தமிழ்நிலமே என்னும் பொழுது இதன் ஒரு பகுதியாகிய கருநாடக மாநிலமும் தமிழ் நிலமே.   ஊர் என்ற பின்னொட்டும் தமிழுக்குரியதே. எனவே, மைசூர், பெங்களூர், மங்களூர், பிசப்பூர், சிக்மகளூர் எனக் கருநாடகத்தில் அமைந்துள்ள பல ஊர்களும் அவை தமிழ்ப்பகுதியாக விளங்கியமைக்குச் சான்றாகும்.   எருமையூர் எனத் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர் வாழ்ந்த…

இலக்குவனார் கருத்தரங்க நூல் அறிமுகம் – ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்

‘பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்’ நூலறிமுக விழா   பரபரப்பு நிறைந்த சென்னை பாரிமுனைப்பகுதியில் உயர்நீதி மன்றத்தின் எதிரே உள்ள 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ. கட்டடித்தினுள்     அமைந்துள்ள “ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கம் தமிழறிஞர்கள், தமிழ்ப் போராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என நிறைந்து காணப்பட்டது.   காரணம், தமிழ்ப் பேரறிஞர், திருக்குறள், தொல்காப்பியங்களின்   உரைநடை நூல்கள் படைத்தவர், மொழி பெயர்ப்பாளர், மொழிப் போராட்ட ஈகையாளர், கவிஞர், இதழியலாளர், இத்தனை சிறப்புகளுக்கும் உரியவரும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவருமான பெருமகனார் மறைந்த பேராசிரியர் சி. இலக்குவனார்…

வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.

வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.   தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. இப்பொருண்மையிலான கருத்தரங்கம், இந்தியத் துணைக்கண்ட மொழிகளுள் முதலில்  தமிழில் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும். முன்னரே உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் போன்ற கணிணி சார் அமைப்புகள் தமிழ் மொழி சார் ஆய்வில் ஈடுபட்டுத் தவறான கருத்துகளை ஊன்ற முயல்வது தவறெனச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், கருத்தரங்கத்தின் முதல்…

திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

1   இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள…